கடவுள் 24 X 7
நல்லவர்களின் மரணத்திற்கு
கடவுள் அழுவார்
என்றறிவித்தவனின் தெருவில்
அதிகாலை மழையாகப்
பெய்ய வேண்டும்.
நூறு சதுர அடி அறையில்
கை மறதியாக வைக்கப்பட்ட
பத்து பைசாக்களின் மீது
பட்டப் பகலில்
விளக்கடித்து காட்ட வேண்டும்.
பரிதவித்து நிற்பவர்களுக்கு
தெய்வக்களை கொண்ட யாரோவாக
உதவி செய்ய வேண்டும்.
மயிரிழையில் உயிர் தப்பியவன் முன்
பிரகாசப் பேரொளியாக
அருள வேண்டும்.
கெடு முடிவதற்கு சற்று முன்னர்
நிறைய நிகழ்த்த வேண்டும்.
விழுந்து விழுந்து படிக்கப்பட்ட
முக்கிய கேள்வியாக
கேள்வித்தாளில் கறுப்பாகச் சிரிக்க வேண்டும்.
அதிக வேண்டுதலுக்கு உட்படுத்தபட்டிருக்கும்
பழுத்து தொங்கும் ஆப்பிள் பழத்தை
கிருபையின் மூலம்
கீழே வேறு விழ வைக்க வேண்டும்.
இத்தனைக்கும் நடுவில்
கவனிக்க முடிவதில்லை
பிரார்த்தனைகளுடன் மலையேறும் போது
கழுத்தில் மிதிபட்டு
இறக்கும் மக்களையும்
யாரோ தவற விட்ட பையை
எடுத்தோடி செல்லுகையில்
வெடித்துச் சிதறும் பிள்ளைகளையும்.
sathiyamana vaarthaigal!!
itharku mel ennal porumaiyaga iruka muiyathu…lets send it across to magazines… nalla kavithai illamal nam tamil vasagargal kastapadranga… U send these asap…
Y not make a book out of these?
Vignesh
December 3, 2008 இல் 6:46 மு.பகல்
Ah, Vignesh, First of all thanks a lot. This is really encouraging!
I havent come in terms with self regarding this. To be honest, i think blogging itself gives me the satisfaction. Buddy, i would definitely do something this time!
And ‘Nalla kavidhai illamal kashtapaduvadhu’ – do you mean the poems coming in the literary magazines
I dont understand any of them
:
Seriously, thanks buddy!
aravind
December 3, 2008 இல் 3:05 பிற்பகல்
சூப்பர் அரவிந்த்!! கவிதை ரொம்ப அழகா இருக்கு
Bhuvanesh
December 4, 2008 இல் 6:11 மு.பகல்
நீங்க ஒருத்தராவது கடவுளுக்கு நெறைய வேலை இருக்கும்ன்னு புரிஞ்சிகிட்டீங்களே..
Saravana Kumar MSK
December 5, 2008 இல் 2:15 மு.பகல்
கவிதை அருமை
Saravana Kumar MSK
December 5, 2008 இல் 2:15 மு.பகல்
Template is too good..
Saravana Kumar MSK
December 5, 2008 இல் 2:16 மு.பகல்
இத்தனைக்கும் நடுவில்
கவனிக்க முடிவதில்லை
பிரார்த்தனைகளுடன் மலையேறும் போது
கழுத்தில் மிதிபட்டு
இறக்கும் மக்களையும்
யாரோ தவற விட்ட பையை
எடுத்தோடி செல்லுகையில்
வெடித்துச் சிதறும் பிள்ளைகளையும்.
அருமையான வரிகள்… வாழ்த்துக்கள்
சந்தர்
December 5, 2008 இல் 8:18 மு.பகல்
@Bhuvanesh
நன்றி. நன்றி!!
@MSK,
அப்பாடா, கடைசியா ஒரு டெம்பலேட் உங்களுக்கும் எனக்கும் பிடிச்சா மாதிரி
வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி நண்பா.
@சந்தர்
நன்றி சந்தர். மீண்டும் வருக.
aravind
December 27, 2008 இல் 6:11 மு.பகல்
Thats unique. Kadavulukkaga kavalaipadavum orun manidhan inge pirandhayittru
.
Usha Sukumaran
ஜனவரி 7, 2009 இல் 2:50 பிற்பகல்