சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

தேநீரில் ஸ்நேகிதம்

5 மறுமொழிகளுடன்

சிப் #1 – (விவிதபாரதி விளம்பரக்குரலில் படிக்கவும்) “உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? காதலுக்கு வீட்டில் எதிர்ப்பா? வரும் சனிக்கிழமை பெங்களுவுக்கு உங்கள் ஆளுடன் வந்து தெருக்களில் டேட்டிங் செய்து திரியவும். ஓசியில் முறைப்படி அவசரத் திருமணம் செய்து வைக்கப்படும். ரிஜிஷ்ட்ரேஷன் செலவு முற்றிலும் இலவசம்!! உடனே அணுகவும், ராம் சேனா, மங்களூர்! டிங் டிங் டி டிங்!”

#2 – எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி. அது எப்படி ஒரு காலத்தில் அருமையான படங்கள் எடுத்தவர்கள், திடீரென மரண மொக்கையான படங்களை எடுக்கிறார்கள்? அந்தத் திறமை எப்படி வருகிறது? சில வாரங்களுக்கு முன் தொலைகாட்சியில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ படம் போட்டிருந்தார்கள். சரி, ஃபாசில் படமாச்சே, அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் உண்டே (கொஞ்சம் திற) என்று பார்த்தால்.. சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். எப்படி?! ஒரு பக்கம் ஸ்ரீகாந்த் பிழிந்து பிழிந்து நடிக்கிறார், மறுபக்கம் சோனியா அகர்வால் அதை ட்ரையரில் போட்டு காய வைக்கிறார். எல்லாரையும் விட, ஸ்ரீகாந்தின் அப்பாவாக வருபவர் அமளி துமளியான நடிப்பு. நட்ட நடு ராத்திரி வரை தொலைக்காட்சியை மூக்கு முட்டியபடி அமர்ந்து திரு திருவென விழித்தது தான் மிச்சம்.

#3 – சென்னை மாநகர போக்க்குவரத்து கழகத்தின் மாதாந்திர வருமானத்தை கோடு போட்ட நோட்டில் எழுதுகையில் ‘தராமல் ஏப்பம் விட்ட ஐம்பது காசுகள்’ என்ற தனி column உண்டா என்பது பற்றிய தகவல் எனக்கில்லை. இந்த மாநகரில் ஒரு நாளுக்கு ஒரு ஜீவராசிக்காவது சரியான சில்லறை திரும்ப கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை. அது நீங்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது பேராசை. இந்தப் பிரச்சினையை தீர்க்க வழியே இல்லையா? மிகச்சிறப்பான யோசனை ஏதேனும் இருந்தால் கமெண்டில் அடிக்கவும்.

#4 – மேற்சொன்ன விஷயத்தை நீங்கள் யாரிடமாவது பேசி முடிக்கையில், ‘இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறதே!’ என்று வியக்க உங்களுக்கு உரிமை இல்லை. ‘பகல் கொள்ளை’ என்ற வார்த்தை தன் அதிர்ச்சித்தன்மையை (Shock factor?!) இழந்த நாளாகிவிட்டது. எல்லா கொள்ளையும் இப்போது பகலில் தான் நடக்கிறது. ‘பட்டப் பகலில்’ என்று சொன்னால் கூட அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. இதே போல, தமிழ் பேசும் மக்கள் ‘தண்ணி பட்ட பாடு’ என்ற phraseஐ தண்ணி பட்ட பாடாக உபயோகித்துக்கொண்டிருந்தார்கள். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு அந்த வார்த்தை தாகத்தை தணித்தது. இது போல தங்களின் உபயோகத்தை இழந்த வார்த்தை கோர்வைகளை எடுத்தாராய்ந்து சென்னை பல்கலைகழத்தில் ஆ.ஞானப்பிரகாசம் என்பவர் ஆராய்ச்சி இன்னும் செய்யவில்லை. (பெயர் சும்மா உபயோகித்தேன். யாரும் சண்டைக்கு வராதீர்கள், ப்ளீஸ்.)

#5 – ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் ஏன் காம்ப்ளான் வருகிறது என்று முதலில் என் அம்மாவிற்கு புரியவில்லை. பின்னர், காம்ப்ளான் விளம்பரத்தில் ஹார்லிக்ஸ் வந்தது. ‘இதையா தின்றீங்க? இதுல, அது அப்புறம் அது, ஐயோ அது வேற இருக்கு. சீச்சீ’ என்கிறார்கள். அதிலும், அதில் அபாராமான நுணுக்கமான விஷயங்கள் திணித்திருந்தார்கள். (ஹார்லிக்ஸ் அம்மா-பையன் நீல கலரில் உடை; காம்ப்ளான் ஜோடி காபி கலரில்). என்னவோ, இதை குடிக்காதவர்களுக்கு மூளையே வளராதது போல. என்னைப் போன்ற அறிவாளிகள் எல்லாம் அதை அப்படியே தின்றோ, இப்படியோ தின்றோ ஒன்றும் மூளை வளர்க்கவில்லை. சரி, நான் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள். சொந்த ஊரில் பல குழாயடிச்சண்டைகளை கண்டு களித்த எனக்கு, இது, ஜீன்ஸ் அணிந்த மங்கைகள் குழாயடிச்சண்டை போடுவது போல இருந்தது.

#6 – நான் படித்து ரசித்த ஒன்று – எங்கள் அலுவலக காஃபி கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த feedback நோட்டில், காஃபி தருபவர் பற்றி எழுதியிருந்த அழகழகான பாராட்டுகள். படித்து நெகிந்த ஒன்று – நடிகர் பிரபுதேவாவின் மகனின் உடலை தங்கள் நிலத்தில் சில காரணங்களினால் புதைக்க முடியாமல் போக, நடிகர் பிரகாஷ்ராஜ் தானே முன்வந்து தன் தோட்டத்தில் தன் மகனை புதைத்த இடமருகே புதைக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.

#7 – ‘அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது / சடப்பொருட்களின் ஒழுங்கு’ என்றும், ‘ஓர் அடிமுட்டாள் / அயோக்கியன் / அதிபுத்திசாலி / ஒரு ஞானி / நால்வரும் குளத்தில் குதித்தனர் / ஒரே மாதிரி தான் / வட்ட வட்டமாக வந்தது’ என்றும் சிக்கன வார்த்தைகளில் கவிதை சொல்லி மனசைப் பிடிக்கிறார், கவிதாயின் தென்றல். தி.நகரில் வாங்கிவிட்டு, 12B பிடித்து வீடு வருவதற்குள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். மொத்தம் 89 கவிதைகள். விருப்பமுள்ளவர்கள் படித்துப் பாருங்கள். (நீல இறகு – தென்றல் – உயிர்மை பதிப்பகம் – ரூ.60 – 96 பக்கங்கள்)

#8 – இந்த வார பாடல் டெடிகேட் – ‘Where is the party?’ (சிலம்பாட்டம்) – To, ராம் சேனா! ;)

Written by aravind

பெப்ரவரி 8, 2009 இல் 3:08 பிற்பகல்

எண்ணங்கள், தொடர் இல் பதிவிடப்பட்டது

Tagged with

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. // (விவிதபாரதி விளம்பரக்குரலில் படிக்கவும்)
    விவிதபாரதி ங்கறது யாரு?? உங்க அத்த பொண்ணா??

    //சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். எப்படி?!
    (இப்போ உங்களுக்கு இந்த பாடல் டெடிகேட் பண்ணறேன்) காலம் செஞ்சா கோலமடா கடவுள் செஞ்ச குத்தமாடா ..

    // இந்தப் பிரச்சினையை தீர்க்க வழியே இல்லையா? மிகச்சிறப்பான யோசனை ஏதேனும் இருந்தால் கமெண்டில் அடிக்கவும்.
    கணக்குல வாராத காச கணக்கு காட்டறதுக்கு அம்பது பைசா டிக்கெட் போட்டு கணக்கு காட்றதா எப்பவோ படிச்ச ஞாபகம்.. என்ன ஆச்சுன்னு தெரியல!! ஆனாலும் இது ஒரு மொக்க திட்டம்!!

    //தண்ணி பட்ட பாடு’
    அப்படினா என்ன ?? டாஸ்மாக் மேட்டர் வெச்சு கலைனரும் டாக்டரும் அடுச்சுகராங்கலே அதுவா ??

    //காஃபி தருபவர் பற்றி எழுதியிருந்த அழகழகான பாராட்டுகள்
    பாராட்டவும் ஒரு பக்குவம் வேண்டும்!!

    //நடிகர் பிரபுதேவாவின் மகனின் உடலை தங்கள் நிலத்தில் சில காரணங்களினால் புதைக்க முடியாமல் போக, நடிகர் பிரகாஷ்ராஜ் தானே முன்வந்து தன் தோட்டத்தில் தன் மகனை புதைத்த இடமருகே புதைக்கும்படி கேட்டுக்கொண்டாராம்
    ரொம்ப நெகிழ்வான சம்பவம் தான்!!

    //#7 -
    படிக்க முயற்சிக்கிறேன்!! எங்க போய் வாங்கணும் ??

    //இந்த வார பாடல் டெடிகேட் – ‘Where is the party?’ (சிலம்பாட்டம்) – To, ராம் சேனா!

    பாத்துங்க அவங்க இத படுச்சுட்டு “உங்க வீட்ல பார்ட்டி” வெச்சரபோறாங்க!!

    Bhuvanesh

    பெப்ரவரி 10, 2009 இல் 7:25 மு.பகல்

  2. cool post as always!!! :-)

    Pavithra Vijay

    பெப்ரவரி 10, 2009 இல் 3:48 பிற்பகல்

  3. //நடிகர் பிரபுதேவாவின் மகனின் உடலை தங்கள் நிலத்தில் சில காரணங்களினால் புதைக்க முடியாமல் போக, நடிகர் பிரகாஷ்ராஜ் தானே முன்வந்து தன் தோட்டத்தில் தன் மகனை புதைத்த இடமருகே புதைக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.

    எல்லாவற்றையும் தாண்டிய இந்த புரிதலும், மனிதாபிமானமும் அங்கங்கே தென்படும் பொது மனது நெகிழ்ந்துவிடுகிறது.

    kunthavai

    பெப்ரவரி 12, 2009 இல் 4:54 மு.பகல்

  4. புவனேஷ் – விவதபாரதி வந்து… சரி வேணாம் விடுங்க. மொக்கையாகிட போகுது.

    சும்மா அக்கு வேறு ஆணி வேறா ஆராஞ்சிருக்கீங்க. :) ஆனா, கடைசில வெச்சீங்களே பன்ச்சு! ;)

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி புவனேஷ்.

    aravind

    பெப்ரவரி 19, 2009 இல் 4:11 மு.பகல்

  5. Pavithra – Thanks! :)

    குந்தவை – உண்மை. வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றிகள்.

    aravind

    பெப்ரவரி 19, 2009 இல் 4:11 மு.பகல்


மறுமொழி இடுக