இறகுகளும் கொஞ்சம் காதலும்
நதியினில்
தன்னுருவத்தை
கண்டபடி
அமர்ந்திருக்கும்
மரத்தின் பறவை
தன் பிம்பத்தை
கலைக்கிறது
இறகொன்றை
உதிர்த்து
——-
இறகுகளை
புத்தகத்தினுள்
மிகப்பத்திரமாக
பாதுகாப்பவர்கள்
அறிந்தேயிருக்கிறார்கள்
பறவையின்
ஏதோவொரு
ரகசியத்தை
—————
வீட்டுக்குள்ளே
அடைந்து கிடப்பவர்களின்
ஜன்னலில்
நனைந்த பறவை
உதிர்த்துவிட்டுச் செல்கிறது
மழையிறகை
——-
பறந்து பறந்து
தீருவதில்லை
பறவைகளுக்கு
வானில்
அலையும்
சிறகுகள்
பூமியில்
அலையும்
இறகுகள்
—————-
தலை நிமிர்ந்து
பார்க்கையில்
உதிர்த்துவிட்டாய்
ஒரு புன்னகையை
அசைந்தசைந்து
இதமாய் விழுந்தது
மனதின் ரகசியப் படியில்
பின் காற்றடிக்கும்
போதெல்லாம்
படபடக்கிறது
மனது
——————————————————————————————————-
புகைப்படம்: http://www.jeffschneiderman.com
Arpudam!
Romba naal kazhichu, Oru uyirotamulla Tamizh kavidhai padichadilla alaviladangaa santhosham!
Naanum kavidhaigal ezhudaren…Mudinjaa en valaipadip pakkam vandhu paarunga:)
http://www.tamizhkaalangal.wordpress.com
Nandri!:)
Archana
ஜூன் 29, 2009 இல் 12:11 பிற்பகல்
Archana – மனமார்ந்த நன்றிகள். உங்கள் பதிவைக் கண்டேன். வாழ்த்துகள். தொடந்து எழுதுங்கள்.
aravind
ஜூலை 9, 2009 இல் 5:10 பிற்பகல்