சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

வீடு திரும்புதல்

8 மறுமொழிகளுடன்

ஒரு சிக்னலில் இருந்து
மற்றொன்றுக்கு
பைத்தியமென விரைகின்றது வாகனம்.
எங்கள் பேருந்து
உறுமிக்கொண்டிருக்கும்
சமீபத்திய குத்துப்பாடலின் வரியொன்றை
அடித்து
வேறொன்றை எழுதிச்செல்கிறது
வலப்பக்கமாய் முன்னேறும் வாகனம்.
தாமதத்தால் சுருங்கும் முகங்கள்
வழியெங்கும்.
முன்னாலும் பின்னாலும்
தொடர்கிறது
நெரிசல்.

அச்சமூட்டுவதாக உள்ளது
இப்பெருநகரம்
இப்போது நிகழ்த்திக்கொண்டிருக்கும் சடங்கு
வீடு திரும்புதல்
என்பது.

——————————————

நீரடைத்த பொலீத்தீன் பையில்
இரு மீன்களோடு
ஆற்றங்கரையில் இருந்து
நடக்க நடக்க
தொலைவாகிக்கொண்டிருக்கிறது
வீடு

——————————————-

குளிர் மலையிலிருந்து
வீடு திரும்புகிற நானும்
முன்பொரு நாள்
வெயில் பிரதேசத்திலிருந்து
வீடு திரும்பிக்கொண்டிருந்த நானும்
சந்திக்கிற புள்ளியில் இருக்கிறது
என் வீடு

—————————————

எல்லாம் எடுத்து வைத்தாயிற்று
எல்லாரிடமும் சொல்லியாயிற்று
விடாமல் சிந்திக்கொண்டிருக்கிறேன்
புன்னகைகளை.
‘ஏழு மணிக்கு தான் ட்ரெயின்
இன்னும் நேரம் இருக்கு’
என்று சொல்லிக்கொண்டாலும்
என்னை இடித்துக்கொண்டு
குடுகுடுவென
பையுடன் ஓடுவான்
பள்ளிக்கூடம் விட்டதும்
ஓடியே வீடு திரும்பிய
என் சின்னவயது நான்!

—————————

Written by aravind

மார்ச் 21, 2009 இல் 10:19 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

8 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. மிக அழகான கவிதைகள்…
    எதார்த்தத்தையும் கலை நயத்துடன் பார்க்க வைப்பதில் தங்களை மிஞ்ச ஆளில்லை அரவிந்தன் அவர்களே!! :)

    Amilie

    மார்ச் 23, 2009 இல் 3:50 மு.பகல்

  2. அரவிந்த்.. அலுவலகத்தில் உச்சக்கட்ட ஆணிகள் மத்தியில் இந்த பின்னூட்டம்..
    இந்த கவிதைகள் சாதாரணமாய் இருந்திருந்தால், ஆணிகளை தொடர்ந்திருப்பேன்.. பின்னூட்டம் எழுதி இருக்கமாட்டேன்..

    ரொம்ப அருமையான கவிதைகள்..
    ரொம்ப ரொம்ப அழகான கவிதைகள்..
    இன்னும் எப்படி சொல்றதுனே தெரியல.. அவ்ளோ அருமை..

    எந்த கவிதையை அல்லது வரிகளை தேர்ந்தெடுத்து.. அவ்ளோ குழப்பம்..

    //நீரடைத்த பொலீத்தீன் பையில்
    இரு மீன்களோடு
    ஆற்றங்கரையில் இருந்து
    நடக்க நடக்க
    தொலைவாகிக்கொண்டிருக்கிறது
    வீடு//

    இக்கவிதை செம.. செம..

    Saravana Kumar MSK

    மார்ச் 24, 2009 இல் 8:11 மு.பகல்

  3. சான்ஸே இல்லை அரவிந்த்.. இன்னும் கலக்குங்க.. :)

    Saravana Kumar MSK

    மார்ச் 24, 2009 இல் 8:12 மு.பகல்

  4. அமீலி – நன்றி! நீங்க சொன்னத கேட்டு நான் பசிஃபிக் ஓஷன் மேலே பறந்துட்டு இருக்கேன். :D கூடிய சீக்கிரம் பூமிக்கு இறங்கி வந்துடுவேன் :P

    aravind

    மார்ச் 24, 2009 இல் 3:27 பிற்பகல்

  5. சரவணா – நண்பா! உன்கிட்டே இருந்த இத கேட்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! :D நன்றி நன்றி நன்றி! {பவ்யமா தலை வணங்கி சொல்றேன்!} :D

    aravind

    மார்ச் 24, 2009 இல் 3:28 பிற்பகல்

  6. //நீரடைத்த பொலீத்தீன் பையில்
    இரு மீன்களோடு
    ஆற்றங்கரையில் இருந்து
    நடக்க நடக்க
    தொலைவாகிக்கொண்டிருக்கிறது
    வீடு
    //
    Ahaa super!!

    அடடா இத்தனை நாள் இந்த நல்ல Blog miss ஆய்டுச்சே… :(

    Karthikeyan G

    மார்ச் 26, 2009 இல் 1:08 பிற்பகல்

  7. சற்றே தாமதமாய்……….

    “இது எப்படி இருக்கு?”
    என்று
    நீ
    முதல் கவிதைக்கு வித்திட்டு,
    கேட்ட காலம் தொட்டே,
    உன்னுடன்
    நான் பயணிக்கிறேன்!!!

    என் கருத்து
    நீ கேட்ட நாள் போய்
    உன் கருத்து (சில)
    எனக்கெட்டாமல் ஆன
    நாள் இன்று!!!

    காரணம்…….
    நான் கவிதை புனைவதை
    நிறுத்திவிட்டேன்.

    நீயோ வருணன்!!!
    இயற்கையில் வருனன் பொய்த்தாலும்
    பொய்யாது பெய்துவிட்டாய்
    சிறு மழையில்!!!

    நல்
    யாழின் இசையாய்
    சிறு மழையில்
    உன்
    பதிவுகள்!

    அறிவுடை ஒருவனை
    அரசனும் விரும்புவான்!
    இதற்கு
    உனக்கு எழுதப்படும்
    மறுமொழிகளே சான்று!

    மூன்று ஆண்டுகள் முடிவில்……..

    அட!
    சிறு மழையா??
    இல்லை..

    பெரும் புனல்
    உருவாகும் ஊற்று!!!!

    இன்னும் இப்புனலில்
    பயணிக்க விரும்பும்

    தமிழ்
    வாழ்த்துகள்!

    தமிழ்

    மார்ச் 27, 2009 இல் 7:52 மு.பகல்

  8. Karthikeyan – வாவ்! நன்றி! மீண்டும் வருக!! :D

    தமிழ் – என்ன சொல்ல ?! :D நன்றிகள் பல!

    aravind

    April 7, 2009 இல் 5:35 பிற்பகல்


மறுமொழி இடுக