சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

பயாஸ்கோப் #1

18 மறுமொழிகளுடன்

இது ஒரு தமிழ் சினிமா ஆராய்ச்சி தொடர். நாட்டுக்கு ரொம்ப தேவை என்பதால் ரூம் போட்டு யோசித்து எழுதத் தொடங்குகிறேன் .

இந்த முறை தமிழ் சினிமாவில் வந்த தற்கொலை காட்சிகள். இது வரை வந்திருக்கும் பற்பல காட்சிகளில் இருந்து, உங்களுக்காக ‘அழகான’, ‘திறமையாக செதுக்கபட்ட’ தற்கொலை காட்சிகளை ஆராய்ந்து வழங்குவது சேடிஸ்ட் அரவிந்தன்! டிஸ்க்ளெய்மர் #1 – கணமான விஷயத்தை பற்றி பேசுவதால், கலாய்த்தல் தொனியில் எழுதியிருக்கிறேன். டிஸ்க்ளெய்மர் #2 – தற்கொலை செய்துகொள்வது உங்கள் உயிருக்கு கேடு! இனி, எனக்குப் பிடித்த ஐந்து காட்சிகள்.

245dddf0e8தற்கொலை காட்சிகளின் மன்னன், ‘புன்னகை மன்னன்’  திரைப்படத்தில் வருகிறது. அந்தஸ்த்து பிரச்சினையால் சேர முடியாத காதலர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து, லோக்கல் கடவுளின் முன்னால் பூமாலை மாற்றிக்கொண்டு, பின்னர் சில பல காரியங்கள் செய்து முடித்து விட்டு, அருவிக்கு முன்னால் வந்து நிற்கும் போது, நமக்கு பி.பி ஏறுகிறது. கமல் ஒன்று, இரண்டு என எண்ணத் தொடங்கி, பின்னர் ‘கிளிகள் முத்தம் தருதா, அதனால் சத்தம் வருதா’ எல்லாம் முடிந்து, ஒரே ஜம்ப்பு ஜம்ப்ப, ரேகா மாத்திரம் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பரலோகம் போய்விடுகிறார். மரத்தில் மாட்டிக்கொண்ட கமல், கொஞ்ச நேரம் ‘அ, ஆ, இ, ஈ’ சொல்லி விட்டு,  உயிர் தேறிவிடுகிறார். இது தான் தமிழ் சினிமாவின் அதி முக்கிய காதல் தற்கொலை காட்சி. அதற்கும் பின்னர் சித்தப்பா கமல் அட்வைஸ் செய்வது, அத்தனை அதி முக்கிய காட்சியாக எடுத்துக்கொள்ளப் படாமல் போய் விட்டது. காதலில் தோல்வியற்ற தமிழக காதல் ஜோடிகள், இதே போல் ஸ்டெப் பை ஸ்டெப் ஃபால்லோ செய்து விட்டு, கடைசி நேரத்தில் புத்திசாலித்தனமாக ஓடி விடுவார்கள் என நம்புவோம். வாலி, எஸ்.பி.பி, ராஜா, கே.பி, கமல், ரேகா என எல்லோரும் எழுதிய ஒரு அழகான சிறுகதை.

அடுத்தது, தமிழ் சினிமாவின் மிக டிரமாடிக்கான தற்கொலை. 329142_f260கே.பி.யின் இடது கை வண்ணம். (மேலே படித்தது வலது). காதல் மன்னன் ஜெமினி கணேசனை தோழிமார்கள் சrougeஆ தேவியும், வாணிஸ்ரீயும் காதலிக்க, நட்பும் காதலும் நாற்பத்தைந்து டிகிரியில் ஒன்றை ஒன்றை வெட்டிக்கொள்ளும் முக்கோணக் காதல் கதை. Film-in-film என்பது மிகப் பாப்புலரான திரைக்கதை உத்தி, அதைப் போல, இந்தப் படத்தில், novel-in-film என்ற அழகான உத்தியில் முக்கோண கதையையே தொடர்கதையாக எழுதுகிறார் சrougeஆ தேவி. தன் கடைசி அத்தியாயத்தை தூக்கமாத்திரைகளை எண்ணி எண்ணி, தன் சொந்தக் கதை சோகக் கதையை எண்ணி எண்ணி, ஆம்புலன்ஸ் எண் தெரியாத நாகேஷஇ தொலைபேசியில் பதறி சிதற வைத்தபடி எழுதும் கண்ணீர்க் காட்சி. கன்னடத்துப் பைங்கிளி உயிரைக் கொடுத்து நடித்திருந்தார். படம், தாமரை நெஞ்சம்.

ஊரையே உயிர் கொல்லி நோய் ஆட்டிபடைக்க, ஊரை மிகவும் நேசிக்கும் குடிவானவி ஒருத்தியின் வீட்டுக்கு இரவொன்றில் ஒரு கிழவி வருகிறாள். பச்சிலை கலந்த நீரை ஊர் முழுக்க தெளித்தால் உயிர்கொல்லி நோய் ஓடி விடும் என்று சொல்லி, திரும்பி வரும் வரை இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன் என்று காட் பிராமிஸ் செய்கிறாள். வீட்டை விட்டு வெளியே வந்து குடியானவி உயிர்கொல்லி நோயை விரட்டத் துவங்க, ‘அந்தம்மா சாப்டுச்சோ இல்லியோ’ என்று விருந்தோம்ப விரைய, கொடுத்த வாக்கை மீறி வீடு திரும்ப, ரம்யா கிருஷ்ணன் உக்கிரமாக அமர்ந்திருக்க, ஊருக்காக உயிர்த்தியாகம் செய்ய முடிவெடுத்து, அப்படியே ஓடிப்போய் கிணற்றில் விழுந்து பக்தி மார்கத்தை அடைகிறார். கச்சிதமாக எடிட்டிங் செய்யப்பட்ட அடுத்த காட்சியில் அம்மன் அறுபது டிகிரியில் நிமிர்ந்து காமிராவை பார்க்க, புல்லரிக்க வைக்கும் தற்கொலை காட்சி. ‘அம்மன்’ படத்திற்கு எளிமையான ஸ்தல புராணத்தையும் விளக்கி வைத்து, படத்தை துவக்கியது இந்தக் காட்சி.

‘ஏன் தற்கொலை? எதுக்கு? என்ன காரணம்’ என்ற கேள்வியை பார்வையாளர்கள் மத்தியில் எழ வைப்பது திரைக்கதை வண்டிக்கு நல்ல மைலேஜ் தரும் டீசல். அதையும் மீறி ‘இதுக்காகவா?’ என்று ஆச்சரியப்படுத்தியது ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் பாவனாவின் அப்பா தற்கொலை செய்துகொள்வார். பின்னர் உண்மையான காரணம் திகில் டிவிஸ்ட். ஒரு தற்கொலை கணத்தின் பதற்றைத்தை குழப்பத்தை மிக அருமையாக படம் பிடித்திருந்தார்கள். ‘என்ன ஏன் இப்படி வளத்தேபா? உன்னால தான் எல்லாம். நீ தான் எல்லாத்துக்கு காரணம்’ என்று பாவனா புலம்பிக்கொண்டிருக்க, மேஜையை துடைத்துக்கொண்டிருக்கும் அப்பா (அவர் வரும் பெரும்பாலான காட்சிகளில் ‘அழுக்கை’ துடைத்துக் கொண்டேயிருப்பார்!), அபப்டியே தளர்ந்து நடந்து சென்று தூக்கி தொங்கி விடும் காட்சி சிறப்பாக வந்திருந்தது.

‘ஜாதி என்னம்மா?’ என்ற கேள்வி ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் மீனாவையும் பார்த்திபனையும் பிரிக்க,  பார்த்திபனை மடக்க எல்லா முயற்சிகளுக்குப் பின்னர், ‘வெச்ச மருதாணி காயறதுகுள்ள போயிட்டியே’ என்று ஒப்பாரி வைக்க ஏதுவாய், பார்த்திபனின் தங்கையிடம் மனதார பேசி விட்டு, கால் கைகளை கட்டிக்கொண்டு விட்டு, கிணற்றுக்குள் மீனா தொபுக்கடீர். அதை கொஞ்சம் செண்டிமெண்டல் வால்யூம் குறைவாக காட்டியவர்கள், பின் தொடரும் பார்த்திபனின் தற்கொலையை நம் மூஞ்சில் கை வைப்பது போல (on-the-face) ஆக காட்டிருப்பார்கள். தற்கொலை காட்சியோடு முடியும் மற்றொரு படம்.

நாமினேட் செய்யப்பட்ட மற்ற சில காட்சிகள் -  கொலைகார காமுக மருமகனை கொல்வதற்காக, ஜன்னல் கதவு எல்லாம் சாத்தி விட்டு, காஸ் சிலிண்டரை திறந்து வைத்து விட்டு, கொஞ்ச நேரம் பிரகாஷ்ராஜை டார்ச்சர் செய்து விட்டு, அருமையான அண்டர்ப்ளே செய்துவிட்டு செத்துப் போகும் பூர்ணம் விஸ்வநாதன் (ஆசை).  ‘உங்க புக், உங்க புக்க விட்டுட்டீங்க’ என்று கீர்த்தனா ஓடிவர, அந்த தாடிக்கார சக்கர வண்டி இளைஞன் (தற்)கொலைத் தாக்குதல் நடத்துவது (கன்னத்தில் முத்தமிட்டால்). கீர்த்தனாவின் இலங்கையைப் பற்றிய collective memoryக்கு அந்த காட்சி நிறையவே அர்த்தம் தந்தது. சமையல் வேலை செய்கையில் செத்துப்போனால் பணம் கொடுப்பார்கள் என்பதால் தீக்குளித்து செத்துப் போகும் ‘ஜென்டில்மேன்’ மனோரமா, ‘அல்லி அர்ஜுனாவில்’ ஈவ் டீஸிங்கால் தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் விஜயகுமாரின் மகளொருத்தி (நேற்று காலை கே.டி.வி.யில் போட்டார்கள்).  ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் வந்து காப்பாற்றிவிட்டதால், ஜோதிகா ரிஜக்டெட்.

இதையும் தாண்டி, வறுமை, காதல், கண்றாவி போன்ற பல காரணங்களுக்காக சினிமாவில் செத்துப்போன பலர் உண்டு. ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் ஒரு அழுமூஞ்சி நாயகி எதற்கோ செத்துப்போனதாக நினைவு. ஆங், அப்புறம் வேலுநாயக்கரை காப்பாற்ற தீக்குளித்து செத்துப்போகுமே அந்தப் பாட்டி, எல்லாருக்கும் நமது கண்ணீர் அஞ்சலிகள்.

ரைட்டு, கடைசியாக, தமிழ் சினிமாவின் தற்கொலைகளை ஆராய்ந்த சைக்கியார்ட்டிஸ்ட் அரவிந்தன் வழங்கும் ‘A detailed study of the various reasons that made the Tamizh cinema characters suicidal’.

suicidal

Written by aravind

அக்டோபர் 25, 2009 இல் 1:19 பிற்பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with

18 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Superru.. :-) )

    Karthikeyan G

    அக்டோபர் 25, 2009 இல் 2:37 பிற்பகல்

  2. அருமையாக தொகுத்து எழுதி இருக்கிறீர்கள். வானமே எல்லை யின் தீமே இதுதானே? அதில் யாரும் சாகவில்லை என்பதால் விட்டு விட்டீர்களா?

    அசத்தல்

    முரளிகண்ணன்

    அக்டோபர் 25, 2009 இல் 3:29 பிற்பகல்

    • நன்றி நண்பரே. நினைவில் அந்தப் படம் சிக்கவில்லை. அதில் வருகிற தற்கொலை நாடகம் மிகச்சிறந்த காட்சி.  வருகைக்கு நன்றி :)

      aravind

      அக்டோபர் 27, 2009 இல் 10:42 மு.பகல்

  3. I thought annalakshmi’s suicide in Virumaandi was powerfully shot too!! Great read.. tharkolaya kooda kaamedy aakita…:D :D not only hero’s sister.. hero voda wife/girlfriend kooda villain kita maatikitapram tharkola panikradhum adhuku hero pazhi vaangradhum namma regular story knot

    Amilie

    அக்டோபர் 26, 2009 இல் 8:57 மு.பகல்

  4. theres also one more Category..
    “Parents committing suicide due to AVAMAANAM created by their child (especially daughters)”

    Karthikeyan G

    அக்டோபர் 26, 2009 இல் 11:54 மு.பகல்

  5. என்ன sir ரொம்ப நாளா ஆளை காணோம்…any way நல்ல பதிவு….wishes

    Rose

    அக்டோபர் 26, 2009 இல் 8:57 பிற்பகல்

  6. அரவிந்த்!
    சுவரில்லா சித்திரங்கள் – குடும்பத்திற்கே விஷம் அரைத்துக் கொடுத்துத் தானும் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் (இதைப் பார்த்து நான் அழுதிருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும்!)

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    venkatramanan

    அக்டோபர் 27, 2009 இல் 8:09 மு.பகல்

    • அப்ப என் மெமரி கரெக்ட் தானா? பரவாயில்ல, அழலாம் தப்பில்ல. இங்க கண்ணீர் அஞ்சலி தானே செலுத்துகிறோம் ;)

      aravind

      அக்டோபர் 27, 2009 இல் 11:36 மு.பகல்

  7. அரவிந்த் அருமையான இடுகை. நல்ல ஃப்ளோ.

    கடைசி சார்ட் கலக்கல். அப்புறம் கற்பிழந்த ஹீரோவின் தங்கச்சிகள் = ஹீரோவின் கற்பிழந்த தங்கச்சிகள் னு ஒரு ஈகுவேஷனையும் போட்டிடுங்க. :)

    நந்தா

    நவம்பர் 2, 2009 இல் 4:46 மு.பகல்

    • நந்தா – மறுமொழிக்கும் வருகைக்கும் நன்றி :) என்ன வித்தியாசம்? புரியலியே :roll:

      aravind

      நவம்பர் 8, 2009 இல் 2:41 பிற்பகல்

  8. பாசமலர் படத்துல சிவாஜி செத்துபோறது கூட எனக்கு தற்கொலை மாதிரிதான் படுது.

    jeevanbennie

    நவம்பர் 4, 2009 இல் 12:58 பிற்பகல்

    • ஜீவன் – எனக்கு சரியா நினவில்ல. விசாரிச்சு பாத்த, உண்மையா இருந்தா அவருக்கும் சம்மன் அனுப்புவோம் :)

      aravind

      நவம்பர் 8, 2009 இல் 2:42 பிற்பகல்

  9. உங்களுடைய பிரசண்டேசன் அருமையிலும் அருமை. ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

    சாணக்கியன்

    நவம்பர் 15, 2009 இல் 5:45 பிற்பகல்

    • நன்றி :) இல்லைங்க. இப்போலாம் ரூம் வாடக ஜாஸ்தி கேக்குறாங்க :P

      aravind

      நவம்பர் 16, 2009 இல் 11:47 மு.பகல்


மறுமொழி இடுக