சிறுமழை

கடைசி பக்கங்கள்
கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே வருகையில் காயத்ரி எங்களைப் பார்த்தே விட்டாள். அவளது நெற்றியில் ‘அபாயம்’ என்று எழுதி ஒட்டாதது மட்டுமே குறை. வாயில் டூத் பிரஷ் நுரை நுரையாக குதப்பிக்கொண்டிருந்தது. (இரவிலும் பல் துலக்குவாள். டாக்டரின் மகள்). ஆச்சரியத்தில் அவளது கண்கள் விரிந்தன. நுரை வெளியே வழியாத வரையில் வாயையும் பிளந்து கொண்டாள். ‘எங்க போறீங்க’ என்றாள் சைகையில்.

‘சும்மா. ஸ்டோர்ஸ் வரைக்கும் போயிட்டு வறோம்’.

இன்னும் ஆச்சரியம் விலகவில்லை.

‘அதிசயமா ரெண்டு பேருமா கிளம்பியிருக்கீங்க?’ தாடையை கொஞ்சம் உயர்த்தி கேட்டாள்.

நான் வெறுமனே புன்னகைத்தேன். தாமரை கைகளில் இருந்த ப்ளாஸ்டிக் கவரை வெறுமனே பிடித்தபடி என் அருகே நின்றிருந்தாள் என்றாலும், அதை பிடித்திருந்த விதத்திலேயே அதன் மீது கவனத்தை ஈர்த்தாள். பிரச்சினைகளை வாங்கிக் கட்டி கொள்வதில் அலாதி இஷ்டம் தாமரைக்கு.

‘நாங்க போறோம். மணி எட்டாச்சு. அரை மணி நேரத்துல கேட் மூடிடுவாங்க’. அவசரமாக சொல்லிவிட்டு, தாமரையை இழுத்துக்கொண்டு விடுதிக்கு வெளியே வந்தேன்.கோடைக்கால இரவுக்காற்று இதமாக இருந்தது. ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தவுடனே ஒரே எம்பாக எம்பி எட்டிப்பார்த்தேன். சுமார் முக்கால் கிலோமீட்டர் தாண்டி இருந்த காலேஜ் கேட் இருட்டில் அத்தனை தெளிவாக தெரியவில்லை.’இங்க பாரு தாமர. நீயே ‘இந்த கவர்ல என்ன இருக்குனு கேக்கவே இல்லியே’னு மூஞ்ச வெச்சுக்காத.”நான் சாதாரணமாத்தான் இருக்கேன். சத்தியமா. டென்ஷனாலாம் இல்ல”ம்ம். எதுக்கும் சொன்னேன். சரி, வா வேகமா’இருவரும் விடுவிடுவென நடந்தோம். என் மனம் படபடவென அடித்துக்கொண்டது. மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து ஒரு பாம்பென காலேஜின் அந்தக் கடைசி வரை ஓடும் சாலை அது. ஹாஸ்டல் கதவடைக்கும் நேரம் என்பதால் நிறைய பெண்கள் சுற்றிக்கொண்டிருந்தனர். பையன்களும் இருந்தனர். எவ்வளவு வேகமாக நடந்தும், சாலை மெதுவாகவே பின்னோக்கி கடந்தது போல இருந்தது. எங்கள் பேட்ச் பெண்கள் கும்பல் ஒன்று சாலையை அடைத்தபடி எதிரே வந்துகொண்டிருந்தது. கஷ்டம். தாமரையின் கையில் இருந்து கவரை நான் வாங்கிக்கொண்டேன். அவள் கையில் இருந்தால் பிடுங்கி கூட என்னவென்று பார்த்துவிடுவார்கள்.’அங்க பாரேன்’ – அதற்குள் அந்தக் கும்பலில் இருந்து ஒரு நெட்டைக் கொக்கு எங்களைப் பார்த்து கூவியது. செல்வியாக இருக்கும். உடனே கும்பல் ஒரு ஓ போட்டது. என்ன சொல்வதென கடகடவென ஒத்திகை பார்த்தபடி நடந்தேன். ‘சும்மா கோயிலுக்கு போகிறோம். கடைசி நாளில்லையா. பிள்ளையார் மேல் ஒரு திடீர் பாசம்.’

அப்படியே சொல்லி வைத்தேன். இன்னொரு கும்பல் இப்போது கோயிலில் இருக்கிறதாம். திரும்பி வந்ததும் கீழே வராண்டாவிற்கு சொன்னார்கள். அரட்டை அடிக்க. இது இந்த விடுதியில், இந்த கல்லூரியில், எங்கள் கடைசி இரவு.

கும்பல் எங்களை கடந்த போது, ‘இவங்க ரெண்டு பேரும் எப்போ ராசியானாங்க?’ என்று யாரோ யாரிடம் கேட்டுக்கொள்வது காதில் விழுந்து நெஞ்சில் சுருக்கென்றது. தாமரையை திரும்பிப் பார்த்தேன்.

காலேஜ் கேட்டருகே எதையும் எரிப்பதாக தெரியவில்லை. புகை எதுவும் எழவில்லை. ஒரு வேளை இப்போது தான் ஆரம்பித்திருக்கலாம். இல்லை எரிந்து அணைந்து போயிருக்கலாம். வாயிலை அடையும் வரை ‘இருக்கும், இருக்காது’ என்று எண்ணியபடி இருந்தேன். இல்லை. இன்று குப்பைகளை எரிக்கவில்லை. நாளையோட காலேஜ் லைஃப் முடியுதுல என்று விசாரித்தார் செக்யூரிட்டி.

திரும்பி நடக்கலானோம். எனக்கு சலிப்பாக இருந்தது. தாமரையும் கொஞ்சம் தளர்ந்தது போலிருந்தாள். ‘கோயிலுக்கு போலாமா?’ என்று கேட்டாள். ‘ப்ச்’ என்று மறுத்தேன். ஹாஸ்டலுக்கு திரும்புகையில் கோயிலிலிருந்த மற்றொரு கும்பல் எங்களோடு சேர்ந்துகொண்டது. என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசி நாள் என்பதால், எல்லோருக்கும் என்னென்னவோ பேசத் தோன்றியது. நானும் தாமரையும் அமைதியாக வந்தோம். ஒவ்வொருத்தியும் பேசுகையில், அவர்களோடு சேர்ந்து தாமரையை என்னவெல்லாம் கேலி பேசியிருக்கிறேன் என்று தோன்றியபடி இருந்தது. கேண, கிறுக்கி, அம்மா கோண்டு. பாத்ரூம் போகும் போது கூட டெடிபேர் பொம்மையை கொண்டு போனாலும் போவாள். ஃபர்ஸ்ட் பெஞ்ச், ஆனாலும் ஃபெயில். முதுகெலும்பில்லாதவள். என்னென்னவோ.

‘என்ன தேவி அமைதியாவே வரே?’ என்று யாரோ கேட்ட போது, ஒன்றுமில்லை என்று சொல்லி வைத்தேன்.

சாப்பிட்டு விட்டு நான் மேலே சென்றேன். எல்லோரும் வட்டமாக அமர்ந்திருந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். நான்கு வருடக் கதையின் பக்கங்கள் கிழித்து கிழித்து எறியபட்டன. தாமரை இந்த நண்பர் வட்டத்தில் சேருவதில்லை. அவளுக்கென எந்த நண்பர் வட்டமும் இல்லை.

அறைக்குத் திரும்பிய போது மணி பதினொன்று இருக்கும். அறை திறந்து கிடந்தது. தாமரை அங்கு இல்லை. அந்தக் கவரும் இல்லை. வெளியே வராண்டாவில் போய் பார்த்தேன். கேட்டைத் தாண்டி போயிருக்க வாய்ப்பில்லை. பக்கத்து அறையில் கேட்பது சரியெனத் தோன்றவில்லை. பின்னால் துணி துவைக்கும் அறைகள் நோக்கி நடந்தேன். ஒரே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஒரு கழிவறையிலிருந்து தண்ணீரை ஃப்ளஷ் செய்யும் ஓசைக் கேட்டது. சிறிது நேரம் அங்கேயே நடந்துகொண்டிருந்தேன். தண்ணீர் மட்டும் ஃப்ளஷ் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது.

‘தாமர, உள்ளயா இருக்கே?’

பத்து விநாடிகள் கழித்து ‘இம்’ என்று சத்தம் கேட்டது.

‘வெளியே வா’பதிலில்லை.’வெளில நீ மட்டும் தான் இருக்கியா?’ என்றாள்.’ஆமா’கதவைத் திறந்து மெதுவாக வெளியே வந்தவளின் கையில் டைரி. உள்ளே கழிவறையில் துக்கல் துக்கலாக பேப்பர் கத்தைகள்.’என்ன பண்ணிட்டு இருக்கே? உனக்கு எதுக்கு இந்த வேல எல்லாம்?’ முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு கேட்டேன். அவளை அறைக்கு அழைத்து வந்தேன்.

அன்று மதியம் என் காலேஜ் வாழ்க்கையின் கடைசித் தேர்வை எழுதி முடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கேண்டினில் கும்பலாக அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, தாமரை என்னைத் தேடி வந்தாள். நடையிலும் செய்கைகளிலும் பதற்றம். ‘இப்போ என்ன பண்றது தேவி’ என்று அவள் வழக்கமாக கேட்கும் முக பாவம். கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்கு அழைத்துக்கொண்டு வந்தாள். கதவை தாழிட்டுக் கொண்டு, உள்ளே சூட்கேஸில் இருந்து ஒரு கவரை எடுத்து ‘தேவி, இந்த டைரிய என்ன பண்றது?’ என்று நீட்டினாள்.

அடர்ந்த காபி நிறத்தில், மெத்தென இருந்தது டைரி. ஒரு நாளைக்கு இரு பக்கங்கள் என்பதால், நல்ல கனம். முதல் பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முந்தைய தேதியிட்டு எழுத ஆரம்பித்திருந்தது.

‘என்னதிது?’

தேவி விழித்தாள். புருவங்கள் சங்கடத்தில் இருந்தன. ‘இத நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது தேவி’. உதட்டைக் கடித்தாள்.

‘ஏன்?’

‘கொஞ்சம் உக்காரேன்’. உட்கார்ந்து கேட்டால் மனிதர்களுக்கு கோபம் வராதென தாமரைக்கு ஒரு நம்பிக்கை. அடுத்து அவசரப்படாமல் அவள் சொல்வதை கேட்க சொல்லுவாள். அடுத்து என்ன செய்வதென தெரியாத ஏதோ ஒரு சங்கடம்.

உட்கார்ந்தேன். எதிர்க் கட்டிலில் அவளும் அமர்ந்தாள். ‘இதுல ஹரி பத்தி எல்லாமே எழுதி வெச்சிருக்கேன் தேவி. வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது. அம்மா எடுத்து கண்டிப்பா படிச்சுடுவாங்க. படிச்சா அவ்ளோ தான்’.

என் கையில் இருந்த டைரியைப் பார்த்தேன்.

‘என்னலாம் எழுதியிருக்கே?’

‘எல்லாம். என்னென்னவோ’

முதல் பக்கத்துக்கு மேல் திருப்ப யோசனையாக இருந்தது. ‘பாரு’ என்று அடுத்த நொடியில் சொன்னாள் தாம்ரை. மணி மணியான கையெழுத்தில், பிழைகள் இல்லாத வார்த்தைகள், வரிகளாக, ஒன்றின் கீழ் ஒன்றாக, அச்சடித்தது போல சீராக நிறைந்திருந்தன. வேகமாக புரட்டியதில் கடந்த இரண்டு வருடங்களின் நாட்கள் விரைந்தன.

‘படிச்சுப் பாரு தேவி’

‘இல்ல வேண்டாம். இத என்ன பண்ணனும்?’

‘படிச்சுப் பாரேன் ப்ளீஸ்’.

தாமரையை செய்வதறியாது பார்த்தேன். எழுந்து சென்று மின்விசிறியைப் போட்டு விட்டு வந்தவள், எனக்கெதிராக கிடந்த கட்டிலின் உள்ளே நகர்ந்து சுவற்றில் சாய்ந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவளையும் என்னையும் ஒரே அறையில் போட்டதற்காக வார்டனிடம் சண்டை போட்டு விட்டுத் தோற்றுப் போய், வேறு வழியில்லாமல் என்னுடைய பொருட்களை கொண்டுவந்து அடுக்கிக்கொண்டிருந்த போது, அவள் இதே போன்று அமர்ந்திருந்தாள். அடுத்த ஒரு வருடத்திற்கு இவள் என்னை ஒரு பார்வையாளராகவே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும் என்று நினைத்துக் கொண்டேன். அறையில் இரவுகளில் கூட தங்காமல் வேறு அறைகளில் சுற்றிக்கொண்டிருந்தேன். அவள் அறையில் இல்லாத பொழுதுகளில் அறைக்கு வருவேன். பரிட்சை சமயங்களில் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. அறையின் சாவி மட்டும் அவ்வப்போது எங்கள் இருவருக்கிடையில் இருந்த கதவைத் திறக்கும். மூன்றாம் ஆண்டு முடிந்த பிறகு அறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வந்த போது ஏன் வேண்டாம் என்று சொன்னேன் என்று எனக்கே புரியவில்லை.

உண்மையில் நான் தான் ஒரு பார்வையாளராக மாறியிருந்தேன். எல்லாவற்றிலும் அஜாக்கிரதையாக இருக்கும் அவளை ரகசியமாக கண்காணித்துக்கொண்டிருந்தேன், என்னை அறியாமலே. நேரடியாக எதையும் நினைவு படுத்தாமல் பக்கத்து அறை காயத்ரியிடம் சொல்லி வைப்பேன். எதேச்சையாக நினைவுபடுத்தல், விசாரித்தல், அறைக்கு வருதல் என எல்லா விஷயங்களும் நடந்தது. எனக்கு காய்ச்சல் வந்த போது, அவள் எடுத்துக்கொண்ட பொறுப்பு எனக்கு புன்னகையைத் தந்தது. உடல் மொழியில் அத்தனை படபடப்பு, அத்தனை கவனிப்பு. ஒரு பரிட்சைக்குத் தயாராவது போல என்னைக் கவனிக்க முற்பட்டாள். அவளுக்கு காய்ச்சல் வந்த இரண்டு நாட்கள், அறையில அமைதியாக அமர்ந்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.

எந்த விதப் பற்றும் அவள் மீது இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த போது தான், அவளுக்கு ஹரிக்கும் என்னவோ நடக்கிறது என்றறிந்தேன். அவனைப் பற்றி சம்பந்தமில்லாமல் பேச்சை எடுத்தேன். ‘அவன் ஒரு பொறுக்கி’ என்றேன். லக்ஷ்மியை, ரமணியை அவளிடம் சொல்ல வைத்தேன். எதுவும் வேலை செய்யவில்லை என்றறிந்த போது, ‘தயவு செஞ்சு நான் சொல்றத கேளு, அவன நம்பாதே’ என்று அவளிடம் சொல்வதற்காக முதல் முறை அவளுக்காக அறையில் காத்திருந்தேன். மருண்ட விழிகளோடு சொல்வதை மௌனமாக கேட்டுக்கொண்டே இருப்பாள்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஹரிக்கும் அவளுக்கும் ஏதோ பிரச்சினை எனத் தெரிந்தது. இந்த சந்தர்பத்தை விடக்கூடாது என அவளிடம் தினம் பேச ஆரம்பித்தேன். ஹரி பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தேன். முதல் சில நாட்கள் கலவரத்தோடு கேட்டுக்கொண்டிருந்தவள், அடுத்தடுத்த நாட்களில் அழ ஆரம்பித்தாள். இன்னும் மெதுவாக இதமாக சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு நாள், அவனை மறக்குமாறு சத்தியம் செய்யக் கேட்டேன். அடுத்த நாளில் இருந்து நான் தினமும் இரவில் அறையில் தங்கினேன்.’இன்னிக்கு ஹரி என்ன கிஸ் பண்ணிட்டான்’ என்ற வரி அப்படியே கொக்கி போட்டு என்னை இழுத்தது. டைரியிலிருந்து நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். ‘படிச்சிட்டேன்.’ என்று பொத்தாம் பொதுவாக சொன்னேன்.’இன்னும் படி’ என்றாள்.‘இதுக்கு மேலயுமா?’‘ம்ம்ம்’

அவனோட ஸ்கூல்மேட் வீட்டுக்கு டின்னருக்கு போகலாம்னு சொல்லி என்ன கூட்டிட்டு போனான். ஆனா அது ஆக்சுவலி ஒரு பேச்சிலர்ஸ் ரூம். பூட்டியிருந்தது. சும்மா பேசிட்டு இருக்கலாம்னு சொன்னான். கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தோம். பேசிட்டே இருக்கும் போது திடீர் கிஸ் பண்ண வந்தான். நான் வேண்டாம்னு சொன்னேன். சொல்லியும் அவன் கேக்கல. கம்பெல் பண்ணான். நான் எழுந்து நகர ஆரம்பிச்சேன். ஆனா அவன் ஃபோர்ஸ் பண்ணி என்ன கிஸ் பண்ணிட்டான். எவ்ளொ சொல்லியும் கேக்கல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. திடீர்னு அவன அடிச்சிட்டேன். ஒரு நிமிஷம் பாத்துட்டு என்ன திருப்பி அடிச்சிட்டான். திரும்ப கிஸ் பண்ண வந்தப்ப, அங்கேர்ந்து நான் வந்துட்டேன். இப்ப ரூம்ல யாரும் இல்ல. தேவி இன்னிக்கு நைட்டும் வர மாட்டானு நினைக்கிறேன். எனக்கு சாகணும் போல இருக்கு. வேகமாக அடுத்த பக்கத்தை திருப்பினேன். அடுத்த இரண்டு நாட்களும் எதுவும் எழுதப்படவில்லை. மூன்றாவது நாளிலிருந்து தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு, நான் இல்லாத போது சாவதற்கு அவள் என்னென்ன செய்தாள் என எழுதப்பட்டு இருந்தது. அந்த ஆறு பக்கங்களைப் படிக்க படிக்க எனக்கு உடலே நடுங்க ஆரம்பித்தது.

நான்காவது நாளின் குறிப்பில் முதன் முறையாக அவளுக்காக நான் அறையில் காத்திருந்ததாக ஒரே ஒரு வரி எழுதப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு டைரியில் எதுவும் எழுதப்படவில்லை.

தாமரை டைரியைப் பற்றி மறந்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். ஒரு சின்னப் புன்னகையில் முகம் அழகாக இருந்தது. தாமரை கொள்ளை அழகு. தூங்கும் பொழுது இன்னும் அழகு. கல்லூரிக்கு வந்த முதல் நாள் பற்றி மீண்டும் ஒரு முறை சொல்லி முடித்தாள். கட்டிலில் படுத்தபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘தாமர, இனிமே சாகணும்னு நினைக்காத’ என்றேன் திடீரென்று.

கண்கள் விரிய பார்த்தவள், சட்டென ‘நிச்சயம் மாட்டேன்’ என்றாள்.

‘சாகர அளவுக்கு அவன் ஒண்ணும் நல்லவன் இல்ல. அவன் நல்லவனா இருந்தாலும் நீ சாகத் தேவயில்ல. அப்படி ஒண்ணும் நடக்கல’

‘ம்’

‘தைரியமா இரு. நீ நினைக்கறத விட நீ தைரியசாலி. சும்மா சும்மா பயப்படுறத நிறுத்து. சும்மா சும்மா அழறத நிறுத்து’

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவள், ‘இன்னிக்கெல்லாம் நான் அழவே இல்லியே’ என்றாள்.

அமைதியாக தலையசைத்தேன்.

‘தேவி…’

‘ம்….’ ‘உனக்கு நம்ம காலேஜ்ல யாரையாச்சும் பிடிச்சிருக்கா?”பிடிச்சிருக்கான்னா’ சிரித்தேன்.

‘உனக்கு அருண்னா ரொம்ப இஷ்டம் தானே?’

எனக்கு பக்கென்று இருந்தது. என்ன சொல்வதென்றது தெரியவில்லை. அவள் கட்டில் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டேன். ‘தெரியல’.

‘எனக்குத் தெரியும்.’ என்றாள்

‘ஓ’

‘நீங்க ரெண்டு பேரும் பெர்ஃபெக்ட் ஜோடியா இருப்பீங்க’

‘ம்’

‘ரமணி, லக்ஷ்மி யார் கிட்டயாச்சும் சொல்லிருக்கியா? அவங்க எதாச்சும் பண்ணுவாங்கல?’

‘இல்ல, சொல்லல. அவங்க என்ன பண்ண வேண்டி இருக்கு. எனக்கு வேணும்னா நான் தான் எதாச்சும் பண்ணனும்’

‘எதாச்சும் பண்ணு’.

‘ம்?’

‘நிஜமாத்தான் சொல்றேன். எதாச்சும் பண்ணு. விட்றாத.’

புன்னகைத்தேன்.

எப்போது தூங்கிப்போனேன்று தெரியவில்லை. கனவில் கல்லூரியின் அத்தனை நாட்களும் வந்தது போல இருந்தது. எலக்ட்ரானிக்ஸ் லாபில் வோட்மீட்டரை தட்டிக்கொண்டிருப்பது போல இருந்த போது திடீரென்று கண்விழித்தேன். தாமரை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். மணி அஞ்சரையாகி இருந்தது. கண்கள் எரிந்தன. நிறைய நேரம் பேசி இருந்திருக்கிறோம். எழுந்து அமர்ந்ததும், டைரி ஞாபகம் வர, எழுந்து ஜன்னல் பக்கம் போனேன். எட்டிப் பார்த்ததில், தூரத்தில் கேட் அருகே, புகை குபுகுபுவென மேலெழும்பிக்கொண்டிருந்தது.

அவசர அவசரமாக சுடிதாருக்கு மாறி, கவரை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஏழெட்டு நிமிடத்தில் குப்பை எரிக்கும் இடத்தை அடைந்தேன். சுற்றி நின்றிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்க ஓடிப்போய், கவரை அப்படியே வீசிவிட்டு மூச்சு வாங்கினேன். தலையில் துண்டு சுற்றிகொண்டிருந்தவர், என்னையே வாயை பிளந்துகொண்டு பார்த்தார்.

கையில் எதுவோ ஊர்வது போல இருந்தது. தட்டிவிட்டேன். மீண்டும் ஊர்ந்தது. மீண்டும் தட்டிவிட்டேன். வேகமாக திரும்பிப் படுத்துக்கொண்டேன். முகத்தில் பிரகாசமாக ஒளியடித்தது. முகத்தை மூடிக்கொள்ள ஏதாவது தென்படுகிறதா எனத் தேட முற்பட்ட போது, உள்ளுக்குள் சத்தமாக மணியடித்தது. வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தேன். தாமரை தயாராகி அமர்ந்திருந்தாள். அறை வாசலில் அவளது பெட்டிகள் இருந்தது.

‘ஸாரி, பயந்துட்டியா?. டைரியை நான் எடுத்துட்டு போயி போட்டுட்டேன். நீ நல்லா தூங்கிட்டிருந்தே.டைரிய தேடினியா?’

தாமரையின் முகம் பிரகாசமானது. இல்லையென்று தலையசைத்தாள்.

‘மணி என்னாச்சு?’

‘எட்டு’

‘கிளம்பிட்டியா?’

‘ம்’

‘உடனே போறியா?’

‘ம். பத்து மணிக்கு டிரையின்ல?’

‘ம்’

‘வெளியே வரைக்கும் நானும் வறேன்’

அவசரமாக முகம் கழுவி விட்டு ஒரு பெட்டியை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். எதுவும் பேசாமல் வாயிலை அடைந்தோம்.

‘நைட்டு நிறைய பேசணும்னு நினச்சேன். எப்ப தூங்கினேன்னு தெரியல’

‘ம். நீ போ தேவி. நான் பஸ் ஏறிக்கறேன்.’

‘இல்ல பரவாயில்ல. என்ன பண்ணப் போறேன். போயிட்டு ஃபோன் பண்ணு’

‘ம்…… தாங்க்ஸ்’

‘எதுக்கு’ என்று கேட்க நினைத்து, அமைதியாக புன்னகைத்தேன். தூரத்தில் பஸ் வந்தது. நான் பெட்டியைத் தூக்கிக்கொண்டேன். தாமரை குனிந்து பெட்டியின் ஸிப்பைத் திறந்தாள்.

‘என்னாச்சு?’

ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள், உள்ளிருந்து சில பேப்பர்களை எடுத்து நீட்டினாள்.

‘என்னது?’ வாங்கிப் பார்த்த பொழுது, ‘இன்னிக்கு ஹரி என்ன கிஸ் பண்ணிட்டான்’ என்று வரிகள் தொடங்கியது. டைரியின் கடைசிப் பக்கங்கள்.

‘ஐயோ, இது எப்படி’? பஸ்ஸின் ஹாரன் சத்தம் அருகில் கேட்டது.

‘ஒருவேள டைரிய ஒண்ணும் பண்ண முடியலனா, இத மட்டும் போற வழியல போட்டுட்டலாம்னு நினச்சேன்.’ வெகுளியாக புன்னகைத்தாள். எனக்கும் படபடப்பாக இருந்தது. ‘ஓ, நான் கவனிக்கல.’ திரும்பி கேட்டருகே பார்த்தேன். ‘எரிச்சு முடிச்சிட்டாங்கனு நினைக்கிறேன், நீயே போட்டுடு போற வழியில எங்கயாச்சும்’. வேண்டாம் என்று தலையசைத்தாள். ‘வெச்சுக்கோ. உன் கிட்டயே இருக்கட்டும்…..’

‘ம்?”பத்திரமா…’ என்றாள்.

பஸ் புழுதி பறக்க வந்து நின்றது. என் கண்கள் லேசாக கலங்கின.

‘பை தேவி. கண்டிப்பா மேல படி. அம்மாகிட்ட அடிக்கடி சண்ட போடாதே. ஃபோன் பண்ணு. கிளம்பறேன்’, கடகடவென ஒப்பித்தாள். அவளின் கண்கள் கண்ணீரில் தத்தளிக்கும் படகுகள் போல ஆனது. அவசரமாக கட்டியணைத்துக் கொண்டு விட்டு தாமரை பெட்டியோடு ஏறினாள். இன்னொரு பெட்டியைத் தூக்கி ஏற்றினேன். உள்ளே ஏறி நின்றுத் திரும்பி கையசைத்தாள். கைகளிலிருந்த காகிதங்களை மற்றொரு கைக்கு மாற்றிக்கொண்டு கையசைத்தேன்.

(பின் குறிப்பு: அலுவலகத்தில் நடைபெற்ற One Night short story contestகாக எழுதியது. இரவு எட்டு மணிக்கு தொடங்கி, காலை எட்டு மணிக்கு முடிய வேண்டுமென்ற விதியில் போட்டி நடைபெற்றது.)

புத்தனுடன் சில மௌனங்கள்
நான் உயரத்தில் நின்றிருந்தேன். அது ஒரு மலைக்கோயில். இரவின் மென்குளிரை விலையுயர்ந்த சலவைக் கற்கள் உள்வாங்கி, என் உள்ளங்கால் வழியே சில்லென ஏற்றிக்கொண்டிருந்தது. மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட கோயிலாலதலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் கூட்டத்தில் கலந்திருந்தார்கள். நான் மட்டும் இங்கே மலையின் ஓர் முக்கில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஹைதராபாத் நகரம் கீழே ரத்தினங்கள் பதித்த கம்பளம் போல விரிந்திருந்தது. நெக்லஸ் சாலையின் இரு புறமும் விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தன. விரைவாக நகர்ந்து கொண்டிருந்த வாகனங்களின் ஒளி ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து கலைந்து கரைந்தது. ஒளி கரைவதையே பார்த்துகொண்டிருந்த நான், மெல்ல திரும்பி நடுவில் பிரம்மாண்டமாக வீற்றிருந்த புத்தன் சிலையை பார்த்தேன். புத்தனின் முகம் தெரியவில்லை. இங்கிருந்து சிலையின் உயரம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. இருந்தும், ஒரு நொடியில் புத்தனின் சாந்தமான புன்னகையை உணரத் தொடங்கினேன். மனதையும் முகத்தையும் அந்தப் புன்னகை அப்படியே தொற்றிக்கொண்டது. வாகனங்களின் இரைச்சல், காற்றின் ஒலி, கோயிலில் மக்கள் தனித்தனியாக  ஏற்படுத்தும் ஓசைகள் எல்லாம் சேர்ந்து உருவான பேரிரைச்சல் என எல்லா இடையூறுகளையும் மீறி, கிணற்றில் ஆழத்தில் விழுந்து கிடக்கும் கல்லை பார்ப்பது போல, புத்தனின் புன்னகையை பார்த்துக்கொண்டிருந்தேன்.

நண்பர்கள் திரும்பி வந்தார்கள். வழக்கம் போல ஜோ இந்த இடத்தின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தேன். நூனூறு டன்னுக்கும் மேலான் எடை கொண்ட சிலை. புத்தனின் வடிவம் என் நெஞ்சில் இன்னும் பெரிதாக விரிகிறது. ஏராளமான கற்கள், ஏராளமான வேலையாட்கள். மிகப்பிரம்மாண்டமாக தயாராகி, ஒரு படகில் ஏற்றப்பட்டு, ஒரு பொறியியல் வல்லுனர் மற்றும் நான்கு உதவியாளர்களின் துணையுடன், சிலை பீடத்தை நோக்கி பயணிக்கிறது. புத்தனின் சிலை பீடத்தில் ஏற்றப்படும் பொழுதில், அவரின் புன்னகை காற்றில் வெட்டும் ஆரத்தை எண்ணிப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். படகு பாதி வழியில் கவிழ்ந்து விட்டதாக ஜோ சொல்கிறான். கற்பனைகளை நிறுத்திவிட்டு, அவன் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பாரம் தாங்காமல் படகு கவிழ்கிறது. அது மழைக்காலமா என்று ஜோ சொல்லவில்லை. இருந்தும் நான் என் கற்பனையில் மழையை சேர்த்துக்கொள்கிறேன். படகில் சென்ற ஐந்து பேரும் காணாமல் போகிறார்கள். இரண்டு நாட்கள் தேடும் பணி தொடர்கிறது. பின் ஓர் இடத்தில் சிலையை கண்டுபிடிக்கிறார்கள். ஐந்து பேரும் சிலைக்கடியில் சிக்கி இறந்து போயிருக்கிறார்கள்.

அங்கிருந்து புறப்பட்டதிலிருந்து புத்தனின் புன்னகைக்கு அடியில் அவர்கள் உயிரற்று கிடக்கும் காட்சி நெஞ்சில் ஓடியபடி இருந்தது.

மூன்று வருடங்களுக்கு முன், அம்மாவுக்கு பணி மாற்றத்துடன் இட மாற்றமும் விதிக்கப்பட்டது. தலைமை ஆசிரியராக அம்மா ஆக, எங்கள் எல்லோருக்குமே விருப்பம் தான். ஆனால் இடமாற்றத்தில் எங்களுக்கு ஒப்புதலில்லை. முன் பின் தெரியாத தென் தமிழக டவுன் அது. தற்போது குடியிருந்த ஊர், அம்மா பிறந்த இடம். நிறைய நண்பர்கள், உறவினர்கள். அக்காக்களும் நானும் சென்னையில் தங்கியிருந்ததால், அம்மாவை இந்த ஊரை விட்டு எங்கும் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றோம். இட மாற்றத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் ஒரு நாள் அவகாசமே இருந்த சமயத்தில், அம்மா எங்களிடம் சொல்லாமல் போய் சேர்ந்து விட்டார். ஏறத்தாழ அடுத்த ஒரு வருடத்திற்கு நாங்கள் நால்வரும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியே வசித்துக்கொண்டிருந்தோம். வீடு தனியே வசித்துக்கொண்டிருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை நானும் அம்மாவும் வீட்டுக்கு வருவோம். வீடு திறந்து, அறைகள் ஜன்னல்கள் திறந்து, தூசு தட்டி, வெறுமையை எதிரொலித்துக்கொண்டிருந்த வீட்டின் காற்று மண்டலத்தின் எங்கள் குரலை கரைத்தோம். தண்ணீரின் சுவை மாறிப்போனது போல இருந்தது. எவ்வளவு சுத்தப்படுத்தியும் துடைத்தும், வீடு அந்நியமாகவே இருந்தது. விடுதியிலிருந்து மாதம் இரண்டு முறை வீடு திரும்பும் போது அம்மாவிடம் என்னென்ன பேசுவேனோ, எப்படியெல்லாம் கவனிப்பேனோ, அப்படியே வீட்டையும் கவனிக்கத் தொடங்கினேன். அம்மாவுடனும் வீட்டுடனும் நெருங்கிய காலம் அது.

நான் வீட்டுக்குள்ளேயே தாழப் பறக்கும் பறவை. என் வாழ்க்கையின் பாதிக்கும் மேலான பொழுதுகளில் அது தன்னுள் என்னைக் கொண்டிருந்தது. வீட்டை விட்டு நான் வெளியே இருந்த பொழுதுகளில் நான் வீட்டை என்னுள் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்த நாள் முதல், இது வரை நான் இரண்டு வீடுகளில் இருந்திருக்கிறேன். இரண்டும் ஒன்று போலிருக்கும். மூன்று ரயில் பெட்டிகளை இணைத்தது போல. ஒரு பெட்டியின் வாசல் தான் வீட்டு வாயில். முதல் வீட்டின் நினைவுகள் அத்தனை இல்லை. இரண்டாம் வீட்டில் தான் நான் பெரும்பாலும் வளர்ந்தேன். ஒரு மொட்டை மாடியின் பாதியை அந்த கான்க்ரீட் ரயில் பெட்டிகள் அடைத்திருந்தன. இன்னொரு பாதி திறந்த மாடியாகவே கிடந்தது. ஒரு கால் எடுத்து வைத்தால் வீடோ, வானமோ. என் படுக்கைக்கு நேராக இருக்கும் ஜன்னல் வழியே மதியப்பொழுதுகளில் வரும் வெயிலும், சில மாதங்களில் இரவு தோறும் வரும் நிலவும் தான் வீடு எனக்கு நிர்ணயித்த வானிலை. சாய்ந்து நின்று பேச ஏதுவாக தொலைபேசி ஒரு முக்கில் இருக்கும். எறும்பு ஊரும் வழிகள் மனப்பாடம்.  உள்ளறையில் குறுக்கே என்னுயரத்திற்கு கட்டபட்ட கொடிக்கயிறும் அனிச்சையாக குனியும் என் கழுத்தும் எப்போதிலிருந்து சினேகம் கொண்டன என நினைவில்லை. என் மேஜை, படுக்கையறைக்கு வீடு அமைத்து தந்திருந்த இளமிருட்டு, ஜன்னல் வழியே கேட்டுக்கொண்டிருக்கும் பின் வீட்டு துணிகள் துவைக்கப்படும் சப்தம், கோடைக்காலத்தில் நான் மட்டும் தனியே கழித்த பொழுதுகள் என நினைவுகள் ஏராளம். என்னுயரத்தில் நின்று, முகமளவே இருக்கும் அலமாரியினுள் பதித்தது போல நிற்கும் கண்ணாடியில் கடக்கும் போதெல்லாம் எப்போதும் என் முகம் தெரியும். அந்தக் காட்சியிலிருந்து என் முகத்தை எப்படி பிரித்தறிய முடியாதோ, அப்படியே அந்த வீட்டையும் என்னிடமிருந்து பிரித்தறிய முடியாது.

விடுதியில் சேர்ந்த முதல் வாரம் என்னவோ ஆகி விட்டது. யாராவது தலை வலிக்கிறதோ என்று கேட்டால், தலை வலிப்பது போல இருந்தது. வயிற்று வலியா என்றால் வயிறு வலித்தது. உடம்புக்கு எல்லாம் வந்து விட்டது போல இருக்கும். ஏதுமில்லாதது போலவும் இருக்கும். நான்கு நாட்கள் கழிந்ததும், ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வண்டி ஏறிவிட்டேன். நான்கு மணி நேரம் வீட்டை நோக்கி பயணிக்கையில் தலை வலி, வயிற்று வலி, உடல் வலி என ஒவ்வொன்றாக உடலிலிருந்து கழன்று விழுந்து கொண்டே இருந்தது. யாருமில்லாத வீட்டைத் திறந்த அடைந்த நேரம், உடமும் மனமும் ஜிவ்வென்று இருந்தது. வீட்டில் யாருமில்லாதது கூட குறையாகத் தெரியவில்லை. நான் எப்போது சரிந்து கிடப்பது போல, வரவேற்பறையில் சரிந்து கிடந்த பின்னர் தான் எல்லாம் சரியானது.

அன்று பகலில் வீட்டைத் தேடி புறப்பட்ட நானும், ஒரு இரவில் வீட்டை விட்டு வெளியேறிய புத்தனும் சந்திக்கவே முடியாது.

மிகப்பெரும் ஆசையொன்றை

துறப்பதாக

முடிவெடுத்த பொழுது

அமர்ந்திருந்த

இந்த பூங்கா இருக்கையை

தந்த கல்

புத்தனின் சிலையாக

வடிக்கபட காத்திருந்து

வழி மாறியிருக்கலாம்.

என்னளவிலான

சிறிய அறிதலையும் புரிதலையும்

உணர்ந்த பொழுது

சுற்றி எதுவுமேயில்லை

தலைக்கு மேல் பறந்த

பறவைக்கு

புத்தனின் பெயரை வைத்தேன்

கூட்டமில்லாத ரயில் நிறுத்தம்

தெருக்கள் ரகசியமாக சந்திக்குமிடம்

நூலகம்

மொட்டைமாடிகள்

இரவுப் பேருந்தின் கடைசி இருக்கை

எதுவேனும் இருக்கலாம்

யாருக்காயினும்

புத்தனின் அடையாளமாக

இந்த பெருநகரத்தில்

அத்தனை மரங்கள் இல்லை.

இருபத்தி நான்கு மணி நேரத்தை சரி பாதியாக உடைத்து பகலைத் துவக்கும் வைகறையில், யாரேனும் வாழ்க்கையின் மறு பாதியை ரகசியமாகத் தேடிப் போகலாம். ‘வீட்டை விட்டு ஓடிப் போகுதல்’. காதலைத் தேடியா? காமத்தை தேடியா? குடும்பத்தை துறந்தா? அவர்களில் யாரேனும் ஞானத்தை அடைந்திருக்கலாம். புத்தனை யாரும் ‘ஊரை விட்டு ஓடிப் போனவன்’ என்று அழைத்து நான் கேட்டதில்லை. ஒரு வேளை புத்தன் ஞானத்தை அடையாமல் போயிருந்தால்? அடைந்த ஞானத்தை யாருக்கும் சொல்லாமல் போயிருந்தால்? சொல்லி எத்தனை பேர் அந்த ஞானத்தை உணர்ந்திருக்கிறோம்? ஞானத்தை உணராதவர்களுக்கு புத்தன் வெறும் வீட்டை விட்டு ஓடிப் போனவன் தானா? யசோதாவின் இழப்பு, புத்தனின் ஞானத்தின் பெருமையை குறைத்ததுண்டா?

காணாமல் போனவர்கள், எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? தங்கள் போதி மரத்தையா?

புத்தனை பற்றி இதுவரை எதுவும் படித்ததில்லை. சிறிய வயதில் படித்த சில கதைகள் தவிர. புத்தனின் புரிதல்களை அறிய வேண்டும் என்ற ஆவலை, அந்த எளிமையான புன்னகை மிகச்சிறப்பாக ஏற்படுத்திவிடுகிறது. சில கணங்களில், புத்தனின் அத்தனை புரிதல்களின் அதிர்வையும் ஏற்படுத்த அந்தப் புன்னகையே போதும் என்றே தோன்றுகிறது. மிகத்துல்லியமான தூய இதயத்தில் இருந்து அந்த புன்னகை வர முடியுமென்றால், வழி வழியாக, அதிர்வை தரக்கூடிய புன்னகையை கல்லில் கடத்த ஏதுவாக, முதன் முதலில் புத்தனின் புன்னகையை கல்லில் வடித்தவனின் மனம் எப்படி இருந்திருக்கும்? கல்லின் எந்த துகளை நீக்கி, எதை செதுக்கி, எதைக் கொண்டு, அப்புன்னகையை கொண்டு வந்திருப்பான்? அந்தப் புன்னகையை சிறப்பாக கொண்டு வந்த கணத்தில், புத்தன் தன் ஞானம் மூலம் பெற்ற அத்தனையையும் கடந்த ஒரு நிலையை நிச்சயம் ஒரு நொடி அவன் கண்டிருப்பான்.

எழுத்தும் புகைப்படங்களும் – அரவிந்தன்

கண்டேன் காதலை / ஆதவன்
இடைவேளையின் போது திரைக்கு பக்கத்தில் பெரிய பெரிய லைட்டுகள், திரைக்கு கீழே கொஞ்ச தூரத்தில் கேமிரா, ‘என்னடா நடக்குது‘ என்று எட்டிப் பார்த்தால் ‘சன் பிக்சர்ஸ்‘ குழுவினர் ஒரு படையோடு வந்திருந்தனர். ‘ஹையயோ‘ என்று வடிவேலு கணக்காக பதறினால், ‘இன்னிக்கு என்ன சமச்சீங்க‘ என்று டி.வி.யில் மொக்க போடும் ஒரு வி.ஜே மேடையேறினார். தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சன் பிக்சர்ஸ் ஒரு குடும்ப படத்தை மிகப் பெரிய போராட்டத்திற்கு பின்னர் தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கிறார்களாம். படம் massive hit ஆம். (அது ரிலீஸான ரெண்டாவது நாள். கமலா தியேட்டர், மேட்னி.). நடிகர் பரத் மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோர் மேடைக்கு வந்து, சன் பிக்ஸர்ஸ் இல்லையென்றால் ‘எங்களுக்கு காலைல டிஃபன் கூட கெடச்சிருக்காது‘ என்ற ரேஞ்சில் பேச, காதுகளில் செக்கச்செவேலென ரத்தம். பத்து நிமிடத்திற்கு பிறகு ‘நாங்க கிளம்பவா?’ என்று அவர்கள் உத்தரவு கேட்க, கூட்டம் ‘ம்ஹூம்‘ என்று கத்துகிறது. ‘வேற யாரு வரணும்‘ என்று தொகுப்பாளர் கேட்க, ‘தமன்னா‘ என்று மொத்த கூட்டமே கத்த, அடுத்த நொடி தமன்னா எங்கிருந்தோ புயலென உள்ளே நுழைகிறார். அதற்கு பிறகு அரை மணி நேரத்திற்கு பரத்தையும் டைரக்டரையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. கிட்டதட்ட படத்திலும் அதே கதை தான்!

பேச்சுப்போட்டியில் ஒரே தலைப்பில் எல்லோரும் பேச தயாராக இருக்கும் போது, நமக்கு முன்னால் ஒரு திறமையான போட்டியாளர் பேசிவிட்டால், நாம் பேச நினைத்தது எல்லாம் தீர்ந்து போகும். உண்மையிலேயே திறமை இருந்தால், நாமும் அதையே பேசலாம், நம் பாணியில். அத்தனை திறமையில்லாதவர்கள், சரக்கில்லாதவர்கள், சவசவ என்று சொன்னதையே திரும்ப சொல்லி ஒப்பேற்றி விட்டு போகலாம். இரண்டாவது வகை தான் ‘கண்டேன் காதலை‘. ஹிந்தியில் கரீனாவும் ஷாகித் கபூரும் jab they metஇன் போது காதலை அறியாமல், போக போக காதலை கண்ட படத்தை ரீமேக்கிருக்கிறார்கள்.‘நான் தேனிப் பொண்ணு‘ என்று சொல்வது மட்டும் கொஞ்சம் பொருந்தவில்லையே தவிர, தமன்னா தான் படத்தின் ராணித் தேனீ. தண்ணீர் பாட்டிலுக்கு சில்லறையை திருப்பிக் கேட்கும் சுவாரசியத்தில் ரயிலை தவற விடும் போது, ஒரிஜினலில் கரீனா கைகளால் முகத்தை அழுத்திக்கொண்டு ஒரு ரியாக்ஷன் தருவாரே, ஆஹ்! பைக்கில் பின்னால் வரும் ஜோக்கரிடம் (இந்தியில் தான் அவர் ஜோக்கர், தமிழில் பாக்ஸர் போல இருக்கிறார்), ‘மேன் வோ நஹி‘ என்று எத்தனை அழகாக கரீனா சொல்லுவார்? இப்படியெல்லாம் தமன்னாவிடம் எதிர்பார்த்தால், கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் சின்சியராக நடித்திருக்கிறார். பின்பாதியில் பயங்கரமாக சொதப்புவாரோ என்று பார்த்தால், சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ், ‘நான் எவ்ளோ லூஸு மாதிரி இருந்திருக்கிறேன்‘ என்று அழும் போது, நிஜமாகவே அழுதிருக்கிறார். படத்தின் ஒரே ஒரே ஆறுதல் தமன்னா!

முதல் காட்சியில், வாழ்க்கையின் எல்லாம் கட்டத்தில் தோற்று விட்ட வெறுப்பில், தளர்ந்த போன நடையில் பரத் நடந்து வரவேண்டும். அங்கேயே பரத் காலி. அதற்கு பிறகு எங்குமே எழுந்திருக்கவேயில்லை.‘டிரையினை மிஸ் பண்ற மாதிரி ஒரு கனவு வந்துச்சு‘ என்று சொல்வது எத்தனை அழகான பொருத்தமான சிம்பாலஜி. அந்த காட்சிக்கு பொருத்தமாக ‘பாஆஆஆஅங்‘ என்று டிரெயின் ஓடுற சத்தம் எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட ஃபீலிங்கே வர்லியே?? பரத்தின் அம்மாவினுடைய கதை, தமன்னாவின் முதல் காதல் கதை, பரத் தமன்னா காதல் கதை, எதிலுமே கொஞ்சம் கூட சங்கதி இல்லை. ஒரிஜினலின் பாடல் வரிகளில் கூட அத்தனை ஆழம் (சிலது இயக்குனரே எழுதியது), இங்கு பாட்டெல்லாம் சோ சோ! (தமன்னாவின் அழகை பார்க்க ‘தென்னாங்காயில் கூட மூணாம் கண்ணு முளைக்கிறதே‘ என்றெழுதியது மட்டும் சுகம், நிஜம்) ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் லவ் அட் ப்ஃர்ஸ்ட் சைட் எல்லாம் இல்லாமல் உணர்வுபூர்வமாக ஒரு கதை என்று ஆவலாக இருந்தால், Just we met என்று ஏனோ தானோ என்றிருக்கிறது படம்.

முன்னா ‘அசோகவனம் படத்தில் என் ரோல் இருக்குமா வெட்டிடுவாங்களா‘ என்ற குழப்பத்திலேயே சுற்றி வந்திருக்கிறார். ஏகபட்ட மக்கள் திரையில் வலம் வருகிறார்கள். யாரையும் நினைவில்லை.

இந்த தலைமுறை தமிழ் இயக்குனர்களில் பலருக்கு, எமோஷன்களை கையாளுவதற்கு ரொம்பவே பயம். தியேட்டருக்கு வரும் தமிழ் படங்கள் எல்லாம், காலேஜ் பையன்கள் அமர்ந்திருக்கும் குட்டிச் சுவர் இருக்கும் தெருவில் நடப்பது போல பயந்து பயந்தே வரும் இளம்பெண்கள் போல வருகின்றன. முதல் ரீலிலேயே கமெண்ட் பறக்கத் துவங்கி விடுகிறது. இதை தடுப்பதற்காக, அவர்களே ஒரு காமெடியனை படத்தில் நுழைத்து, படத்தின் எல்லா சீரியஸ் எமோஷனல் காட்சிகளில் கமெண்ட் அடிக்க வைத்து விடுகிறார்கள். கண்ணனின் முந்தைய படமான ‘ஜெயம்கொண்டான்‘ படத்தில் எப்படி விவேக் எல்லா காட்சிகளிலும் மூக்கை நுழைத்தாரோ, அது போல இந்த படத்தில் சந்தானம். இப்படி துக்கடாவாக சேர்க்கப்படும் விஷயங்கள் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் பிளஸ்ஸாக மாறுவது தான் கொடுமை!படத்திற்கு ஒரே ஒரு பெருமை கண்டிப்பாக உண்டு. ரீமேக் ராஜாவிற்கு கூட இல்லாத பெருமை. வெளிநாட்டில் இருக்கும் என்னுடைய அக்கா அம்மாவிடம் ‘அடுத்து ரெண்டு ஸ்பூன் உப்பா? எவ்ளோ மொளகா?’ என்று கேட்டு கேட்டு செய்வது போல, ‘பார்த்து, பார்த்து‘ செய்திருக்கிறார்கள். காஸ்ட்யூம் மாறினால் கூட சாமி கண்ண குத்திடும் ரேஞ்சுக்கு படத்தை இறுக்கத் தழுவியிருக்கிறார்கள். சமையல் முடிந்ததும் அக்கா திரும்ப அழைத்து, ‘என்ன இருந்தாலும் உன் கை பக்குவம் வரலியே‘ என்று வருத்தபடுவது தான் மிச்சம்!

அடபோங்கப்பா, ரிவியு கூட மொக்கையாயிடுச்சு.—————————————————————————————————————————————————————–

படத்தின் ஒரே (ஆறுதலான) ஃபீலிங் கட்டம், சுரேஷ் வாத்கர் கடித்து துப்பி பாடியிருக்கும் அந்த சோகப்பாட்டுக்காக ரிசர்வ்ட்.

‘கேடி’, ‘ஆனந்த தாண்டவம்’, ‘Happy days’ எல்லாம் பார்த்த பின் இதில் தமன்னா செமத்தியாக முன்னேறியிருக்கிறார்.

பாதி drink சின்மயிக்கு, இப்பவே சொல்ட்டேன் ஆமா!

‘சன் பிக்ஸர்ஸ்’லேர்ந்து யாராச்சும் வந்தா உடனே எஸ்கேப் ஆக.

(தமன்னாவிடம் கேட்கபட்ட கேள்வி – தொடர்ந்து மூன்று சன் பிக்சர்ஸ் திரைப்படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். Do you think its your luck factor?)

ஹையயோ, இங்கயும் சூர்யா ஜோதிகா குடும்ப ஃபோட்டோவ போட்டுட்டாங்களா? ‘ஆனந்பாபு‘னு ஏன் போட்டாங்க? ‘ஆனந்த்பாபு‘ தானே? ‘ஃபெஃப்ஸி விஜயன்‘ எப்போ பெப்ஸி விஜயன் ஆனாரு? ஓ, இவ்ளோ அஷோஷியட் டைரக்டர்ஸா? காயத்ரி ரகுராம் கொரியோக்ராஃபர் ஆயிட்டாங்களா? இங்க பாரேன், சவுத் ஆஃப்ரிகாலேர்ந்து ஒரு ஸ்டண்ட் மாஸ்டராம், பேரு ஆனா ஃப்ராண்ஸாம்! – இப்படியெல்லாம் டைட்டில் போடும் போது உன்னிப்பாக கவனித்து நோட் செய்து ஆரம்பித்தால், அடுத்த இரண்டரை மணி நேரத்திற்கு நோட் செய்ய ஒன்றுமேயில்லை. படம் முடியும் போது போடுகிற டைட்டில்ஸில் ‘கதை விவாதக் குழு‘ என்று ஏழெட்டு பேரை நோட் செய்யும் போது வருதே ஒரு ஆத்திரம்! வடிவேலு நியாயப்படி சூர்யாவிற்கு அடுத்தபடியாக பெயர் போட்டிருக்க வேண்டும். அவரின் காமெடிக்கும் ‘ஹஸிலி ஃபிஸிலிக்கும்‘ மட்டும் தியேட்டர் அதிருகிறது. சூர்யா கட்டிடம் விட்டு கட்டிடம் தாவுவது கூட தாங்கிக்கொள்ளலாம், கடைசியில் ‘உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா‘ என்று செண்டிமெண்டலாக ஃபீல் செய்யும் போது வா‘ரணம்‘ ஆயிரம்! ஆய்த எழுத்தெல்லாம் முடித்து விட்டு, அ ஃபார் அயன், ஆ ஃபார் ஆதவன் என்று மசாலாப் பாடம் படிக்க ஆரம்பித்திருக்கிறார் சூர்யா. வாழ்க வளமுடன்!

பயாஸ்கோப் #1
இது ஒரு தமிழ் சினிமா ஆராய்ச்சி தொடர். நாட்டுக்கு ரொம்ப தேவை என்பதால் ரூம் போட்டு யோசித்து எழுதத் தொடங்குகிறேன் .

இந்த முறை தமிழ் சினிமாவில் வந்த தற்கொலை காட்சிகள். இது வரை வந்திருக்கும்  பற்பல காட்சிகளில் இருந்து, உங்களுக்காக ‘அழகான’, ‘திறமையாக செதுக்கபட்ட’ தற்கொலை  காட்சிகளை ஆராய்ந்து வழங்குவது சேடிஸ்ட் அரவிந்தன்! டிஸ்க்ளெய்மர் #1 – கணமான  விஷயத்தை பற்றி பேசுவதால், கலாய்த்தல் தொனியில் எழுதியிருக்கிறேன். டிஸ்க்ளெய்மர்  #2 – தற்கொலை செய்துகொள்வது உங்கள் உயிருக்கு கேடு! இனி, எனக்குப் பிடித்த ஐந்து  காட்சிகள்.

தற்கொலை  காட்சிகளின் மன்னன், ‘புன்னகை மன்னன்’  திரைப்படத்தில் வருகிறது. அந்தஸ்த்து  பிரச்சினையால் சேர முடியாத காதலர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து, லோக்கல்  கடவுளின் முன்னால் பூமாலை மாற்றிக்கொண்டு, பின்னர் சில பல காரியங்கள் செய்து  முடித்து விட்டு, அருவிக்கு முன்னால் வந்து நிற்கும் போது, நமக்கு பி.பி ஏறுகிறது.  கமல் ஒன்று, இரண்டு என எண்ணத் தொடங்கி, பின்னர் ‘கிளிகள் முத்தம் தருதா, அதனால்  சத்தம் வருதா’ எல்லாம் முடிந்து, ஒரே ஜம்ப்பு ஜம்ப்ப, ரேகா மாத்திரம் ப்ளாக்கில்  டிக்கெட் வாங்கி பரலோகம் போய்விடுகிறார். மரத்தில் மாட்டிக்கொண்ட கமல், கொஞ்ச நேரம்  ‘அ, ஆ, இ, ஈ’ சொல்லி விட்டு,  உயிர் தேறிவிடுகிறார். இது தான் தமிழ் சினிமாவின் அதி  முக்கிய காதல் தற்கொலை காட்சி. அதற்கும் பின்னர் சித்தப்பா கமல் அட்வைஸ் செய்வது,  அத்தனை அதி முக்கிய காட்சியாக எடுத்துக்கொள்ளப் படாமல் போய் விட்டது. காதலில்  தோல்வியற்ற தமிழக காதல் ஜோடிகள், இதே போல் ஸ்டெப் பை ஸ்டெப் ஃபால்லோ செய்து விட்டு,  கடைசி நேரத்தில் புத்திசாலித்தனமாக ஓடி விடுவார்கள் என நம்புவோம். வாலி, எஸ்.பி.பி,  ராஜா, கே.பி, கமல், ரேகா என எல்லோரும் எழுதிய ஒரு அழகான சிறுகதை.

அடுத்தது, தமிழ் சினிமாவின் மிக டிரமாடிக்கான தற்கொலை. கே.பி.யின் இடது கை  வண்ணம். (மேலே படித்தது வலது). காதல் மன்னன் ஜெமினி கணேசனை தோழிமார்கள் சrougeஆ  தேவியும், வாணிஸ்ரீயும் காதலிக்க, நட்பும் காதலும் நாற்பத்தைந்து டிகிரியில் ஒன்றை  ஒன்றை வெட்டிக்கொள்ளும் முக்கோணக் காதல் கதை. Film-in-film என்பது மிகப் பாப்புலரான  திரைக்கதை உத்தி, அதைப் போல, இந்தப் படத்தில், novel-in-film என்ற அழகான உத்தியில்  முக்கோண கதையையே தொடர்கதையாக எழுதுகிறார் சrougeஆ தேவி. தன் கடைசி அத்தியாயத்தை  தூக்கமாத்திரைகளை எண்ணி எண்ணி, தன் சொந்தக் கதை சோகக் கதையை எண்ணி எண்ணி,  ஆம்புலன்ஸ் எண் தெரியாத நாகேஷஇ தொலைபேசியில் பதறி சிதற வைத்தபடி எழுதும் கண்ணீர்க்  காட்சி. கன்னடத்துப் பைங்கிளி உயிரைக் கொடுத்து நடித்திருந்தார். படம், தாமரை  நெஞ்சம்.

ஊரையே உயிர் கொல்லி நோய் ஆட்டிபடைக்க, ஊரை மிகவும் நேசிக்கும் குடிவானவி  ஒருத்தியின் வீட்டுக்கு இரவொன்றில் ஒரு கிழவி வருகிறாள். பச்சிலை கலந்த நீரை ஊர்  முழுக்க தெளித்தால் உயிர்கொல்லி நோய் ஓடி விடும் என்று சொல்லி, திரும்பி வரும் வரை  இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன் என்று காட் பிராமிஸ் செய்கிறாள். வீட்டை விட்டு  வெளியே வந்து குடியானவி உயிர்கொல்லி நோயை விரட்டத் துவங்க, ‘அந்தம்மா சாப்டுச்சோ  இல்லியோ’ என்று விருந்தோம்ப விரைய, கொடுத்த வாக்கை மீறி வீடு திரும்ப, ரம்யா  கிருஷ்ணன் உக்கிரமாக அமர்ந்திருக்க, ஊருக்காக உயிர்த்தியாகம் செய்ய முடிவெடுத்து,  அப்படியே ஓடிப்போய் கிணற்றில் விழுந்து பக்தி மார்கத்தை அடைகிறார். கச்சிதமாக  எடிட்டிங் செய்யப்பட்ட அடுத்த காட்சியில் அம்மன் அறுபது டிகிரியில் நிமிர்ந்து  காமிராவை பார்க்க, புல்லரிக்க வைக்கும் தற்கொலை காட்சி. ‘அம்மன்’ படத்திற்கு  எளிமையான ஸ்தல புராணத்தையும் விளக்கி வைத்து, படத்தை துவக்கியது இந்தக் காட்சி.

‘ஏன் தற்கொலை? எதுக்கு? என்ன காரணம்’ என்ற கேள்வியை பார்வையாளர்கள் மத்தியில் எழ  வைப்பது திரைக்கதை வண்டிக்கு நல்ல மைலேஜ் தரும் டீசல். அதையும் மீறி ‘இதுக்காகவா?’  என்று ஆச்சரியப்படுத்தியது ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் பாவனாவின் அப்பா தற்கொலை  செய்துகொள்வார். பின்னர் உண்மையான காரணம் திகில் டிவிஸ்ட். ஒரு தற்கொலை கணத்தின்  பதற்றைத்தை குழப்பத்தை மிக அருமையாக படம் பிடித்திருந்தார்கள். ‘என்ன ஏன் இப்படி  வளத்தேபா? உன்னால தான் எல்லாம். நீ தான் எல்லாத்துக்கு காரணம்’ என்று பாவனா  புலம்பிக்கொண்டிருக்க, மேஜையை துடைத்துக்கொண்டிருக்கும் அப்பா (அவர் வரும்  பெரும்பாலான காட்சிகளில் ‘அழுக்கை’ துடைத்துக் கொண்டேயிருப்பார்!), அபப்டியே  தளர்ந்து நடந்து சென்று தூக்கி தொங்கி விடும் காட்சி சிறப்பாக வந்திருந்தது.

‘ஜாதி என்னம்மா?’ என்ற கேள்வி ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் மீனாவையும்  பார்த்திபனையும் பிரிக்க,  பார்த்திபனை மடக்க எல்லா முயற்சிகளுக்குப் பின்னர்,  ‘வெச்ச மருதாணி காயறதுகுள்ள போயிட்டியே’ என்று ஒப்பாரி வைக்க ஏதுவாய்,  பார்த்திபனின் தங்கையிடம் மனதார பேசி விட்டு, கால் கைகளை கட்டிக்கொண்டு விட்டு,  கிணற்றுக்குள் மீனா தொபுக்கடீர். அதை கொஞ்சம் செண்டிமெண்டல் வால்யூம் குறைவாக  காட்டியவர்கள், பின் தொடரும் பார்த்திபனின் தற்கொலையை நம் மூஞ்சில் கை வைப்பது போல  (on-the-face) ஆக காட்டிருப்பார்கள். தற்கொலை காட்சியோடு முடியும் மற்றொரு  படம்.

நாமினேட் செய்யப்பட்ட மற்ற சில காட்சிகள் -  கொலைகார காமுக மருமகனை கொல்வதற்காக,  ஜன்னல் கதவு எல்லாம் சாத்தி விட்டு, காஸ் சிலிண்டரை திறந்து வைத்து விட்டு, கொஞ்ச  நேரம் பிரகாஷ்ராஜை டார்ச்சர் செய்து விட்டு, அருமையான அண்டர்ப்ளே செய்துவிட்டு  செத்துப் போகும் பூர்ணம் விஸ்வநாதன் (ஆசை).  ‘உங்க புக், உங்க புக்க விட்டுட்டீங்க’  என்று கீர்த்தனா ஓடிவர, அந்த தாடிக்கார சக்கர வண்டி இளைஞன் (தற்)கொலைத் தாக்குதல்  நடத்துவது (கன்னத்தில் முத்தமிட்டால்). கீர்த்தனாவின் இலங்கையைப் பற்றிய collective  memoryக்கு அந்த காட்சி நிறையவே அர்த்தம் தந்தது. சமையல் வேலை செய்கையில்  செத்துப்போனால் பணம் கொடுப்பார்கள் என்பதால் தீக்குளித்து செத்துப் போகும்  ‘ஜென்டில்மேன்’ மனோரமா, ‘அல்லி அர்ஜுனாவில்’ ஈவ் டீஸிங்கால் தற்கொலை செய்துகொள்ளும்  நடிகர் விஜயகுமாரின் மகளொருத்தி (நேற்று காலை கே.டி.வி.யில் போட்டார்கள்).   ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் வந்து காப்பாற்றிவிட்டதால், ஜோதிகா  ரிஜக்டெட்.

இதையும் தாண்டி, வறுமை, காதல், கண்றாவி போன்ற பல காரணங்களுக்காக சினிமாவில்  செத்துப்போன பலர் உண்டு. ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் ஒரு அழுமூஞ்சி நாயகி  எதற்கோ செத்துப்போனதாக நினைவு. ஆங், அப்புறம் வேலுநாயக்கரை காப்பாற்ற தீக்குளித்து  செத்துப்போகுமே அந்தப் பாட்டி, எல்லாருக்கும் நமது கண்ணீர் அஞ்சலிகள்.

ரைட்டு, கடைசியாக, தமிழ் சினிமாவின் தற்கொலைகளை ஆராய்ந்த சைக்கியார்ட்டிஸ்ட்  அரவிந்தன் வழங்கும் ‘A detailed study of the various reasons that made the Tamizh  cinema characters suicidal’.

இரண்டு கவிதைகள்
பகல் கனவு

நேற்றைப் பற்றிய

தெளிவில்லாத

தவறான குறிப்புகளை

தினமும் அதிகாலையில்

எழுதுகிறது

கனவு

எல்லாம் தவறாக நடைபெற்ற

நாளொன்றின் குறிப்புகளை

அது

திருத்தி சரியாக எழுதும்

தினத்தை

நான் வாழ்ந்திருந்தேன்

தலைகீழாக

தனிமையுடன் தனித்திருத்தல்

வழியெங்கும் இரு புறமும்

தலையெடுத்து நிற்கும் விளக்குகள்

ஜன்னல்கள் வழியே

வெட்டிக் கொள்ள,

விழுந்து நகரும்

ஒளி-நிழல்

செவ்வகங்களும்

நினைவலைகளின் மேலே

இலக்கின்றி மிதக்கும்

வெறித்த கண்களும்

இணையும் புள்ளியில்

சீராக

விரைகிறது

இந்த இரவுப் பேருந்து

இசையலைகள் (கவிதைகள்)
ஒலிச்சித்திரம்

பழகிச் சலித்த

கறுப்பு வெள்ளை

சித்திரமென

கிடக்கிற

நகரத்தின்  ஊடே

பல வண்ணப்

பரவசக் தீற்றலென

பறக்கிறேன்

பண்பலை பரப்பும்

புத்தம்  புதுப்

பாடலொன்றைக் கேட்டபடி

ஒரு கிளைப்  பூக்கள்

காதுகள் வழியே

இதமான இசைகள் வழிய

கைப்பிடி கம்பியின்  மேல்

நானும்

ஜன்னல் மேல்

பக்கத்து இருக்கைக்காரரும்

தலைகள்  சாய்த்திருக்கிறோம்.

இரவுக்காற்றின்

கிளையில்

பூத்திருக்கின்றன

இரு பூக்கள்

ரகசியப்பாடல்

எந்தப் பாடலையும்

முழுதாக  கேட்க

மனமில்லாமல்

கிசுகிசுத்துக்கொண்டிருக்கும்

இரவு நகரத்தின்

எட்டு  பண்பலை நிலையங்களை

தாண்டியபடி

ஏதோ  யோசனையுடன்

விரல்

நடக்கிறது

முன்னும் பின்னுமாக

ஏதேதோ பாடல்களின்

ஏதேதோ வரிகள் கலந்த

விசித்திரப் பாடல்

இது

திடீரென்று

ஒலிபரப்பை நிறுத்திவிட்டது

மூன்றாவது நிலையம்

விரல்கள்

அழுத்தி அழுத்தி

காதுகளை  அடைக்கிற

நிசப்தத்தை

எதிர்பார்த்தே

கிடக்கிறேன்

பின்

மெதுவாக

கேட்கத் துவங்கினேன்

மூன்றாவது  நிலையம்

ஒலிபரப்பிக்கொண்டிருந்த

ரகசியப் பாடலொன்றை

இசைக்கோலம்

மெதுவாக

மேலெழும்பியபடி

முழு  வட்டமிடும்

மேம்பாலத்தில்

விரைந்தபடி

நான்

இணைத்துக்  கொண்டிருக்கிறேன்

காற்றடுக்கின்

எல்லா தளங்களிலும்

இப்போது  நிரம்பியிருக்கும்

இந்தப் பாடலின்

இசைப்புள்ளிகளை.

உன்னைப் போல் ஒருவன்
அத்தனை ஆர்பாட்டங்களும், ஆவேசங்களும், வார்த்தைப் போரும் முடிந்த பின்னர், ‘லேப்டாப்’ கட்டிக்கொண்டு கிளம்புகையில் கமல், மோகன்லாலிடம் ‘Nice meeting you’ என்று சொல்லும் போது, அத்தனை இறுக்கத்தையும் மீறி நமக்கு ஒரு சின்னப் புன்னகை வருகிறது. இந்திய திரை ராஜாங்கத்தின் இரண்டு நடிப்பரசர்கள் ஒரு படத்தில் இணைவது எத்தனை விஷேஷம்? இதற்கு எத்தனை காத்திருப்பு? அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்  ‘ரெண்டு பேருக்கும் எல்லா எக்ஸ்ப்ரணையும் காட்ட ஸ்கோப் வெச்சு வெளுத்து கட்டணும்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு காட்சிகள் எழுதாமல் (அல்லது புதுசாக சேர்க்காமல்   ) கச்சிதமாக கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உள்ளது உள்ளபடி அவர்களை உலவ விட்டிருப்பதே படத்தின் ஒரு characteristic ஆக ஜொலிக்கிறது.  இது மிகச்சாதாரணமான, மிகக் கச்சிதமான, மிக நேர்மையான, மிக நல்ல ஒரு படம்! ஒரு கபடி விளையாட்டுக்காக முதலிலேயே கோடுகள் கிழித்துவிட்டு அப்படியே களத்தில் குதித்து விறுவிறுவென ஆடி முடிக்கிறார்கள். சியர் லீடர்ஸ் என அயிட்டம் நம்பர், குத்துப் பாட்டு எதுவும் இல்லை. Just to the point.

‘பொன் கிடைத்தாலும் (ரீமேக் செய்ய) ‘A Wednesday’ போன்ற படம் கிடைக்காது’. அதை சிதைக்காமல் திரும்ப எடுத்தது பாராட்டுக்குரியது. ஹிந்திப் படத்தை பாத்தவர்கள் மட்டும் (நான் உட்பட) அதையும் இதையும் ஒப்பிட்டு ஆறு வித்தியாசம் எழுதிக்கொள்ளலாம்.  எப்படி அந்த ஸ்கிர்ப்ட் தமிழ்நாட்டுல வேல செய்யும் என்ற கேள்விக்கு, புத்திசாலித்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

சினிமாவைப் பற்றி மிகப் பிரபலமான ஒரு சொற்றொடர், ‘Fiction, not fact’.  சினிமா பற்றிய எல்லா வாதங்களுக்கும் இதை பயன்படுத்தலாம். அந்த சொற்றொடரை உடைக்க, எத்தனை நிஜமாக படத்தை எடுக்க முடியுமோ அத்தனை எடுத்திருக்கிறார்கள் (தற்போதைய முதல்வரின் குரலை உபயோகப்படுத்தியது வரை!). ஆனால், அது பார்ப்பவர்களின் மத்தியில் ஏற்படுத்தும் உணர்வுகள் நல்ல முரண்! கொஞ்சம் கவனத்தை சிதறடித்தது என்று கூட சொல்லும் அளவுக்கு. இருந்தும், முடிந்தளவு அதை சுவாரசியமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். (‘கடவுளின் கையா? ஐயோ அது கொஞ்சம் வில்லங்கமான கையாச்சே?’ என்பதில் தொடங்கி, ‘சி.எம் பாத்துட்டு இருப்பாரு, தமிழ்ல பேசு’ என்பது வரை. அந்த காட்சியில் மலையாளி தமிழருக்கு நல்ல தமிழ் வார்த்தைகள் பேச எடுத்துக் கொடுப்பது, அக்குறும்பு!) (சி.எம். வீடு செட்டாமே??).

முதல் சில காட்சிகளில் கமல் சும்மா ஒரு தனியார் டெலிகாம்-இன் சிம் கார்டை எடுத்து உபயோகிக்கும் போது, ‘ஐயோ, எதாச்சும் கேஸ் போட்டுரப்போறாங்க’ என்று பயமேற்படும் பொழுது, (மூலக்கதையை விட) படத்தின் political tone-ஐ இத்தனை ஏற்றி வைத்திருப்பது, ஆச்சரியமான அதிர்ச்சி.  அதுவும் ‘கரகர குரலை’ பயன்படுத்திவிட்டு, பின்னர் பொத்தாம் பொதுவாக அரசாங்கம் நீதித்துறை எல்லாவற்றையும் வெளுத்து வாங்குவது, ஆச்சர்யம்! குஜராத் பற்றிய ஒரு வசனம், ‘நிஜமாவே அத தான் கேட்டோமா’ என்று பக்கத்து சீட்டுக்காரரிடம் கேட்கும் அளவுக்கு அப்பட்டம். SPOILER. ‘மோதி(ப்) பார்த்தாலே சாவு தான்’. END OF SPOILERS இது எல்லாமே, கமலின் கடைசி உணர்ச்சிப்பூர்வமான காட்சியை அத்தனை genuine ஆக ஆக்குகின்றன. இந்த படத்தை கமல் மீண்டும் எடுக்க, படத்தின் தரம் மட்டும் காரணம் அல்ல என்று நன்றாகப் புரிகிறது.

மோகன்லால் வருகிற எல்லா காட்சிகளிலுமே ‘லாலேட்ட்டாஆஆஆ’ என்று கத்தலாம் போல. ஆரம்பத்தில் இருக்கும் அமைதி, இறுக்கம் தொடங்கி கடைசியில் கன்னங்கள் லேசாக குலுங்க பேசுவது வரை, அணு அணுவாக அளவிட்டு நடித்திருக்கிறார். தன்னை விட உயர் அதிகாரிகளிடம் பழகுவதாக ஆகட்டும், அடுத்த நிலை அதிகாரிகளிடம் பழகுவது சரி, கனக் கச்சிதம். ‘My girl friend sir’ என்று கேட்கிற போது கொடுக்கிற பாவனை ஆகட்டும், ‘அவனுக்கு இவனுக்கும் ஆறு வித்தியாசமா?’ என்று நக்கலான கோபமாகட்டும், லால் லால் தான்!

தலைமைச் செயலர் பாத்திரத்திற்கு லக்ஷியை யோசித்தற்கே முதலில் ஒரு ஷொட்டு. எதிர்பாராத சில திருப்பங்களினால் ஒரு நாள் அரசு நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து  முடிவுகள் எடுக்கவும் அதை செயல்படுத்துவதுமான காட்சிகள் பலே. (ஒரிஜினல் கதையிலும் இல்லாதது). திறமையான நடிகர்கள் சுவையான பாத்திரங்களில் (அதுவும் கமல் படத்தில்) வெளுத்து வாங்குவதை பார்ப்பதே, ஆஹா தனி சுகம். (லக்ஷ்மிக்கு மேக்கப் யாரு போட்டது? கமலா?   )

இரா.முருகனின் வசனங்கள் நல்ல சவுக்கு. அடி வெளுத்திருக்கிறார். அவரின் வசனங்களை கமல்-லால்-லக்ஷ்மி அழகாக வெளிப்படுத்தி முழுதாக்கியிருக்கிறார்கள். ‘கோபத்த காட்ட இந்த உலகமே இருக்கு’, ‘Tonight beer is mine’ போன்ற சில வசனங்கள் டைரக்டாக மும்பையிலிருந்து சென்னைக்கு ஃப்ளைட் பிடித்து வந்து சேர்ந்திருக்கிறது.

இரு ராஜாக்களுக்கு இடையில் நடக்கிற யுத்தத்தில், மூன்று முக்கிய சிப்பாய்கள் உண்டு. அந்த இரண்டு போலீஸ்காரர்களும் மகா கோட்டை விடல். குறிப்பாக கணேஷ் வெங்கட்ராமின் gillette vector plus முகம் ஏனோ போலீஸ் உடையை துருத்திக்கொண்டு தனியே தெரிகிறது. அனுஜா ஐயர் கச்சிதம். (ஹிந்தியை விட இங்கே தூள்). சில ஒரு-சீன் -நடிகர்கள் சொதப்பல்.

‘சலங்கை ஒலியில்’ கமலை முழுக்க முழுக்க out-of-focusஇல் புகைப்படம் எடுத்த பொடிப் பையன் தான் இயக்குனர். அதற்கு பிராயசத்தமாக கமலை in-focus-இல் வைத்து எடுத்திருக்கிறார். சர்ஃப் எக்சல் டைரக்ஷன்! (தேடிகிட்டே இருக்கணும், எங்கயாச்சும் இருக்கான்னு!). படத்தில் என்னவோ கொஞ்சம் மிச்சிங் என்று தலையை சொறிய, டைரக்ஷனோ, எடிட்டிங்கோ, பிண்ணனி இசையோ, இல்லை எல்லாமுமோ காரணமாக இருக்கலாம்.  கடைசியில் கமல் தரப்பு நியாயங்கள் வெளியே வர உதவும் உரையாடல் ஏதோ பேட்டி போல கடுப்படிக்கிறது. (எடிட்டிங்?)

கொஞ்சம் பிசிபேளா பாத், கொஞ்சம் ரசம், ரெண்டு சப்பாத்தி, பொரியல் என்று இருக்கும் தமிழ் சினிமாவில், ஒரே விஷயத்தை சுற்றியே படம் எடுத்தது வரவேற்கத்தக்கது. கனமான ஒப்பனையுடன் மேடையில் நடித்து முடித்துக் களைத்த ஒரு நடிகருடன் அவரது green-roomஇல் அமர்ந்து மனசு விட்டு பேசும் பொழுது, அந்த ஒப்பனை கலைந்த முகத்தின்  சின்ன சின்ன பாவனைகள், மேனரிசம்கள் ‘அட’ என்று ஈர்க்குமே, அப்படி இருக்கிறது கமலை பார்க்க. அவரது பாத்திரம் நம்மவராக படைக்கப் பட்டிருக்க, தோற்றத்திலும் ‘நம்மவர்’ கமலாக வருகிறார். கடையில் அமைதியாக தக்காளி பொறுக்கவதில் தொடங்கி மனைவியிடம் common manஆக பேசுவது வரை இதம். கமல் கண்ணீர் சிந்தி நாம் நூறு முறை பார்த்திருந்தாலும் அந்த கடைசி கட்ட வசனங்களும் ஒரு துளி கண்ணீரும், நம் தொண்டையை அடைக்க வைப்பது, முழுக்க முழுக்க கமலின் பெருமை. அந்த சில கணங்கள் படம் நமக்குத் தரும் அழகான பரிசு.

ரெண்டு ‘ஹெவி வெயிட்’ டென்னிஸ் ப்ளேயர்கள் விளையாடும் போது பாப் கார்ன் வாங்காமல் போவானேன்?

அவ்வப்போது ஒவ்வொரு மிடறு குடிப்பது போல பாடல்களை பயன்படுத்தி விட்டு, ஏன் அத்தனை உழைப்பில் பாடல்களை தயார் செய்தார்களோ? அதையும் தவிர்த்து புதுமை செய்திருக்கலாமே?

இல்லை ப்ரொட்யூசர் ரெண்டு பர்ஸ் வைத்திருக்கிறாரா?

‘இவ்வளவு சீக்கிரம் interval-ஆ?! அது சரி, interval விடாத தமிழ் சினிமா எப்போ தான் சார் வரும்?

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து
பனி விழும் முன்னிரவிலோ, மேகங்கள் சூழ்ந்த இளமிருட்டு மாலையிலோ, அடுத்த வண்டியில் போகலாம் என்று, பச்சை நிறத்தில் மெதுவாக உங்கள் முன்னால் வந்து நிற்கும் பேருந்தை நிராகரிக்கும் சுகம் உணர்ந்திருக்கிறீர்களா? நண்பர்களுடனான பேச்சை நீட்டித்துக்கொள்வதற்காக இருக்கலாம், ஏதோ யோசனையாக இருக்கலாம், இல்லை ஏதுமே காரணம் இல்லாமல் இருக்கலாம். ‘அடுத்ததுல போய்க்கலாம்’ என்ற நிச்சயமோ, நிச்சயமற்றத் தன்மையோ , எதிர்பார்ப்போ, எதுவோ. ஒன்று போனால் இன்னொன்று என்பதாக நினைவில் வரிசையாக வந்து விழுகிற எண்ணங்கள் போல, அடுத்தடுத்து வரும் பேருந்துகள் நிறைந்து பொழுதுகள், சொந்த வாகனங்கள் இல்லாத என்னைப் போன்றவர்களின் வாழ்க்கையெங்கும் நிறைந்திருக்கின்றன. பத்து வயது முதல் எனக்கு பேருந்துகளுடன் பழக்கம். வேறு வேறு வடிவங்களில், வேறு வேறு வண்ணங்களில், வேறு வேறு பாதைகளில்.

பத்தாம் வகுப்பு தொடங்கி நான்கைந்து மாதங்கள் கழிந்த பிறகு அவள் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். நம் மொழி பேசுபவள் இல்லை. முக்கியமான படிப்பாண்டு என்பதால், அதுவரை நடந்த பாடங்களை வகுப்பில் இருந்த அத்தனை மாணவர்களும் இரண்டே நாளில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி அவளுக்குத் தந்தோம். எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொன்னது தான் அவள் அதிகபட்சமாக பேசியது. கூர்மையான நாசியும் பார்வையும் கொண்டவள். அவளிடம் பேச வேண்டும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. ஒரு சனிக்கிழமை, அதிக தொலைவு இருக்கும் வேறொரு பள்ளிக்கு ஒரு விழாவிற்காக எல்லாருமாக ஒரு பேருந்தில் பயணமானோம். நாள் முழுக்க விளையாட்டு.  அன்றைய மாலைப்பொழுது மிக அழகாக இருண்டது.  மிக வேகமாக பறக்கிற பேருந்தில், அசதி தரக்கூடிய சோம்பலும் அமைதியுமாக அத்தனை பேரும் இருக்கைகளில் சரிந்திருக்கிறோம்.  அவளின் சிகப்பு நிறத்தில் வெள்ளைக் கோடுகள் கொண்ட சட்டையும், குதிரை வால் கூந்தலும் மட்டும் தெரிய, ஆளில்லாத இரண்டு இருக்கைகள் தாண்டி முன்னே ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறாள். தீவிரமான ஏதோ யோசனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் இருக்க, நானும் புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். வெளியே சூழல் இருள இருள, பேருந்தின் விளக்குகள் கொஞ்சம் பெரிய பெரிய புன்னகைகள் சிந்த தொடங்கியது. அப்போதும் ஏதும் பேசவில்லை. ஒரு நாவலின் கடைசி பக்கம் தருவது போல, ஒரு திரைப்படத்தின் முழுமை தருவது போல, அவளுக்குப் பிறகு நான் இறங்க நேர்ந்தது ஏனோ மகிழ்ச்சியைத் தந்தது. அதற்குப் பிறகான நாட்கள் பற்றிய நினைவுகளில் எத்தனை முயன்றும் அவளை பொருத்த இயலவேவில்லை.

அத்தனை அழுக்கான ஆடைகள் அவருக்கு. பாக்கு போட்டு கறை படிந்த பற்கள். முகம் சுளிக்க வைக்கிற தோற்றம். ஆனால் அவர் மது அருந்திவிட்டு வந்திருக்கவில்லை. ஏறியதிலிருந்து தேடித் தேடி மூன்று ரூபாயை சில்லறைகளாக எடுத்து, யாரிடம் தருவது என்று யோசித்து, என்னிடம் தந்தார். அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டுமாம். நடத்துனர் எங்கோ பின்னால் இருக்கிறார்.  எட்டி எட்டிப் பார்த்து விட்டு, இவரிடம் திரும்பி ‘கொஞ்சம் இருங்க’  என்று சொல்வதற்குள் பேருந்து நின்றுவிட்டது. யாரோ ‘பெரிசு உன் இடம் வந்துடுச்சு’  என்கிறார்கள். அவர் ஒரே ஒரு முறை என்னை திரும்பிப் பார்த்தார். எனக்கு ஏதேனும் புரிந்ததா என்று கூட சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் மனதிற்குள் தடால் என்று நானே விழுந்தது போல ஒரு அதிர்வு. ஒரு வேளை இந்த மூன்று ரூபாய் அவருக்கு ரொம்ப முக்கியமோ?  தினசரி தேவைக்குத் தேவையோ? விருட்டென முன்னே நகர்ந்து படிகளை அடைவதற்குள் அவர் இறங்கி விட்டிருந்தார். ‘பெரியவரே’ என்று கூப்பிட்டு சில்லறைகளை கை மாற்றியதும், அவரே அறியாமல் அவர் புன்னகைக்க,  பேருந்து புகை விட்டு புறப்பட்டது. அவர் தந்த சில்லறைகளில் இருந்த லேசான எண்ணைப் பிசுக்கு, விரல்களில் கொஞ்ச நேரம் பிசுபிசுத்தது.

சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு (இந்த நகரத்தில் மிஞ்சியிருந்த கடைசி கல்லூரித் தோழனை வழியனுப்ப) சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் புறப்படுகையில் ரயிலா பேருந்தா என்று யோசித்தேன். பத்தரை மணிக்கு காற்று வாங்கும் பேருந்தில் சில நினைவுகளை அசைபோட்டபடி மிகச்சிலருடன் பயணிக்கலாமென, பேருந்து நிறுத்தத்திற்கு சென்று விட்டேன். ஏராளமான மக்களை அடைத்துக்கொண்டு வந்து நின்றது பேருந்து. சென்ட்ரலில் இறங்கும் போது, எதிர்பார்த்ததை விட அதிகமான நினைவுகளை அசைபோட்டபடி இறங்கினேன்.

எங்கள் ஊரின் ‘எட்டே கால் வண்டி’யோடு ஆறு வருட பழக்கம் இருந்தது. ஏழாம் வகுப்பில் நான் அதில் முதன் முதலில் ஏறியபோது, ‘உன் பேர் என்ன?’ என்று கேட்ட பனிரெண்டாம் வகுப்பு அக்காக்கள், வருடங்கள் உருண்ட பின் புதுத்தாலியோடு கணவனோடு அமர்ந்தபடி என்னைப் பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்து, சென்னைக்கு தொலைந்து போயிருக்கிறார்கள். மொத்த எட்டு வருடத்திலும் இரண்டே இரண்டு ஓட்டுனர்கள், இரண்டே இரண்டு நடத்துனர்கள். நடத்துனரின் மகன் வெவ்வேறு இடங்களில் இறங்கினாலும், நடத்துனர் எங்கே என்று கேட்காமல் டிக்கெட் கிழித்துக் கொடுப்பார். நாற்பது கிலோமீட்டர் பயணிக்கும் பேருந்தில், மொத்தமாக ஒரு பத்து பதினைந்து மாணவ மாணவிகள் இருபதாவது கிலோமீட்டரில் இறங்கிவிட, தினசரி பயணிக்கும் நபர்களுக்கு சுவாரசியமான திரைப்படத்தின் இடைவேளை அங்கே விழும். எங்களுக்கு முன்னே படித்து முடித்தவர்கள் வேலை தேடி எங்களுடனே வருவார்கள். தினசரி மூன்று இருக்கைகள் பிடித்து வைக்கும் பழக்கம் இருந்தது. பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு சென்னை போன நாட்களில் வண்ண ஆடையில் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து சென்றிருக்கிறேன்.  அம்மாவோ அக்காக்களோ அதில் வருவதாக சொல்லிவிடுகிற மாலைப்பொழுதுகளில் அவர்களுக்கு மிகச்சரியான இருக்கைகளை ராஜ மரியாதையுடன் பிடித்து வைத்துக் காத்திருந்திருக்கிறேன். இடது பக்க இருக்கைகளில் வெயில் விழுமென்பதால், எட்டே கால் வண்டியின் வலது புற விலாசம் மட்டுமே நானறிவேன். இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே பேருந்து வரும் –  அதன் நெற்றியில் இரண்டு புருவங்கள் போல தடம் எண் எழுதப்பட்டிருப்பதை வைத்தோ, முன் பற்கள் இரண்டு தகர்ந்திருப்பதை வைத்தோ மட்டும் அல்லாமல், இன்னும் அந்தரங்கமான அடையாளங்கள் கொண்டு அதை அறிந்திருந்தோம்.  தவிர்க்க முடியாத காலைகளில் வேறெதாவது பேருந்து அனுப்பி வைக்கப்பட்டு விடும் பொழுது, வழியில் எதிர் திசையில் வேற்று தடப் பேருந்தாக பொருந்தாத ஆடையணிந்த நபர் போல விரையும் அதைப் பார்த்து, ‘டேய், நம்ம பஸ்ஸு டா!’ என்று சில முறை கத்தியிருக்கிறேன்.

‘எட்டே கால் பேருந்தி’ல் செல்வதற்கான வயது எனக்கில்லை என்று அம்மா நினைத்ததால்,  டவுன் பள்ளியில் படித்த முதல் மூன்று ஆண்டுகள் பள்ளிப் பேருந்தில் சென்றேன். அதை இந்தப் பேருந்துகள் பற்றிய பதிவில் சேர்க்கவே கூடாது.  சொல்லாமல் கொள்ளாமல் சடார் சடாரென திரும்பியும் குதித்தும் ஆனந்த அதிர்வுகள் தந்தபடி, அர்த்தமில்லாத விளையாட்டுகளின் ஆறு  சக்கர மைதானமாக, புழுதி பறக்கிற ஏதேதோ கிராமங்களுக்குள் புகுந்து விரைந்து கொண்டிருந்தது அது.

ஈரம்
‘இப்போதைக்கு கொலையாளியோட பேர மரணம்னு வெச்சுப்போம்’ என்ற ஒற்றை வசனம், அசத்தலான ஒளிப்பதிவு, தலை தெறிக்க வான்நோக்கி பறக்கும் குடை என தொலைகாட்சி டீசர்களிலேயே வசீகரித்த படம். காதல் இல்லாமல் ஒரு தமிழ் சினிமா எடுப்பது அத்தனை எளிதில்லை. ‘வேற எதாச்சும் பண்ணலாமே’ என்று ரூம் போட்டு யோசித்து ஐடியா பிடித்தாலும், அதில் காதலை சவசவ என நுழைத்து சங்கடப்பட வைப்பார்கள். ஸ்ரீதர் காலத்திலிருந்தே இருக்கும் ‘பழைய காதலியை சந்திப்பது’ என்ற விஷயத்தை, ஒரு திரில்லரில் மிகத் திறமையாக நுழைத்து, வேறு திசையில் கியர் கிளப்பி, பலமாக ‘உள்ளேன் ஐயா’ போடுகிறார் இயக்குனர் அறிவழகன். ஒரு புலனாய்வின் துவக்கத்துக்கு தேவையான முரண்களை காதலை பயன்படுத்தி எழுதியது மட்டுமல்லாமல், அவைகளை அட்டகாசமான காட்சிச்சரமாக கோர்த்து வைத்து, ‘ஒரு நல்ல படத்துக்கு வந்திருக்கீங்க, வாங்க’ என்று வரவேற்கிறார்கள். அதை முதல் படத்திலேயே செய்ததற்கு, ஒரு எஸ்ட்ரா ஷொட்டு!

அறிவும் அழகும் மிளிர தெளிவாக யோசித்து விட்டு, நன்றாக திரைக்கதையும் அமைத்து விட்டு (கொஞ்சம் இசகுபிசகு உண்டு), நடிகர்களை கூட கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லிவிட்டு, அறிவழகன் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் துணையுடன் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இவர்கள் நால்வரும் தான் படத்தின் ஹீரோக்கள். (புத்திசாலித்தனமாக, திருட்டு வி.சி.டி நேயர்களுக்குப் பல சுகங்களை திருடியிருக்கிறார்கள்.)

Investigative thriller எடுக்கும் போது, நாயக போலீஸ் அதிகாரியை பார்ப்பவர்களின் ஐ.க்யூ விட கொஞ்சம் அதிகமாக வைப்பது ஒரு வழக்கம். அதுவும் ‘இவன் நல்லா யோசிப்பான்’ என்று நிருபிக்க பல வித்தைகள் செய்ய வைப்பது உண்டு. சில சமயங்களில் அவர்களின் அதிகப்பிரசங்கித்தனங்கள் சிரிப்பை வர வைப்பதும் கூட உண்டு. (ஃபோன் நம்பர்ல மொத்தம் 10 டிஜிட் தான் இருக்கு. இது கண்டிப்பா மொபைல் நம்பர் தான்) அப்படி எந்த முயற்சியும் செய்யாமல், வாசு (ஆதி) நம்மில் ஒருவராகவே வருவது ரொம்ப ஆறுதல். அந்த ‘தூக்க மாத்திரை’ கண்டுபிடிப்பில் மட்டும் அறிவை காட்டி கை தட்டல் பெறுகிறார். மூச்சை நிறுத்தியே நிறுத்து விடுகிற இடைவேளைக் காட்சியில், இது வாசுவின் கையை மீறிய கேஸ் என்று புரிகிற போது, வாசுவின் கதாபாத்திரத்தை கச்சிதமாகவே எழுதியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

‘கொலைக்கான ஆயுதம் H2O’ என்று டிரையிலரிலேயே சொல்லிவிட்டார்கள். தண்ணீரை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்?! ஒரு ஸ்டார் அதற்காகவே அதிகமாக கொடுக்கலாம் போல! வீட்டிற்கு வந்து குழாயை திருப்பியதும் ஒரு நொடி அதை உற்று பார்க்காமல் இருக்க முடியவில்லை.

காய்கறி கடையில் கிசுகிசு ஒன்று பேசப்படுகிறது. ஒரு அம்மாள் இன்னொரு அம்மாளிடம் ஏதோ சொல்கிறார். கேமரா தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. (கிளம்பப் போகிற புரளிப் புயலின் மையம் போல). அந்த அம்மாள் அப்படியே அபார்ட்மெண்டுக்கு நடக்க, கேமிரா அப்படியே எல்லா அபார்ட்மெண்ட்டையும் ஒரு ‘மேற்பார்வை’ பார்க்கிறது. கிசுகிசு பரவி விட்டது என்று அங்கேயே கச்சிதமாக புரிந்து விட, பிண்ணனியில் ஏன் ஒரு நூறு தொலைபேசிகள் அலறி இத்தனை obvious ஆக அதை சொல்ல வேண்டும்? இப்படி படம் நெடுக பல காட்சிகள், almost there-ஆக இருக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியை வைத்தே படத்தை அழகாக தராசில் நிறுத்தலாம். சின்னக் குழந்தை தரும் முத்தம் கொள்ளை அழகு; ‘அவரோட, என்னோட தப்பு’ என்று சொல்லிவிட்டு வலது கையால் காஃபி குடிப்பது – அறிவு; ஆனால், பாலாவுக்கு உண்மை தெரியணும்னு ரம்யா ஆசைப்படலியா என்ற சின்னக் கேள்வி – நெருடல்;

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை விட, செத்து செத்து விளையாடுகிற சைட் ஆர்டிஸ்ட்டுகள் கவனம் ஈர்க்கிறார்கள். ஆனால், ‘ஒவ்வொரு நல்லவனுக்குள்ளயும் கெட்டவனும், ஒவ்வொரு கெட்டவன்குள்ளேயும் ஒரு நல்லவனும்’ இருக்கிற கலிகாலத்தில், செத்துப் போகிற சைட் ஆர்டிஸ்ட்டுகள் அதை justify செய்வது போல, முழுக்க முழுக்க கெட்டவர்களாக அமைத்திருப்பது, என்னதான் கதைக்குத் தேவையான perfect worldஆக இருப்பினும், லேசாக நெருடல். டீச்சர் மாமனார் பேப்பர் திருத்திக் கொண்டே பேசுவது, ஸ்ரீரங்கத்து தங்கச்சி சென்னையிலும் காலேஜ் பையை நெஞ்சோடு கட்டிக்கொண்டே இருப்பது, ரம்யா (சிந்து) ரொம்ப கேஷுவலாக ‘பிரிவோம் சந்திப்போம்’ படிப்பது என டீடெய்ல்ஸ் யோசித்தவர்கள், பாலா (நந்தா) கதாபாத்திரத்தை இத்தனை கெடுத்திருக்க வேண்டாம். ‘பிப்ரவரி 31 என் பொறந்த நாள்னு சொன்னா நம்புவீங்களா’ போன்ற அழகிய வசனங்களுக்கிடையே, பாலா சும்மா சும்மா ‘எனக்கு செகண்ட் ஹாண்ட் கார் பிடிக்காது’ என்று சொல்வது கடுப்படுக்கிறது.

ஒன்று ஓவர் இன்னொஸெண்ட்டாகவோ, இல்லை ஓவர் பேச்சாகவோ சுற்றிக் கொண்டிருந்த சரண்யா மோகனை, தலையில் தட்டி தண்ணீர் குடிக்க வைத்திருக்கிறார்கள். ரகசியம் பேசும் போது நந்தியாக வருகிற அம்மாவை விரட்ட, ஒரு புருவ உயர்த்தலில் சமையலறை பாத்திரத்தை உருட்டி உடைக்கையில், நெஞ்சில் கலீர்!

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு ஒரு எக்ஸ்ட்ரா பாராட்டு. கோப்பையில் மாத்திரைகளை போடுவதில் கூட அழகு காட்டுகிறார். ஸ்ரீரங்கத்து மாமனாரை அறிமுகப்படுத்துகையில் ‘பிராமண கதாபாத்திரம்’ பிண்ணனி இசைக்கு உபயோகபடுத்துகிற க்ளீஷே வாத்தியங்கள் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் இடித்தாலும், தமனின் பிண்ணனி இசை ஜில் திரில்.

கல்யாணி கதாபாத்திரத்தின் சாவுக்கு வந்துவிட்டு வாசு வெளியே, வந்த கூட்டத்தில் யாரோ ‘உயிரோட இருந்தப்ப எப்படி வயித்தெரிச்சல கொட்டிகிட்டா’ என்று போகிற போக்கில் பேசுவது, அபார்ட்மெண்ட் மீட்டிங்கில் பிரச்சினைகள் பட்டியலில் ‘ஹோமம்,வாஸ்து’ என்று சொல்லிவிட்டு கட்டக் கடைசியாக ‘பேச்சிலர்ஸ துரத்துங்க சார்’ என்று சேர்ப்பது, மாறு வேடப் போட்டி சின்னப் பெண் பேய் முகத்துடன் பயமுறுத்துவது (பின்நவீனத்துவம்?!   ), ஒவ்வொரு மரணத்தையும் மிகக்கச்சிதமாக அரங்கேற்றியது, வாதத்துக்குறிய விஷயத்தை நெருடாமல் கொண்டு சென்றது, இதமான இயல்பான காதல், பழைய காதலில் மீது காதலன் கொண்ட நம்பிக்கை, மனைவி மீது கணவன் கொண்ட சந்தேகம் என பலப்பல விஷயங்களில் ஈர்க்கிறார் அறிவழகன்.

அடுத்த படம் எப்போ சார்?

கொஞ்சமே வருகிற ‘தரையிறங்கிய பறவை’ பாடலோடு சேர்ந்து தலையாட்டியபடி கொறிக்க; ‘அங்க பாரேன் தண்ணி சொட்டுது’ என்று பரபரவென கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுகொள்ள; மரணங்கள் நிகழ்கையில் எல்லாம் வாயை பிளந்தபடி, பாப்கார்ன் பாக்கெட்டை மறந்திருக்க!

தொடர்ந்து, கவன ஈர்ப்புப் படங்களை தீர்மானத்தோடு கொண்டு வருகிற எஸ் பிக்ஸர்ஸுக்கு, சியர்ஸ்!

காமிராமேன் மனோஜ் பரமாஹம்ஸாவிற்கு ஒரு எக்ஸ்ட்ரா ட்ரிங்க்!

‘அந்த தொட்டி மீன் சிக்குறது, அக்வேரியத்துல கடல்கன்னிக்கு திடீர்னு ‘மூச்சு முட்டுறது’ எல்லாம் செம செம்பாலிஸம்ல?’, ‘கடைசி ஃபைட்டுல வாசு முகத்த இருட்டாவே காட்னது செம ஸ்மார்ட்ல?’ என்றெல்லாம் பேசியபடி வெளியேறுவதால் EXIT boardஐ பார்க்காமல் நடக்கலாம். அப்படியே பார்த்தாலும், ‘ஹே இதுவும் செகப்பு கலர்’ என்று நினைக்கலாம்!

செகண்ட் செலக்ஷன்
எங்கள் கார் ஐ.ஐ.டி.யின் பரந்து விரிந்த வளாகத்தின் ஏதோ ஒரு தனி மரத்தை முட்டியபடி நின்றுக்கொண்டிருந்தது. மேலிருந்து சருகுகள் வேலையில்லாமல் முன் கண்ணாடியில் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. உள்ளுக்குள் மெதுவாக நேரத்தை படிப்படியாக எண்ணியபடி தாண்டிக்கொண்டிருந்த நான், சரியாக பத்து நிமிடம் ஆனதும் கேட்டேன். ‘போலாமா?’

அவர் என்னைப் பார்த்தார். திரும்பி மீனுவை ‘போலாமா?’ என்பது போல பார்த்தார். அவள் தான் உத்தரவு தர வேண்டும்.

மீனு பின் சீட்டில் உட்காருவதற்கும் நிற்பதற்கும் இடையே ஏதோ ஒன்றை சிரமமின்றி செய்துகொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் உருண்டு பிரண்டிருப்பாள் என்பது என் யூகம். ‘டூ மினிட்ஸ் டாட்’.

இன்று அவளுக்கு ரிஸல்ட் வருகிறது. நெட்டிலே தெள்ளத் தெளிவாக போட்டுவிடுவார்கள். இன்று காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம் கழுவியதும் எங்களை இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். பொட்டு வைக்க சொன்னால் வைக்கவில்லை. சண்டை வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தேன்.

இரண்டு நிமிடங்கள் இன்னும் ஆகவில்லை. இருந்தும் கேட்டேன். ‘மீனு, போலாமா?’ மீனு எதுவும் சொல்லாமல் இருந்தாள். வெயில் என் பக்கம் சுள்ளென அடித்துக்கொண்டிருந்தது. ‘அதான் நெட்லயே போடறாங்களே?. வீட்டுலயே பாத்துருக்கலாம். ரிடிகுலஸ்’. என்னால் சும்மா இருக்க முடியவில்லை.’டோண்ட் யூ எண்ஜாய் திஸ் த்ரில் மாம்?’ மீனுவின் குரலில் முதல்-முறை-ஆச்சரியம் பாசாங்கோடு இருந்தது.

சண்டை வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன். ‘இதென்னா ப்ளஸ்டூ ரிஸல்ட்டா, சுவத்துல ஒட்டி வெக்க? அதெல்லாம் செய்வாங்களோ மாட்டாங்களோ? நீங்க போய் முதல்ல விசாரிங்க’. இவர் மேலே எரிந்து விழுந்தேன். மனுஷன் நகரவில்லை.

மீனு எழுந்து அமர்வது கேட்டது. மூச்சை இழுத்து பெருமூச்சாக விட்டாள். ‘ஈஸி, ஈஸி’ என்றாள். திரும்பிப் பார்த்தேன். தியான நிலையில் அமர்ந்திருந்தாள். ‘டாட், நீங்க போய் பாருங்க. ஐ வில் ஸ்டே ஹியர்’.சொல்லி முடிப்பதற்குள் இவருக்குள் மின்சாரம் பாய்வது போல, சட்டென இறங்கிவிட்டார். கிளம்பும் முன் மீனுவைப் பார்த்து ஒரு தம்ஸ் அப்.

அமைதியாக அந்த ப்ளாக் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். முன்னிரு சீட்டுகளின் நடுவே மீனு தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிடங்களில் இவர் வெளியே வந்தார். தளர்ந்த நடை. அவர் நடந்து வரும் வரை எனக்கு பக் பக் என்றிருந்தது. ‘என்னாச்சு?’

‘அது.. ஒரு சின்ன குழப்பம்..’

‘டாட், ப்ளீஸ், சீக்கிரம்’

‘உன் பேர் இருக்கு டியர். ஆனா உன் பேரான்னு தெரியல.. பேர் பக்கத்துல ஒரு ப்ராக்கெட் போட்டு 2னு எழுதியிருக்கு’

‘ஷிட். டாட், நான் இனிஷியல் குடுக்கல.. உங்க பேர முழுசா சேத்து குடுத்திருக்கேன். மீனாட்சி ஸ்பேஸ் சங்கர். இஸ் தட் வாட் யு சா?’

‘ம்’ என்றார்.

‘காட்…’ மீனுவுக்கு பி.பி ஏறியது.

‘இவ நம்பர் தெரியாதா உங்களுக்கு. அத போட்டிருப்பாங்களே?’

‘சரியா நினவில்லமா.. டேட் ஆஃப் பெர்த்தும் சேம்..’

‘மீனு, உன் நம்பர் சொல்லு..’

‘மாம், டோண்ட் ஆஸ்க் மீ. டோட்டலி ப்ளாங்க். ஷிட் ஷிட். டாட், ஏன் எனக்கு இந்த பேர் வெச்சீங்க.. வேற பேர் வெச்சிருக்க கூடாதா?’

எனக்குப் பத்திக்கொண்டு வந்தது. அப்பாவும் பெண்ணும் சரியான முட்டாள்கள். தண்ணீர் தெளித்து விட முடியாமல், கூட தரதரவென இழுபட்டுக் கொண்டிருக்கிறேன். வெளியே இறங்கியபடி ‘நான் போய் பாக்குறேன்’ என்றேன். ‘வெயிட் மாம்..’ மீனுவும் இறங்கினாள்.

அது மீனு இல்லை. மீனாட்சி சங்கர் தான். அதே பிறந்த தேதி தான். ஆனால் மீனு இல்லை. இவள் மீனாட்சி சங்கர் (1). அந்த அட்மின் ஆஃபீஸில் இருந்த வெள்ளை சட்டை நபர் சங்கடமாக சிரித்தபடி மறுத்தார். அந்தப் பெண் இப்போது தான் வந்து பணம் கட்டுவது பற்றிக் கேட்டுவிட்டு போனாளாம்.

மூவருமாக திரும்பி நடக்க ஆரம்பித்தோம். அடுத்து என்ன? வேறெதாவது எக்ஸாமாக இருக்கும். அடுத்த மாப்பிள்ளை ஃபோட்டோவை கையில் எடுக்க வேண்டும்.

வீடு வந்து சேர்ந்ததும், இவர் என்னிடம் தனியாக ‘அது அவ நம்பர் இல்லேனு எனக்கு அப்பவே தெரியும். சொல்லல’ என்றார். ‘ரொம்ப சந்தோஷம்‘ என்றேன்.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். மீனு மும்பைக் கல்லூரி ஒன்றின் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தாள். இந்த சமயம் பார்த்து வந்த வரன்களும் சரியாக இல்லை. என்ன செய்வது என்று விழித்துக்கொண்டிருந்த ஒரு மதிய நேரம், செக்யூரிட்டி காபி கலர் கவரை கொண்டு வந்து நீட்டினான். மேலே ஐ.ஐ.டி. அச்சிட்டிருந்தது. என்னவென்று பார்ப்பதற்குள் இவர் பிடுங்கிக்கொண்டு மேலே ஓடிவிட்டார். இரண்டு நிமிடங்கள் பிடிவாதமாக உட்கார்ந்துவிட்டு, நானும் மேலே போனேன்.

மீனு இப்படியும் அப்படியுமாக தலையை ‘இல்லை’ என்று ஆட்டிக்கொண்டிருந்தாள். கட்டில் மேலே ஏறி நின்றிருந்தாள். ‘இது அந்த ஜம்போ வேலயா இருக்கணும். திஸ் ஈஸ் ஃபேக். ராஸ்கல்’ சிரித்தபடி மொபைலை எடுத்தாள். நான் லெட்டரை வாங்கிப் படித்தேன்.

‘செகண்ட் ரவுண்ட் ஆஃப் செல்கஷனில் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறீர்கள் மிஸ்.மீனாட்சி சங்கர். உடனே வந்து பணம் கட்டவும். குறைவான அவகாசம் தந்தமைக்கு வருந்துகிறோம்’. தெள்ளத் தெளிவாக இது ஐ.ஐ.டி கடிதமென தெரிந்தது. மீனுவும், ஜம்போவோ டம்போவோ, அவன் இல்லையென அறிவித்தாள். பத்தாவது நிமிடம் கார் வெளியே புறப்பட்டது.

இந்த முறை நல்லவேளையாக மீனு காரை அந்த மரத்தடியில் நிறுத்த வேண்டுமென்றாலும் சொல்லவில்லை. போனதும் மூவரும் இறங்கி நடக்கத் துவங்கினோம். அதே அட்மின் ஆஃபீஸ். அதே ஆள். அதே சங்கட சிரிப்பு.

‘வெரி ஷார்ட் நோட்டீஸ் இல்லீங்களா?’  அரசாங்க-வருத்தம் தொனித்தது அவர் குரலில்.

‘தட்ஸ் ஓகே. நாட் எ ப்ராப்ளம்’ என்றார் இவர்.

‘நல்லது. எவ்ளோ சீக்கிரம் பணம் கட்ட முடியுமோ கட்டிடுங்க. மேலே கவுண்ட்டர் இருக்கு. நெக்ஸ்ட் வீக் கோர்ஸ் ஸ்டார்ட் ஆயிடும். எனி கொஸ்ட்டீன்ஸ், எங்கிட்ட வாங்க.’

‘பட், இந்த செகண்ட் செல்கஷன்.. இதுக்கு முன்ன நடந்த மாதிரி தெரியல.. மே ஐ நோ..’ மீனு கேட்டதும், நான் அவளை திரும்பிப் பார்த்தேன். எதற்கு இந்த அநாவசியம்?

‘ஷ்யூர். ஆக்ச்சுவலி வெரி அன் எக்ஸ்பெக்டட். ஒரு கேண்டிடேட் ஃபீஸ்லாம் கட்டிட்டு போயிட்டப்புறம் ஆக்ஸிடெண்டுல இறந்துட்டாங்க. தே இன்ஃபார்ம்ட் அஸ் வெரி லேட். அவங்க மேல தப்பு இல்ல. ஸோ, அடுத்து இருந்தவங்கள கூப்பிட்டோம். லக்கிலி, யு ஹாவண்ட்ட் மூவ்ட் டு அதர் காலேஜஸ்..’

‘ஓ..ஒகே..’ நாங்கள் யாரும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.

‘டூ யு ரிமம்பர்.. நீங்க அன்னிக்கு வந்து விசாரிச்சீங்களே.. அந்தப் பொண்ணு தான்.. உங்க டாட்டரோட நேம்.. சேம் டேட் ஆஃப் பெர்த்…’

‘ஓ..’ என்னையறியாமல் சொன்னேன். மீனுவையும் அவரையும் பார்த்தேன்.

‘வெரி அன்ஃபார்ச்சுனேட். அவங்க பாரண்ட்ஸ் ரீஃப்ண்டுக்கு வந்திருக்காங்க. ரொம்ப சங்கடமா இருக்கு. ஒரே பொண்ணு’.

இன்னும் பத்து நிமிடங்கள் அவரே பேசிவிட்டு, அவரே விடை கொடுத்தார்.

என்னால் வேறெதுவும் யோசிக்க முடியவில்லை. யாரந்த பெண்? அன்று அப்படி இப்படி என்று எங்காவது பார்த்திருப்போமோ? சே. பாவம். இவரும் அவளும் ஃபீஸ் எப்போது வந்து கட்டுவது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் முன்னால் நடந்து. காரை வந்தடைந்தேன். இவர்களும் வந்தபின், கார் கிளம்பியது.

அடுத்த நொடி நகரும் என்று நினைத்தபோது, மீனு ‘டாட்’ என்றார். இவர் வண்டியையே நிறுத்தி விட்டார். ‘நீ என்ன சொல்லப்போறேன்னு தெரியும் டியர்’ என்றார்.

‘என்னது‘ என்றேன். இது ஒரு ஆறேழு வருஷமாகவே நடக்கிறது. எனக்கெதுவும் புரிவதில்லை. ஏதோ ஏடாகூடம் என்று மட்டும் தெரியும். ‘என்னனு சொல்லுங்க‘ மீனுவைப் பார்த்தேன்.

‘ஐ வாண்ட் டூ ஸீ ஹெர் பாரண்ட்ஸ்’ என்றாள்.

‘வாட்? டோண்ட் பீ சில்லி’‘

‘ஐ வாண்ட் டூ. டாட், வரீங்களா?’

‘ஷ்யூர்’

‘அறிவில்லாம பேசாதீங்க ரெண்டு பேரும். யாரையும் பாக்க வேண்டாம். அவங்களே கஷ்டத்துல இருப்பாங்க. நம்ம கிளம்பலாம்’.

நான் சொல்லி முடிப்பதற்குள் மீனு காரை விட்டு இறங்கி முன்னால் வந்தாள். இவரும் இறங்க முற்பட்டார்.எனக்கு கோபம் தலைக்கேறியது. நானும் இறங்கினேன்.

‘ஹவ் இன்ஸென்ஸிட்டிவ் யு ஆர் மீனு? இதென்ன சினிமாவா? போய் என்ன பேசுவ அவங்க கிட்ட? என்ன உங்க பொண்ணு மாதிரி நினச்சிக்கோங்கனு பினாத்துவியா? யார எப்போ பாக்கலாம்னு கூட உனக்கு தெரியல? எல்லோமே ‘திரில் எக்ஸ்பீரியன்ஸ்’ ஆயிடுச்சு உனக்கு. யு ஷுட் நாட் கோ’ பொரிந்து தள்ளினேன்.

‘வாட் நான்ஸென்ஸ்’ என்று சொல்ல வந்த மீனு, வாயை ‘வா’ விலேயே வைத்துக் கொண்டு தோள்களை கொஞ்சம் மேலுயர்த்தி என்னையே ஆச்சரியமாக அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இவர் அந்தப் பக்கத்தில் இருந்து நடந்து வந்தவர் இவளைப் பற்றிக்கொண்டார்.

‘டென்ஷனாகதம்மா.. நாங்க போயிட்டு உடனே வந்துடறோம்.’

மீனுவை இழுத்துக்கொண்டு அவர் நகர்ந்தார். மீனு என்னையே திரும்பிப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தாள். வாய் இன்னும் ‘வா’விலேயே இருந்தது. எனக்கென்று வந்து பிறந்திருக்கிறது.

போய் அவர்களை அழவைத்து விட்டு வரப்போகிறார்கள். பணக்காரத் திமிர் என அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். ‘கொஞ்சம் அப்படி போறீங்களா’ என்று வெடிக்கப் போகிறார்கள். நான் சி.டி. ப்ளேயரை ஆன் செய்தேன். வெக்கையாக இருப்பது போல பட்டது. ஏ.சியை போட்டுக்கொண்டேன். மேலிருந்து சருகுகள் வேறு கார் முன் கண்ணாடியில் விழுந்து விழுந்து வெறுப்பேற்றிக்கொண்டிருந்தது. என்னால் அங்கிருக்க முடியவில்லை.

வெளியே இறங்கி வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஐந்து, பத்து என நிமிடங்கள் கழிந்தன. அரை மணி நேரம் கழிந்ததும், அப்பாவும் பெண்ணுமாக வெளியே வந்தார்கள் கை கோர்த்துக்கொண்டு. மீனுவின் இன்னொரு கையில் ஒரு பெரிய பை. என்னைப் பார்த்ததும், மீனு ஓடி வர ஆரம்பித்தாள். நான் கார் கதவை திறந்து உள்ளே அமர்ந்துகொண்டேன்.

‘மாஆஆஆஆஆம்’. மூச்சு வாங்குவதும் ஓடுவதுமாக என்னை வந்தடைந்தாள். நான் நிமிர்ந்து ஒரு முறை முறைத்து விட்டு, பொத்தாம் பொதுவாக எங்கேயோ வெறித்துப் பார்த்தேன்.

‘மாம், தே ஆர் ஸோ ஸ்வீட். ஓ காட், சாண்ஸே இல்ல’. நானெதுவும் பேசவில்லை.

‘யூ நோ, ஹர் மாம் ஈஸ் ஸோ ஹோம்லி. பெரிய பெரிய கண்ணு. சாஃப்ட் வாய்ஸ். அழகா தலையாட்டி ஆடி பேசினாங்க. யு மிஸ்ட் மாம்”

‘வாட்டெவர்‘ என்று சொல்லிவிட்டு, உள்ளே திரும்பிக்கொண்டதும் அவள் கையில் இருந்த பை நினைவுக்கு வர, வெடுக்கென திரும்பி, ‘அதென்ன கைல?’ என்றேன். ‘இதுவா..’ என்றிழுத்த மீனுவின் குரல் ரைம்ஸ் சொல்லும் சின்னக்குழந்தையினுடையது போல மாறியது. ஏதோ பெரியமனுஷத்தனமான பேச்சு வரப்போகிறது என்று அர்த்தம்.

மீனு பின்னால் உட்காரப் போனாள். இவரும் வந்து முன்னால் வந்து அமர்ந்துகொண்டார்.

‘அந்தப் பொண்ணு என்ன மாதிரியே இல்ல மாம். நீட்டு முடி. ஸ்பெக்ஸ். . பயங்கர படிப்ஸ். இங்க சீட் கிடச்ச உடனே ஏகப்பட்ட புக்ஸ் வாங்கிருக்கா. அவங்க அம்மா எனக்கு குடுத்துட்டாங்க’.  நான் பின்னால் திரும்பாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மீனு அப்படியே தாவி முகத்தை இரண்டு சீட்டுக்குமிடையில் முகத்தை நீட்டியபடி தொடர்ந்தாள். ‘ஃப்ரெண்டஸோட எங்கயோ கார்ல போறப்போ ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சாம். ஸ்பாட்லயே ஷீ பாஸ்ட் அவே. ரொம்ப அழுதாங்க. பட் போகப் போக நல்லா பேசினாங்க. தே ஃபெல்ட் குட் மாம்.’

‘ம்‘

‘ஐயோ. கோவப்படாத மாம். வீ டிண்ட் ஹர்ட் தெம். அவங்களுக்கு மனசு கொஞ்சம் லேசாகும்னு தான் போனேன். அட் டைம்ஸ் யு ஃபீல் டெல்லிங் மோர் டூ ஸ்டிரேஞ்சர்ஸ். நிஜமா மாம். டாடிய கேட்டுப் பாரு. டாட், தே ஃபெல்ட் குட் ரைட்?’

‘யா.. கண்டிப்பா..’

‘ம். நீதான் வரல’ என் தோளை தொட்டாள்.’போ மாம் நீ’.பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.

கொஞ்சம் நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டுத் நான் திரும்ப, அந்தப் பையை சீட்டின் மேலே அப்படியே கவிழ்த்திருந்தாள். ஏராளாமான புத்தகங்கள். ‘ஓ மை காட்…எவ்ளோ புக்ஸ்’ – மீனு அவற்றை ஆராயத் தொடங்கினாள்.

திடீரென முன்னே வந்தவள், ஒரு புத்தகத்தை நீட்டினாள். அதில் அழகான கையெழுத்தில் பெயரும் தேதியும் எழுதியிருந்தது. ஒரு பிள்ளையார் சுழி. மீனு அப்படியே புத்தகத்தை புரட்டிக் காட்ட, உள்ளே எங்கோ ஒரு ஸ்டிக்கர் பொட்டு. இவர் லேசாக புன்னகைத்தார்.கொஞ்சம் நேரத்திற்குப் பின், ‘மாம்’ என்றாள்.

‘ம்’

‘இங்க பாரேன்’

‘என்ன சொல்லு”

‘பாரேன் சொல்றேன்’

திரும்பினேன்.

‘கோவிச்சாகதயேன் ப்ளீஸ். நான் வேணும்னா பொட்டு வெச்சுக்குறேன்’. புத்தகத்திலிருந்த பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து ஈயென இளித்தாள்.

நிறைய சிரிப்பு வந்தாலும், கொஞ்சமாக சிரித்தேன்.