பிளாட்ஃபாரம் எண் 6 – சில குறிப்புகள்

தடதடவென
உள்ளே வந்த ரயில்
இடித்து கொண்டு முன்னேறியது
ஏழே முக்கால் பிளாட்ஃபாரமை.
கடைசி பெட்டி
வெளியேறுகையில்
பின் விட்டு செல்லும்
எட்டு மணி பிளாட்ஃபாரமை.
*****************
இந்த எக்ஸ்ப்ரெஸ் வண்டி
இது வரை
கடந்திருக்கிறது
ஆறு ரயில்களை.
மூன்று பாசஞ்சர்,
ஒரு கூட்ஸ்,
நிற்காமல் கடந்த
ரெண்டு பிளாட் ஃபாரங்கள்
எல்லாம் சேர்த்து.
*****************
இந்த
எடை பார்க்கும் மிஷின்கள்
பிறந்தது
வளர்ந்தது
எல்லாம்
இதே
பிளாட் ஃபாரத்தில்
தானா?
*****************
யானைப்பிளறல் ஒன்று கேட்கிறது.
மடை திறந்தது போல
ஆயிரம் வார்த்தைகள்
அமைதியாக பேசிக் கொண்ட
விழிகளுக்கிடையில்
நீளத் துவங்கியது
ரயில்.
*****************
ரயில் புறப்பட்ட போன பின்
கசக்கி எறியப்படுகின்றன
காலி காஃபி கோப்பைகள்
பிளாஸ்டிக் கவர்கள்
மற்றும்
சொல்லாமலே விட்டு விட்ட
சில வார்த்தைகள்
//இந்த எடை பார்க்கும் மிஷின்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இதே பிளாட் ஃபாரத்தில் தானா?//
பின்றான்யா!
venkatramanan
ஜனவரி 22, 2009 இல் 5:08 மு.பகல்
வெங்கட்!
எப்படி இப்படி மின்னல் மாதிரி! நன்றி நண்பரே!
aravind
ஜனவரி 22, 2009 இல் 5:23 மு.பகல்
நண்பரே.. அரவிந்த்.. எப்படி இருக்கீங்க..
கொஞ்ச நாளாவே.. இல்லை இல்லை.. ரொம்ப நாளாவே உங்க பதிவு பக்கம் வர முடியல..
Saravana Kumar MSK
ஜனவரி 24, 2009 இல் 5:56 பிற்பகல்
//இந்த எக்ஸ்ப்ரெஸ் வண்டி
இது வரை
கடந்திருக்கிறது
ஆறு ரயில்களை.
மூன்று பாசஞ்சர்,
ஒரு கூட்ஸ்,
நிற்காமல் கடந்த
ரெண்டு பிளாட் ஃபாரங்கள்
எல்லாம் சேர்த்து. //
அட்டகாசம்.. மிக அழகு..
Saravana Kumar MSK
ஜனவரி 24, 2009 இல் 5:57 பிற்பகல்
//ரயில் புறப்பட்ட போன பின்
கசக்கி எறியப்படுகின்றன
காலி காஃபி கோப்பைகள்
பிளாஸ்டிக் கவர்கள்
மற்றும்
சொல்லாமலே விட்டு விட்ட
சில வார்த்தைகள் //
அசத்தல்.. அருமை..
Saravana Kumar MSK
ஜனவரி 24, 2009 இல் 5:57 பிற்பகல்
ரயில் கவிதைகள் எல்லாமே அழகு.
வாழ்த்துக்கள்.
Surya
ஜனவரி 24, 2009 இல் 8:38 பிற்பகல்
சரவணா,
நன்றி நன்றி நன்றி நண்பா. உனக்கு இவை பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
சூர்யா,
வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி அன்பரே.
aravind
ஜனவரி 25, 2009 இல் 4:53 மு.பகல்
Thalaiva,
Pinreeeeeeeeeeeeeengale!!!!
Good Work again!!!!
~Pavithra Vijay
Pavithra Vijay
ஜனவரி 25, 2009 இல் 3:54 பிற்பகல்
Thanks Pavithra
aravind
பெப்ரவரி 19, 2009 இல் 4:07 மு.பகல்
ரயில் கவிதைகள் நன்றாக இருக்கின்றன .
இப்போதுதான் உங்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
படித்துவிட்டு தொடர்கிறேன். வாழ்த்துக்கள்.
kavin
April 30, 2009 இல் 3:24 பிற்பகல்
கவின் – நன்றிகள்
aravind
மே 17, 2009 இல் 4:56 பிற்பகல்
கவின் – நன்றி
aravind
மே 3, 2009 இல் 4:39 பிற்பகல்
nice. enjoyed
PUGAZH
மே 5, 2009 இல் 6:59 மு.பகல்