அருகில் வரு
‘ஹீரோவும் ஹீரோயினும்.. ரொம்ப சாஃப்ட் சாங் சார்.. தொட்டும் தொடாமலே அப்படிம்பாங்களே… அது தான் மொத்த பாட்டுமே சொல்லணும்.. ஒரு மழை பெய்யுற ஈவினிங்ல..’ என்று எந்த இயக்குனரும் என்னிடம் சொல்லவில்லை என்றாலும், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் நானே சொல்லி நானே எழுதியது.
விரல் நுனியில்
பூவானம்
தலை திரும்பி பூக்கும்
இருவிரல் மௌனங்கள் தீர
தீராததாய் மழையின் சொல்
துளியினையே
நீ தீண்ட
நமக்கிடையே மழை நீளும்
—–
இடைவெளிகள் கொண்டாலும்
அறிந்திடாமல் தாண்டும்
கனவினுள்ளே கண் தூங்கிப் போகும்
பிள்ளை முகம் போலவே
மனம் சரியுமே உன் தோளில்
—–
இதழ் பெருகும் இச்சொல்லில்
இருந்திடாதோ முத்தம்
ரகசியம் போல் நீ கண்டுணர்ந்து
புன்னகைத்தால் போதுமே
இதழ் ஸ்பரிசம் நிறைவாகும்
—–
கொசுறு – மளையாளத் திரைப்பாடலான ‘அருகில் வரு‘ மெட்டிற்கு எழுதியது. கொசுறுக்குள் கொசுறு – அதற்கு இசை ‘ஆரோமலே’ அல்ஃபோன்ஸ். கொசுறுக்குள் கொசுறுக்குள் கொசுறு – அதன் ஒரிஜினல் நோரா ஜோன்ஸினுடையது.
கொசுறு #2 – இதழ் பெருகும் ‘இச்‘சொல்லில் என்பதை கவனித்தீர்கள் தானே?
கொசுறு #3 – மளையாளத் திரைப்படமான ‘எலக்ட்ரா’வில் நடித்த நயன்தாராவிற்காக எழுதப்பட்டது. பாடல் அழகாக இருப்பதில் ஆச்சர்யமில்லை தானே?

பாட்டு சரியா ஞாபகம் இல்ல. வந்த புதிதில் ஓரிரு முறை கேட்டது. இந்த வரிகளுடன் கேட்டு விட்டு வருகிறேன். Flashback-ல வர்ற Flacshback மாதிரி கொசுறு க்குள் கொசுறு ?
ஆமா படம் வந்த மாதிரியே தெரியலையே! இன்னும் நயந்தாராதானா? அவங்களுக்கு அடுத்த மாசம் கல்யாணம்
Kaarthik Arul
மே 5, 2011 இல் 9:15 பிற்பகல்
Superb
//துளியினையே
நீ தீண்ட
நமக்கிடையே மழை நீளும்// – அடடா மழைடா ‘சிறுமழை’டா
//இடைவெளிகள் கொண்டாலும்
அறிந்திடாமல் தாண்டும்
கனவினுள்ளே கண் தூங்கிப் போகும்
பிள்ளை முகம் போலவே
மனம் சரியுமே உன் தோளில்// – அருமை!
//இதழ் பெருகும் இச்சொல்லில்
இருந்திடாதோ முத்தம்
ரகசியம் போல் நீ கண்டுணர்ந்து
புன்னகைத்தால் போதுமே
இதழ் ஸ்பரிசம் நிறைவாகும்// – இது நச்
ரீட்வீட்/ரீஷேர் பண்ற மாதிரி பின்னூட்டத்திலேயே ரேபோஸ்ட் பண்ணிட்டேன் போல
So, credit goes to Nayanthara
Kaarthik Arul
மே 5, 2011 இல் 9:40 பிற்பகல்
Kaarthik – தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி
Credit always goes to Nayanthara
aravind
அக்டோபர் 25, 2011 இல் 10:42 பிற்பகல்