சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

கவிதை இரவு இரவு கவிதை

10 மறுமொழிகளுடன்

night

வழிகள் தெரியாமல்
அகண்டு விரிந்த பலகையின் மேலே
இருண்ட திசையில்
ஊர்ந்துகொண்டிருந்தேன்
சிறிய பூச்சி போலே

திடுமென
ஒரு தலைகீழ் திருப்பம்

பார்த்தால்
பகலாகியிருந்தது!

************

ஆளில்லாத சமவெளியில்
ஒற்றை மரமாக
நின்றிருந்தேன்
தலைக்கு மேல் பெருமேகமென
இரவு என்னை கடக்க.

—————————————————————

தட்டிவிட்ட குவளையின் நீர் போல
மெதுவாக என்னை வந்தடைந்தது
உள்ளறையின் ஒலிகள்.
அம்மா நாளிதழால் விசிறிக்கொண்டிருக்கிறாள்.
சின்ன அக்கா தொட்டிலை
முன்னிழுத்து பின்னே
முன்னிழுத்து பின்னே தள்ளிக்கொண்டேயிருக்கிறாள் .
என் விழிகளை கூடவே அசைத்துப் பார்க்கிறேன்.
பெரிய அக்கா தூங்கி விட்டாள் போலும்.
சொந்த ஊரின் மின்வெட்டுகளைப் பற்றி
அம்மா பேசத்துவங்குகிறாள்
ரகசியம் போன்ற குரலில்.
திரும்பிப் படுக்கையில் வளையல் ஒலிகள்.
வியர்வை கலந்த பெருமூச்சுகள்.
‘அபி தூங்கிட்டான் போல’ என்று
அக்காவிடம் சொல்கிறாள்.
எனக்கு பெரும் புன்னகை வருகிறது.
மெல்ல மெல்ல ஒலிகள் தேய்ந்து
அமைதியில் கலந்தோம்.
பெரும் சத்தத்துடன்
மின்விசிறிகள் சுழலத் துவங்கின.
மின்சாரம் வந்ததும்
எல்லாரும் துண்டிக்கப்பட்டோம்.

************

ஒரு வீட்டிலிருந்து
மற்றொன்றுக்கும்
பின் வேறோன்றுக்குமாக
தாவிக்கொண்டு
ஊரைச் சுற்றி வந்து கொண்டிருந்தது
கறுப்புப் பூனையொன்று
கடிகாரச் சத்தங்களின் மீதேறி
நடந்தபடி.

Written by aravind

மே 26, 2009 இல் 3:32 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

10 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. //ஆளில்லாத சமவெளியில்
    ஒற்றை மரமாக
    நின்றிருந்தேன்
    தலைக்கு மேல் பெருமேகமென
    இரவு என்னை கடக்க

    //மின்சாரம் வந்ததும்
    எல்லாரும் துண்டிக்கப்பட்டோம்

    Epdi boss epdi??

    Really glad that i knew u by person :)

    Vignesh

    மே 26, 2009 இல் 5:01 பிற்பகல்

  2. அழகான கவிதைகள்

    yarl

    மே 26, 2009 இல் 6:07 பிற்பகல்

  3. அருமையான..கவிதைகள்.வாழ்த்துக்கள்.

    uumm

    மே 27, 2009 இல் 8:36 மு.பகல்

  4. கவிதைகள் ரொம்பவும் பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்

    Karthikeyan G

    மே 27, 2009 இல் 11:47 மு.பகல்

  5. Vignesh – Thanks! Am equally glad that i know you in person :D

    Yarl – வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அன்பரே.

    Uma – வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழி.

    Karthikeyan – மகிழ்ச்சி நண்பரே. நன்றிகள்!

    aravind

    மே 27, 2009 இல் 2:57 பிற்பகல்

  6. Nyabagam airukka! Sorry couldnt come here for a long while, romba azhagana kavithagal,

    barath

    மே 29, 2009 இல் 12:05 பிற்பகல்

  7. ஹலோ நண்பா,
    நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் இந்த சிறுகதை போட்டியை பற்றி.. இல்லையெனில் இந்த லிங்கை க்ளிக்கவும்..

    http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html
    http://naayakan.blogspot.com/2009/05/blog-post.html
    http://naayakan.blogspot.com/2009/05/blog-post_22.html
    http://tamil.blogkut.com/contest-uraiyadal.php

    Saravana Kumar MSK

    ஜூன் 2, 2009 இல் 5:28 மு.பகல்

  8. கவிதைகள் வழக்கம் போல அதகளம்.. :)

    Saravana Kumar MSK

    ஜூன் 2, 2009 இல் 5:29 மு.பகல்

    • நன்றி நண்பா! :)

      கதைப் போட்டி பற்றி அறிந்தேன். தகவலுக்கு நன்றி. கைவசம் கதைகள் ஏதும் இல்லை :)

      aravind

      ஜூன் 2, 2009 இல் 5:01 பிற்பகல்


மறுமொழி இடுக