சிறுமழை

இசையலைகள் #2

with 7 comments


2005050415040401எனக்கு பத்து வயதிருக்கையில் பெரிய அக்காவை கடுப்பேற்ற ஒரு எளிய வழி இருந்தது. எஸ்.ஜானகியைப் பற்றி எதாவது குறை சொல்வது! அக்கா உடனடியாக சரணடைந்து விடுவாள். ஒரு நாள் தொடர்ந்து கடுப்பேற்றி, கிட்டதட்ட அழவைத்திருக்கிறேன். அவளை வென்றுவிட்டாலும், ‘இப்படி அபரிதமான ஒரு ரசிப்பாஎன்று ஆச்சரியமாக இருக்கும். அதன் பின்னர் கல்லூரியில் ஒரு நாள் தோழியொருத்தி, ‘உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத பாடகி ஒருவர் உண்டென்றால், அது எஸ்.ஜானகி தான்!’ என்று சொல்ல, ‘என்னது?’ என்று வியப்பிலும் அதிர்ச்சியிலும் எழுந்து நின்றுவிட்டேன். பழைய நிலையிலிருந்து இந்தப் புதிய நிலையை நான் வந்தடைந்த  வழியில் பல நூறு எஸ்.ஜானகியின் பாடல்கள்!

ஜும்பா லாஹிரியின் புத்தகம் ஒன்றின் பின் அட்டையில் இந்தப் புத்தகத்தை படிக்கையில், பக்கத்திலிருப்பவரை பிடித்து இழுத்துஇதைக் கொஞ்சம் படியேன்என்று சொல்லத் தோன்றும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். முதல் மரியாதை திரைப்படத்தில் வருகிற ராசாவே உன்ன நம்பி பாடலை கேட்கையிலெல்லாம் எனக்கு அப்படித்தான் தோன்றும்! ஜானகி ஒரு குயிலின் கச்சிதத்துடன் அந்தப் பாடலின் ஹம்மிங்கை துவங்குவார். உச்சரிப்பில் மணமணக்கும் கிராமியம், பாட்டை சிதைக்காத பாவங்கள் என பிரமாதப்படுத்துகிறவர், ஏற்கனவே அழகான பாடலை ஒரு சுகமான சோகத்தில் முற்றிலுமாக தோய்த்தெடுப்பார். தமிழ் திரையுலகின் பாடகிகளை, இந்த ஒரு பாடலிலேயே மற்றவர்களை அபாரமாக வென்று முன்னேறுவதாக எனக்குத் தோன்றும்.

தாயழுதாளே நீ வர, நீ அழுதாயே தாய் வர என்று பாடுகிற போது அதில் உள்ள சோகமோ, ஆடை கூட பாரமாகும், பாரிஜாதம் ஈரமாகும் என்பதில் உள்ள மெல்லிய மோகமோ, பறவை போல பறந்து பறந்து, படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து என்பதில் தெறிக்கும் பரவசமோ (அந்த வரியை முடிக்கையில் ஒரு சிரிப்பு), சிரிக்கிறான், , ஓஹோ, ரசிக்கிறான் ராஜா என்பதில் உள்ள வெட்கமோ பாவங்களை மிக எளிதாக பாட்டில் நுழைத்தவர் (வெட்கபடத் தெரியாமல் பாரதிராஜாவிடம் அறை வாங்கிய நாயகிகள், ஜானகி குரலில் செய்ததை பாதி செய்தால் போதுமாயிருந்திருக்கும்).

9124சில பாடல்கள் ஜானகிக்கு என்றே விதிக்கப்பட்டவை. நாதம் என் ஜீவனே, காற்றில் எந்தன் கீதம், பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆயிரம் தாமரை மொட்டுக்களே, பாடவா என் பாடலை, ஒரு பூங்காவனம் புதுமணம் எத்தனை பாடல்கள்! ஏற்கனவே மிகச்சிறப்பான பாடலை ஒரு பாடகர் அப்படியே வழிநடத்தி செல்ல முடியும் என்று தேவதை படத்தில் வருகிற ஒரு நாள், அந்த ஒரு நாள் பாடலைக் கேட்கையில் தோன்றும். எண்பதுகளின் நாயகிகளை இவரின் குரல் இன்றி நினைத்துப் பார்ப்பது கடினம்.

வரிகள் இல்லாமலே உங்களை கட்டிப்போடும் வித்தையும் அவருக்குத் தெரியும். ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி பாடலின் துவக்க ஹம்மிங் நினைவில்லாமல் இருக்குமா? மெட்டி  ஒலி காற்றோடு  என் நெஞ்சை தாலாட்ட  பாடலில் ஜானகி துவக்கத்தில், பல்லவிக்குப் பிறகு, சரணத்திற்குப் பிறகு என வெறும் ஹம்மிங்காகவே ஒலிப்பார். வெள்ளைப் புறா ஒன்று பாடலை அவர் துவக்கும் விதத்திற்காகவே பல முறை கேட்பேன். இதயக்கோயில் படத்தில் பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான் என்று ஒரு பாடல் உண்டு (இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்று என்று இதை சொல்வேன் ). அதில் பாதி ஜாமம்ம்ம்ம்ம்ம், காயும் போதும்ம்ம்ம்ம் என்று இழுப்பதெல்லாம் தேன்.

ஜானகியின் குரலில் எளிமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரின் குரலில் உயர்ந்த தரமில்லை என்று நினைத்ததுண்டு. தென்றல் வந்து என்னைத் தொடும் பாடலைக் கேட்கையிலோ, எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா பாடலைக் கேட்கையிலோ, ஜேசுதாஸின் குரல் க்ளாஸ் என்றும் ஜானகியின் குரல் இதற்கு ஈடாகவே முடியாது என்றும் நினைத்த காலமுண்டு. இப்போது கேட்கையில், நிலைமை தலைகீழ்!

நிறம் மாறும் பச்சோந்திகளுக்கிடையில், குரல் மாறும் பச்சோந்தி ஜானகி. (அவரைத் தாழ்த்தி பேசவில்லை! ) சில்க் ஸ்மிதாவுக்குப் பாடும்போது, பேபி ஷாலினிக்கு பாடும் போது அவர் எத்தனை எளிதாக பாடுகிறார் என்பது வியப்பானது. மகளிர் மட்டும் படத்தில் வரும் காள மாடு ஒண்ணு பாடலில் மூன்று விதமான பாத்திரங்களுக்கு அவர் பாடியிருப்பார்.  ஆண் குரலில் பாடியிருப்பதாகக் கூட படித்ததுண்டு! இத்தனை பாவங்களுடன் ஒரு பாடகி இனி வரவியலாது.

இளையராஜாவிடம் ஜானகிக்கு அடுத்தபடியாக அதிகமாக பாடிய சித்ராவும், சில பாடல்களே பாடினாலும் ஜென்ஸி, உமா ரமணன், ஷைலஜா எனப் பலர் மனதில் நின்றாலும், எண்ணற்ற பாடல்களில் ராஜா இசைத்த வயலினைப் போல கச்சிதமாக கலந்து போனவர் எஸ்.ஜானகி. (எஸ்.பி.பியைப் போல!) அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

Written by sirumazai

ஜூன் 24, 2009 இல் 4:14 பிப

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. ஜானகி ஒரு தேர்ந்த பாடகி என்பதிலும் பெரும் சாதனைகள் செய்தவர் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் கொஞ்சம் வயதான பிறகு குரலில் ஒரு ‘கீச்’ வந்து கர்ண கொடூரமாக சில இடங்களில் ஒலிக்கத் தொடங்கியது. அப்படி இருந்தும் தொடர்ந்து ஜானகியை நிறைய பாடல்கள் பாடவைத்தமைக்காக இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் அவர்மீது வருத்தப்படுகின்றனர்… அதில் நானும் ஒருவன்!

  2. i totally second the person above… S janaki’s voice changed in quality somewhere along the late eighties and became quite shrill.. Anegama college la andha comment sonadhu naana kooda irukalam nu nenaikraen 😛 😛
    naane avangaloda sila pala paadalgala imitate panni kaithattal vaangi irukraen 😀 No doubt a great singer, but over used beyond age,IMHO 🙂

    Amilie

    ஜூன் 25, 2009 at 3:51 பிப

  3. nice post.
    I’m a die hard fan of Raja. He is immortal. No one can take his place. Half way thru ur post, I started listening to kannan vandhu. Awesome.
    few of my all time fav songs(not just Janaki’s) – poo mallaiye from pagal nilavu, Etho mogam from kozhi koovudhu, endha poovilum vaasam undu from muratu kaalai.
    There are so many other songs. Guess I should post a separate blog entry

    leovidya

    ஜூலை 22, 2009 at 6:55 முப

  4. one more.. oru kili uruguthu 🙂

    leovidya

    ஜூலை 22, 2009 at 6:58 முப

  5. சாணக்கியன் / Amelie – உங்கள் கருத்தை மறுக்கவில்லை. இந்த சங்கடங்களையும் மீறீயது அவரின் சாதனைகள் என்றே நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

    Vidya – Thanks for visiting. ‘Oru kiLi urugudhu’ is a gem. Love both the voices.

    aravind

    ஜூலை 28, 2009 at 6:08 பிப

  6. My pleasure Aravind.
    I too have a blog now.
    Do visit sometime.
    I also have a cookery blog 😀

    Sree Vidya

    ஜூலை 30, 2009 at 6:11 முப

  7. Euphoria… Thanks for recollecting the best of S.Janaki amma…


பின்னூட்டமொன்றை இடுக