Posts Tagged ‘காமெடி’
தாரே ஜமீன் பர்
அமீர் கான் தமிழ்ல “தாரே ஸமீன் பர்” படத்த தயாரிக்கப் போறதா நியூஸ் வருது. இதுக்காக முண்ணனி இயக்குனர்கள் கிட்ட பேசறதுக்காக ஒரு மீட்டிங் வெக்கறாரு. அதுல ஷாருக் கான், சல்மான் கான், அவரோட நாய், ப்ளாக், இம்ரான் கான் எல்லார பத்தி பேசி முடிச்சுட்டு டைரக்டர்ஸ் எல்லாரும் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால கதையோட ஒன் லைன் சொல்றாரு – “பையனுக்கு எழுத்தெல்லாம் ஆடுது” .உடனே டைட்டில் வெச்சு பிரமாதமா கதை பிடிக்கிறாங்க.
டிஸ்லெக்ஸியன் (ஷங்கர்):
விக்ரமோட தங்கச்சிக்கு டிஸ்லெக்ஸியா. ரெண்டு பேரும் ரிக் ஷால வரும் போது, தங்கச்சி எழுதின எழுத்து ஆடோ ஆடுனு ஆடி, ரிக் ஷாவும் ஆடி(க்ராஃபிக்ஸ் ப்ளீஸ்) கீழே விழுந்து ஷாக் அடிச்சு செத்து போயிடறா. விக்ரம் மனசுல ஒரே குஷ்டமப்பா. மல்டிபிள் பெர்ஸ்னாலிட்டி டிஸார்டர் மகுடி வாசிக்க, டிஸ்லெக்ஸியாவ புறக்கணிக்கவங்கள எல்லாம் லிஸ்ட் போட்டு கொல்றாரு. பக்கத்து வீட்டு சதாவோட லவ் வேற. “அய்யங்காரு வீட்டு அக்கண்ணா”னு ரெண்டு பேரும் பிரம்மாண்ட பிரம்மாண்ட “ஆ” “இ” “உ” வோட டூயட் எல்லாம் பாடி முடிக்க, டாக்டர் நாசர் விக்ரமுக்கு டிஸ்லெக்ஸியானு சொல்றாரு. டாக்டருக்கு படிக்கிற சதா “அப்படினா என்ன டாக்டர்? ஆவி மாதிரியா டாக்டர்?”னு கேட்டு பேட்டி எடுக்குறாங்க. கடைசில எல்லா கார்பரேஷன் பைப்லயும் தண்ணி வந்துடுது, பஸ்ல சில்லறை கரெக்டா கொடுக்கறாங்க, கவர்மெண்ட் ஆஃபீஸ்ல எல்லா செக்கும் பாஸ் ஆகுது. சுபம்.
அ ஆ (அநியாயத்துக்கு ஆடுது) (எஸ்.ஜே.சூர்யா):
குட்வில் க்ளாமர் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல நமீதா தான் ப்ரின்ஸிபல். மாளவிகா டீச்சர். மும்தாஜ் ஆயா. எஸ்.ஜே.சூர்யா பகல்ல சின்ன பையனா ஸ்கூல்ல படிக்கிறாரு. நைட்ல சிம்ரனோட டான்ஸ் ஆடறாரு. சின்ன பையனுக்கு டிஸ்லெக்ஸியா. ஆடுது ஆனா ஆடலனு ஒரே டார்ச்சர். அம்மா தேவயானி திக்கி திக்கி அழறாங்க. கடைசில ப்ரின்ஸிபல், டீச்சர், ஆயா எல்லாம் சேந்து பையனுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வெக்கறாங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்ல? “தொட்டால் அ அலறும் தொடாமல் உ உறுமும்” பாட்டும், “காலையில் தினமும் கண் விழித்தால் எழுத்து ஆடும் சும்மா, அன்பென்றாலே அம்மா” பாட்டும் பயங்கர ஹிட் ஆகும்.
Calligraph (சேரன்):
இது செண்டிமெண்ட் ஆட்டம். சேரனோட அப்பா கஷ்டப்படறாரு. அம்மா கஷ்டபடறாங்க. அண்ணன் கஷ்டப்படறாரு. அக்கா கஷ்டப்படறாங்க. ஒரே கஷ்டம். நமக்கும் தான். சேரன் அழறாரு. பத்மபிரியா அழறாங்க. அப்பாவி அப்பா, அவருக்கு தான் டிஸ்லெக்ஸியா. பசங்கள கஷ்டப்பட்டு படிக்க வெச்சா அவங்க எழுதறத பாக்க முடியாம அப்பா துடிக்கிறாரு. “அவரவர் எழுத்தில் ஆயிரம் ஆயிரம் ஆட்டங்கள்” பாட்டு பேக்ரவுண்ட்ல பாட, சேரன் விதம் விதமா எழுதிகாட்டறாரு, ஆனா டிஸ்லெக்ஸியா பத்தி தெரியாம எல்லாரும் கஷ்டபடறாங்க. சாகறதுகுள்ள எப்படியாச்சும் பசங்களோட எழுத்த ஆடாம பாக்கணும்னு ஆசப்படறது தப்பா? கஷ்டபடறாங்க. அவ்ளோ தான். இன்னும் என்னும் வேணும்? கடைசில சேரன் அவங்க அப்பா பேர்ல “மாவட்ட டிஸ்லெக்சியா மறுவாழ்வு மையம்” துவக்கறாரு. 4 ½ ஹவர்ஸ் மூவி.
தாரே ‘ஜமீன்’ பர்: (கே.எஸ்.ரவிக்குமார்)
பரம்பரையிலயே யாருக்கும் இல்லாத எழுத்து ஆடற வியாதி சின்ன சரத்குமாருக்கு இருக்கிறது தெரிஞ்சதும் பொங்கி எழற விஜயகுமார் “ஊட்ட உட்டுபோட்டு ஒடற காதல் பண்ற பொண்ணும் பேப்பர உட்டு போட்டு ஆடற எழுத்த எழுதற பையனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லனு” திட்டி ஆச்சியோட அவர ஊர விட்டு ஒதுக்கி வெச்சிட்டு ஹார்ட் அட்டாக் ல அம்பேல். விஜயகுமார் “எண்றா”னா 1,2,3 னு எண்ணிபுடற இன்னொரு அண்ணன் சரத்குமார், அந்த தீர்ப்ப அப்படியே கொடி பிடிக்க, ஆச்சி கோயில்ல குடத்தோட உருள்றாங்க, நெஞ்சுல அடிச்சுட்டு அழு அழுனு அழறாங்க. குஷ்பூ, மீனா எல்லாம் குடும்பஸ்திரியா கம்முனு இருக்காங்க. பொன்னம்பலம், தம்பி சரத்குமார் கிட்ட உன் பரம்பரையே ஆடற கூத்து பரம்பர தானேனு சொல்லிபுட, ஒரே சண்ட மண்ட. கடைசில எல்லாரும் ஒண்ணு சேந்தப்புறம் சுபம்.
உன்னிடத்தில் Penஐ கொடுத்தேன்: (விக்ரமன்)
ரோஜாக்கு டிஸ்லெக்ஸியா. அப்பா யாருன்னு அம்மா சாகும் போது தான் தெரியுது. சித்தி கொடும தாங்காம தவிக்கிறப்ப கார்த்திக் ஹெல்ப் பண்றாரு – ஒரு Pen வாங்கி கொடுக்குறாரு. அத கெட்டியா பிடிச்சு எழுதி எழுதி ஒரே பாட்டுல எல்லாம் சரியாய்டுது. நடுல அஜித் ஃபாரின்லேர்ந்து ஃபவுண்டைன் பென் வாங்கிட்டு வரசொன்னதுக்கே ஆறு மாசம் யோசிக்க (ஃபவுண்டென் பென்னே ஃப்வுண்டென் பென்னே பார்த்தாயா), பால்பாயிண்ட் பென்னா இருந்தாலும் பாந்தமா இருக்கும்னு கார்த்திக்கையே கல்யாணம் பண்ணிக்கிறதா ஏதோ ஒரு மேடையில அழுதுகிட்டே அறிவிக்கிறாங்க. விக்ரமன் ஸ்பெஷல் வியாக்கியானங்கள் ஏராளம் – “எழுத்துங்கறது எறும்பு மாதிரி இருந்தா நமக்கு மட்டும் தான் தெரியும். எருமை மாதிரி இருந்தா ஊருக்கே தெரியும்” “படிப்புங்கிறது பல்லு மாதிரி – தேக்க தேக்க தான் விளங்கும்”. தனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தால எஸ்.ஏ.ராஜ்குமார் பிண்ணனி இசையில தா’லா’ட்டுறாரு.
அமீர் கான் – ஆர் யு ரெடி?
Socks relief 2007
ரொம்பவே பிரபலமான “தமிழன்” “இமயம்” “ராஜ் டிஜிட்டல் பிளஸ்” சேனல்கள்ல வெயில் கொளுத்துற மதியானத்துல ஒரு ப்ரோக்ராம் வரும் பாத்திருக்கீங்களா? அரைகுறை ட்ரெஸ்ல அஞ்சாறு வெள்ளக்காரன்/காரி எதேதோ எக்ஸர்சைஸ் மிஷின வெச்சிகிட்டு மிதிக்கிறாங்க, ஓடுறாங்க, ஆடுறாங்க… ஒவ்வொண்ணும் பயங்கற உப்யோகமான பொருட்கள்… அதுவும் அவங்க பேசற தமிழ் இருக்கே, யப்பா! புல்லரிக்குது நினச்சாலே அத நான் இப்போ!
அவங்களோட பொருட்கள், விளம்பர யுத்தி இதெல்லாம் ரொம்ப பிடிச்சு போய் நான் அவங்க கிரியேட்டிவ் டீம்ல சேரலாம்னு இருக்கேன். அதுக்கு ஒரு ட்ரையல் இங்க.
ஒரு பெரிய அரங்கத்துல வேலை வெட்டி இல்லாத நிறைய பேர் உக்காந்திருக்காங்க. நட்ட நடுல சௌகர்யமா உட்காரவே முடியாத ரெண்டு சேர். அதுல ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேருக்கு நடுல நம்ம காம்பியரர் டயானா.
டயானா: வணக்கம். உங்கள சந்தோஷமும் அச்சரயமும் பட வைக்கிற நிறைய பொருட்கள உங்களோட வீட்டுக்கெ அனுப்பி வைக்கிற நாங்க உங்களுக்காக கண்டுபிடிச்சிருக்கிற இன்னொரு பொருள் “Socks releif 2007″. இத பத்தி நான் சொல்றதுக்கு முன்னாடி நம்ம ஸ்டூடியோவுக்கு வந்திருக்க ஸ்டெல்லா அவங்களுக்கு இந்த பொருள் என்னவொரு அற்புதத்த செஞ்சுது சொல்ல ஆசைப்படுவாங்கன்னு நினைக்கிறேன்.
ஸ்டெல்லா: கண்டிப்பா (சிரிப்பு)
டயானா: அப்ப நீங்க நிச்சயம் சொல்லணும் அதோட அற்புதத்த பத்தி
ஸ்டெல்லா: முன்னெல்லாம் என் ஹஸ்பெண்ட் வீட்டுக்கு சாயந்திரம் வரும் போது ரொம்ப ஜாலியா இருப்பாரு. பாக்கவே சந்தோஷமா இருக்கும் எனக்கு. கடவுள் எங்களுக்கு நிறையவே சந்தோஷத்த கொடுத்திருக்காருன்னு நினச்சிப்பேன். அவரு பாட்டெல்லாம் பாடிகிட்டே வருவாரு. சாயந்திரம் அவரு வரும் போது நான் கதவ திறந்ததும் அவரு பாடுவாரு – “இந்தியாவோட தலைநகரம் டில்லி, நீ தாண்டி என்னோட மல்லி” அப்படின்னு
டயானா: ஓ வாவ்! ஹி மஸ் பி வெரி ரொமாண்டிக் (அரங்கமே சிரிக்குது)
ஸ்டெல்லா: ஆமாம் (வெட்கம்). இப்படி சந்தோஷமா இருந்த எங்களோட வாழ்க்கையில ஒரு பிரச்சினை வந்தது. நான் அத எதிர்பார்க்கவே இல்லை. அது எங்கள ரொம்பவே கஷ்டப்படுத்திச்சு.
டயானா: ஓ நோ!
ஸ்டெல்லா: யா டயானா! இவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. மூணு பத்து ரூபாய்க்கு விக்கிற கடையப் பாத்தாலே இவருக்கு மூக்கு வேர்க்க ஆரம்பிச்சிடும். வேண்டாம்னு சொன்னாலும் என் பேச்ச அவரு கேட்கறதே இல்ல. அப்படிதான் ஒரு தடவ விக்கியோட வெக்கேஷனுக்கு நாங்க வெனிசுலா போயிருந்தப்போ அங்க மூணு பத்து ரூபாய்க்கு வித்திட்டு இருந்த சாக்ஸ் வாங்கினாரு. அதுல போட்டிருந்த ரெட் கலர் எம்ப்ராய்ட்ரி பூ எனக்கு பிடிக்கவே இல்ல. இருந்தும் அவரு வாங்கிட்டாரு. அத தான் ஆஃபீஸ்க்கு போட்டுட்டு போக ஆரம்பிச்சாரு. அப்போத்திலேர்ந்து தான் பிரச்சினை. சாயந்திரம் வீட்டுக்கு வரும் போது டில்லி மல்லி பாட்டு பாடறத நிறுத்திட்டாரு. ஒரு மாதிரி மூடியா இருந்தாரு. வீட்டுக்குள்ள வந்ததும் ஷூ சாக்ஸ கழட்டிட்டு முழங்கால சொறிய ஆரம்பிச்சிட்டாரு. உங்க வீட்டு சொறி எங்க வீட்டு சொறி இல்ல. நைட் தூக்கத்துல கூட சொறிய ஆரம்பிச்சிட்டாரு. சாக்ஸ் கொஞ்சம் தடிமனா இருந்ததால அப்படி ஆயிடுச்சு. இது எல்லாருக்கும் வர பிரச்சினை தான். இருந்தும் எனக்கு கவலையா இருந்தது.
டயானா: சோ சேட் ஸ்டெல்லா. கொஞ்சம் சீக்கிரம் மேட்டருக்கு வாங்க.
ஸ்டெல்லா: யா டயானா நிச்சயமா! டீ.வி. ல வர உங்க ப்ரோக்ராம நான் பாக்கவே மாட்டேன். அது ஒரு மாதிரி போரடிக்கும். சாக்ஸ் போடாமலே சொறியனும் போல இருக்கும் உங்க ப்ரோக்ராம் பாத்தா (அரங்கத்தில் சிரிப்பு). ஒரு தடவ ரிமோட் ரிப்பேர் ஆகி ஒரு சேனல்ல டீ.வி நின்னுடுச்சு. அதுல உங்க ப்ரோக்ராம் போட்டப்ப வேற வழியில்லாம பாத்தேன். அதுல தான் இந்த Socks relief 2007 பாத்தேன். இட்ஸ் இண்டீண்ட் எ பூண் வார் யஸ்! அதிசயமா இருந்தது அத பாக்கும் போது
டயானா: தாங்க்ஸ் ஸ்டெல்லா. ரொம்ப போர் அடிக்குது உங்க கதை எனக்கு. இப்போ நம்ம நான்ஸிய கேட்கலாம். பாவம் அவங்களும் ஸ்டூடியோக்கு வந்திருக்காங்க இல்லியா?
நான்ஸி: தாங்க்ஸ் டயானா, முன்னெல்லாம்..
டயானா: ஓ நோ நான்ஸி, வியூவர்ஸ் சேனல மாத்திடுவாங்க. கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க
நான்ஸி: கண்டிப்பா டயானா. எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு சுருக்கமா பேசத் தெரியாதவங்க அடிக்கடி ரயில தவர விட்டுடுவாங்கன்னு…
டயானா: ஹா ஹா ஹா
நான்ஸி: யா, ஜேம்ஸும் நானும் அடிக்கடி பார்க்ல சந்திப்போம். நிறைய பேசுவோம். எங்கள சுத்தி நிறைய லவ்வர்ஸ் இருப்பாங்க. சில மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நாங்களும் அவங்கள மாதிரி சந்தோஷமா தான் இருந்தோம். எப்போ ஜேம்ஸுக்கு இனாமா வந்த சாக்ஸ அவன் போட ஆரம்பிச்சானோ அப்போ வந்தது பிரச்சினை. பார்க் வந்ததும் அவன் முழங்கால சொறிய ஆரம்பிச்சிடுவான். எனக்கு எம்பேரஸிங்கா இருக்கும். அடிக்கடி சண்டை கூட வரும். நான் சொல்லுவேன் இப்படி “ஜேம்ஸ் நீ என்ன சொறிஞ்சா கூட பரவாயில்ல! இங்க வந்து நீ உன்னையே சொறிஞ்சிட்டிருந்தா எப்படி?”
டயானா: யூ ர் நாட்டி நான்ஸி
நான்ஸி: ஹா ஹா, அதுக்கு ஜேம்ஸ் சொல்லுவான் ” டியர் உனக்கு அரிச்சா கூட நான் உன்ன சொறிய மாட்டேன். என்னையே சொறிஞ்சுக்குவேன். ஏன்னா உனக்கு வலிக்கும்” அப்படின்னு
டயானா: நோ கமெண்ட்ஸ் நான்ஸி
நான்ஸி: அப்புறம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டணும்னு நான் போகாத டாக்டர் இல்ல. யூஸ் பண்ணாத மருந்து இல்ல. ஆனா எங்க கெட்ட விதி அது சரியாகவே இல்ல. நான் சொல்லுவேன் ஜேம்ஸ் கிட்ட “எப்படி உங்க அம்மா எனக்கு எரிச்சல் அந்த மாதிரி உனக்கு இது”னு.
டயானா வாட்சை பார்க்கிறார்.
நான்ஸி: அப்போ தான் உங்க ப்ரோக்ராம் பாத்தேன். வாவ்! இட்ஸ் அ மிராக்கள்! இத வாங்கி சும்மா கைல வெச்சி பாத்தா போதும்! எரிச்சல் சரியாய்டும்! என்னால நம்பவே முடில. ஜேம்ஸ் அப்புறம் சொறியறதே இல்ல. இதோட விலை வெறும்..
டயானா: அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன் நான்ஸி. இந்த மேஜிக் ரிலீஃப் பத்தி கேட்டீங்க இல்ல! இத வாங்கி யாருக்கு அரிக்குதோ அவங்க கைல குடுங்க. அவங்க இத ரெண்டு தடவ உத்து பாத்தா போதும். ரெண்டே நாள்ல சரியாய்டும். ஆனா ஒண்ணு, இது வேலை செய்யணும்னா நீங்க அதுக்கப்புற சாக்ஸ் போடறதயே நிறுத்திடனும். அப்ப தான் ஃபுல் எஃபெக்ட் கிடைக்கும்!
பார்வையாளர்கள்ல ஒரு பாட்டி: இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இது ரொம்ப சிறப்பா இருக்கும்னு நான் நினைக்கிறேன். ஸ்டீபன் இத கேட்ட சொல்லுவார் “வாவ்!”
டயானா: இன்னுமும் ஏன் யோசிக்கிறிங்க. உடனே எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க 1800 800 123 453 8764. ஆர்டர் பண்ணுங்க Socks relief 2007. இதோட விலை வெறும் பிஸாத்து 4999 மட்டும் தான்.
அரங்கமே கை தட்ட காமிரா அப்படியே டயானா கிட்டேர்ந்த ஸூம் அவுட் ஆகுது
சொல்லுங்க! நான் கிரியேட்டிவ் டீம்ல சேரலாம் தானே?
ஹி ஹி – 2
பக்கம் பக்கமா வசனம் பேச பிடிக்காத தமிழ் சினிமா காரெக்டரே இல்ல. இருந்தாலும், நடுவுல கொஞ்சம் வசனத்த குறச்சுட்டு, விஷுவலா சில விஷயங்கள சொல்ல ஆரம்பிச்சாங்க. சில பேர் சிம்பாலிசம் யூஸ் பண்ணாங்க. எல்லா நல்லா தான் இருக்கும். ஆனா, அதுக்காக எல்லா சினிமாலயும் ஒரு காலத்துல இதே சிம்பாலிஸம்ஸ் யூஸ் பண்ணி கழுத்தறுத்தாங்க! துணிய ஒரு லிமிட்டுக்கு மேல அடிச்சு தோச்சா கிழிஞ்சிரும்!! சரி, அப்படி சில சிம்பாலிஸம்ஸ் என்னன்னு பாப்போமா……
ரெயில்வே ட்ராக் சேர்றது / பிரியறது :
ஏதோ மனஸ்தாபம் ரெண்டு பேர் பிரியறாங்க. விட்டுத் தொலைய வேண்டியது தானே. இதுக்காக எக்மோர் போய், பெர்மிஷன்லாம் வாங்கி, ஒரு நாள் முழுக்க ட்ராக்க சேத்து பிரிச்சு ஷாட் ஷாட்டா எடுத்து… ஏன் சார் ஏன்?? க்ளைமாக்ஸ்ல வேற வழி இல்லாம அதே ஜோடி சேரும் போது அதே ட்ராக் அப்படியே சேரும். இப்படி காமிச்சா நிஜமாவே அவங்க சேந்தா என்ன எஃபெக்ட் கிடைக்குமோ அது கிடைக்கும் அப்படிங்கிறது கோடம்பாக்க ஐதீகம்.
கை கழுவறது :
குடும்ப தலைவர் சாப்டுட்டு இருப்பார். தலைவி பறிமாறுவாங்க. குழம்பு ஊத்தும்போது ஒண்ணும் கேட்க மாட்டாங்க. ரசம் ஊத்தும்போது கூட ஒண்ணும் பேச மாட்டாங்க. அவர சாப்பிட்டு முடிச்சதும் அவர்ட “அப்போ, அந்த கல்யாணம்?” அப்படினு சீரியஸா எதாவது கேப்பாங்க. உடனே அவர் அந்த அம்மாவ ஒரு லுக் விட்டுட்டு, தட்டுலயே கை கழுவிடுவாரு. க்ளோசப்ல கை நல்லா கழுவுறாரான்னு நம்மளுக்கு வேற காட்டுவாங்க. கை கழுவலனா நாறிடுமே அப்படிங்கிற நல்லெண்ணத்துல அவர் கை கழுவினா கூட, அந்த அம்மா, “அவ்ளோ தான்! இந்தக் கல்யாணம் நடக்காது” அப்படினு நினைச்சிப்பாங்க!
கடல் சீறும் / காத்து வீசும் / பறவையெல்லாம் ஃப்ரீஸ் ஆய்டும்! :
இது எல்லா படத்துலயும் வரும். அதிர்ச்சிய காட்டணும்கிறது தான் அப்ஜெக்டிவ். கடல் கொந்தளிக்கும். மரமெல்லாம் பேய் மாதிரி ஆடும். தேமேனு பறந்திட்டிருக்க பறவையெல்லாம் அப்படியே நின்னுடும். அப்படியே பாக்கிறவங்களும் உறைஞ்சு போய்டுவாங்களாம்!! சில சோம்பேறி டைரக்டர்ஸ், வேற கடல், வேற காத்து, வேற பறவை கூட்டம்னு கூட ட்ரை பண்ணாம, பழைய படத்துலேர்ந்து அந்த ஸீன அப்படியே சுட்டு போட்டிருவாங்க. “கலைஞரின் கண்ணம்மா” படத்துல இதோட உச்சகட்ட கிரியேட்டிவிட்டி நடந்துது. மீனாவுக்கு நினைவு திரும்ப போது சுனாமியே வந்துடுச்சு!! இன்னாது? மீனா யார்னே ஞாபகம் இல்லையா?? ஃப்ரீஸ் பண்ணுங்கடா எல்லாத்தையும்!!
பூவும் பூவும் கிஸ் பண்ணிக்கறது:
பாவப்பட்ட ரெண்டு அஸ்ஸோஷியேட் டைரக்டர்ஸ் ரெண்டு பூவ புடிச்சிகிட்டு, காமிரால தலை காட்டாம குனிஞ்சு ஒளிஞ்சு நின்னு, டைரக்டர் டேக் சொன்னதும், அந்த ரெண்டு பூவயும் அப்படியே அலேக்கா திருப்பி கிஸ் பண்ணவெப்பாங்க. சூர்யகாந்தி பூவா இருந்தா நல்லது. அட அட! என்ன ஒரு கிரியேட்டிவிட்டி(பாரதிராஜா?????). ஹீரோ ஹீரோயின் கிஸ் பண்ணி தொலச்சாக் கூட வெட்டித் தொலையலாம், இந்தக் கொடுமைய என்ன பண்றதுனு சென்ஸார்ல ரொம்ப நாள் யோசிச்சிருப்பாங்கனு நினைக்க்கிறேன். எத்தனை குழந்தைங்க “ஏம்மா பூவும் பூவும் முட்டிகிது“னு கேட்டுச்சுங்களோ! இதுல அடுத்த ஸ்டெப் வேற ஒண்ணு கண்டுபிடிச்சாங்க. ஹீரோவும் ஹீரோயினும் பாட்டு பாடிகிட்டே ஒரு புதருக்குள்ள போய்டுவாங்க. அப்படியே கையால ரெண்டு பேரும் அந்த புதர உலுக்கு உலுக்குன்னு உலுக்குவாங்க!! ச்சீ ச்சீ!!
சக்கரம் சுழல்றது:
“கால சக்கரம் சுழன்றது” அப்படினு யாரோ ரூம் போட்டு யோசிச்சு எழுதிட்டாங்க. அத காட்றோம்னு ஒவ்வொருத்தரும் நம்மள எப்படியெல்லாம் கொடும படுத்தினாங்க. சைக்கிள் சக்கரத்துல ஆரம்பிச்சு டெய்லரிங் மிஷின் சக்கரம் வரைக்கும் ஒண்ண விடாம சும்மா சுத்து சுத்துனு சுத்த விட்டாங்க. சில டைரக்டர்ஸ் இத விட்டுட்டு, ஒரு செடிய நட்டு ஒரு சின்ன பையன தண்ணி விடச் சொல்லி எடுத்துட்டு, கட் பண்ணி, மன சாட்சியே இல்லாம அந்த செடிய புடிங்கிட்டு, அதே இடத்துல ஒரு பெரிய செடி வெச்சு, பெரிய ஆளா ஒருத்தர தண்ணி ஊத்த வெச்சு (அப்பா, மூச்சு முட்டுதே), அதன் மூலமா சிம்பாலிக்கா சில பல வருஷம் ஆய்டுச்சுன்னு காட்டி புரட்சி பண்ணாங்க!
புருஷன் செத்து போறது: தாலி, பூ, குங்குமம். இது மூணும் தான் டார்கெட். புகுந்து விளயாடினாங்க எல்லாரும். அதுவும் குங்குமத்த எப்படியெல்லாம் தற்செயலா அழிக்கலாம்னு ஒரு பெரிய ரிசர்ச்சே பண்ணாங்க. ஒழுங்கா மாட்டி வைக்காத கல்யாண ஃபோட்டோ விழுந்ததன் காரணமா அப்பாவி புருஷன்கள் நிறைய பேரு செத்திருக்காங்க. இந்த சிம்பாலிஸத்தின் விளைவு? கணவன் இறந்ததும் மனைவிக்கு ஃபிரீயா டெலிபதி தந்தி வந்துடும். அப்ப கூட, அடுத்த ஸீன்ல யாராச்சும் அழுதுகிட்டே “உங்க புருஷன் செத்திட்டாருமா” அப்படினு ஓவர் ஆக்ட் பண்ணி சொல்லும் போது, “எனக்கு ஏற்கனவே தெரியுமே” அப்படினு அதிகப்பிரசங்கித்தனமா சொல்ல மாட்டாங்க. எதிர்பாராம இப்படி நடந்துடுச்சேனு “ஓ“னு அழுவாங்க.“சரி போதும்“னு நீங்க சாதரணமா சொன்னாலே எனக்குப் புரியும். சிம்பாலிஸம்லாம் வேணாம்
சொசுறு : முந்தைய ஹி ஹி : 1