வாரணம் ஆயிரம்
அப்டேட் – ஏத்தி ஏத்தி பாடலை எழுதியவர் நா.முத்துகுமார். தாமரை அல்ல!
———————————————————————————————
ஒருவனின் வாழ்விலிருந்து ஆயிரம் புகைப்படங்கள் கொண்ட கலர்ஃபுல் ஆல்பம்.
டைட்டில் கார்டு அசத்துகிறது. டிஜிடல் ஜாலத்தில் சுழலும் இசைத்தட்டும், பிண்ணனியில் அமெச்சூர் குரல்கள் பாடும் ‘உறவுகள் தொடர்கதை’ தொடங்கி 80களின் பாடல்களின் கதம்பமும் செம ஜில்.
ப்ளாஷ்பேக்கில் பயணிக்கிறது முழுப்படமும். அப்பாவுக்கு மகன் தன் மனக்குரலில் எழுதும் குரல் கடிதம் தான் படம். சிறு வயது தொடங்கி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்பாவின் அரவணப்பை நினைத்துப் பார்ப்பதாக நகர்கிறது படம்.
முதல் பாதி ஐந்து பாடல்களோடு ஜாலி ராக்கெட்டாக பின்னி பெடலெடுக்கிறது. ஒவ்வொரு பாடலையும் பாப் வீடியோ போல பார்த்து பார்த்து படமெடுத்திருக்கிறார்கள். 70களின் ஸ்பென்ஸர் ப்ளாஸாவாகட்டும், ‘நெஞ்சுக்குள் பெய்திடும்’ பாட்டின் செட் ஆகட்டும் எல்லாமே வார்ம் வெல்கம் சொல்கின்றன.
சூர்யாவுக்கு கிட்டதட்ட இது ஒரு மினி தசாவதாரம். 17 வயது தொடங்கி 70 வயது வரை பல கால கட்டங்களின் தோற்றம் கொள்வதோடு குறை சொல்ல முடியாத மாற்றமும் கொள்கிறார். 17வயது சூர்யாவாக அவர் ஆனது ஆச்சர்யம். அபூர்வ சகோதரர்கள் ‘ராஜா’ போல இருக்கிறார் என நினைக்கும் போதே, அந்த கெட்டப்பில் ஆடிப் பாடுகிறார். கமல் கட்டவுட் முன்னால் ஆடிப்பாடுவது அவரது இலக்கை காட்டுகிறது.
இளைஞர் சூர்யா தான் பெஸ்ட். இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச இன்ஹிபிஷன்களையும் களைந்து காதல் காட்சிகளில் சிக்ஸர் சிக்ஸர் ஆக அடிக்கிறார். பெண்கள் தியேட்டரிலேயே மினி ரசிகை மன்றம் வைக்கிறார்கள். வெளிநாட்டுக்கு படிக்க போவதாக சமீரா சொல்லும் போது சூர்யா அடிக்கிற கமெண்ட்டில் தியேட்டர் அதிருகிறது.
தோல்வியில் குணமும் மனமும் குழம்பிய சூர்யா, அடுத்த பெஸ்ட். மேஜர் சூர்யாவிற்கு ரொம்ப வேலை இல்லை. சிக்ஸ் பேக் சும்மா ஷோ.
சமீரா ரெட்டி ரொம்ப எல்லாம் லிப் சிங்க்கில் படுத்தாமல் பாஸாகிறார். சூர்யா அப்படி வழிகிற அளவுக்கு அம்மணி அழகில்லையோ என்று தோன்றுகிறது. மும்பை நாயகிகளில் லேட்டஸ்ட் குரல், சின்மயி – சூப்பர்.
திய்வாவிற்கு கொடுக்கப்பட்ட டையலாக்கில் பாதி ட்ரெயிலரிலேயே காட்டிவிட்டார்கள். இன்னும் நிறைய வேலை கொடுத்திருந்தாலும் செவ்வனே செய்திருப்பார்.
சிம்ரனின் ‘முன் தினம் பார்த்தேனே’ அவருக்கு தரப்பட்ட ஸ்பெஷல் கிஃப்ட். ‘சேவலு’க்கு பிறகு இதிலும் கண்ணுக்கு கீழே கறுப்பு மை! கொடுத்த வேலையை பொறுப்பாக பாந்தமாக செய்கிறார். நடிப்பில் அத்தனை நுணுக்கம். கடைசி காட்சியில் சூர்யா ‘எடுத்துடலாமா’ என்று கேட்கும் போது, சிம்ரனின் ரியாக்ஷன் டாப் க்ளாஸ்!
படத்தின் மிகப்பெரிய மைனஸ், அப்பா சூர்யாவின் பாத்திரப்படைப்பு. ‘டாடி, டாடி’ என்று வெறும் வார்த்தைகளால் கோட்டை கட்ட பார்த்திருக்கிறார்கள். (ஒரே ஒரு தடவையாவது ‘அப்பா’ என்று சொல்லியிருக்கலாம். அது சரி, இது கௌதம் படமாச்சே!). ஆழம் சரியாக தெரியாத பள்ளத்தில் குதிக்க சொன்ன கதையாக சூர்யாவும் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார். நடிப்பு ஸோ ஸோ!
REC ஹீரோயின், மெக்கானிக்கல் இஞ்னியரிங் ஹீரோ, மலையாள ஸ்டைல் கல்யாணம் போன்றவை எல்லாம் ‘இது ஆட்டோபயாகிராஃபி தான்’ என்று சொன்னாலும், அப்பா-மகன் உறவு இத்தனை சூப்பர்ஃபீஷியலாக சொன்னது ரொம்ப உறுத்துகிறது. உயிரே இல்லாத பல காட்சிகள் சரியான போகன் வில்லா!
படத்தின் இரண்டாம் பாதி நிறைய வகை. சிலது முன் பாதியை அழகாக காம்பிளிமெண்ட் செய்யும். சிலது முன் பாதியின் குறைகளை மறக்கச் செய்யும். சிலது, முன் பாதியின் அத்தனை ப்ளஸ்களையும் அப்படியே முழுங்கி ஏப்பம் விடும். இந்தப் படத்தின் இரண்டாம் பாதி அப்படியே விழுங்கி ஏப்பம் விடுகிறது, பெரிதாக. டோட்டல் வாஷ் அவுட். யார் யாரையோ சூர்யா காப்பாற்றுகிறார். நம்மை காப்பாற்றத்தான் ஆளில்லை.
தோல்வியினால் வரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நல்ல விஷயத்திற்கு திருப்புங்கள் என்ற ஐடியா அழகு தான். ஆனால் அதற்காக யோசித்திருக்கிற காஷ்மீர் எபிஸோட் ரொம்ப டூ மச்!
பாடல்களை கேட்கும் போதெல்லாம் ஹாரிஸ்-கௌதம் நிஜமாகவே பிரிந்துவிட்டார்களா என்று அதிர்ச்சியாக இருக்கிறது. ஆக்ஷன் சேஸில் கடமும் மிருதங்கமும் வாசிப்பது ரொம்ப வித்தியாசம். தாமரைக்கு தனி பொக்கே.
ரத்னவேலு படத்தின் அழகான கண்கள். அப்படியே ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கிறது. இரண்டாம் பகுதியில் யாருமே வேலை செய்யவில்லை. எடிட்டர் உள்பட.
இயக்கம் ஏனோ பல இடங்களில் மந்தம். ஆஸ்பிட்டல் வாசலில் சூர்யாவும் அவர் யாரென்று தெரியாத சமீராவின் அப்பாவும் தனித்தனியாக அழுகிற காட்சியும், திவ்யா அறிமுகம் ஆகும் போது சூர்யா இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதும் (க்ளீஷே என்றாலும்) அழகு.
படத்துக்கு அழகாக தமிழில் தலைப்பு வைத்து விட்டு உள்ளே எக்கச்சக்க ஆங்கிலம். க்ளைமாக்ஸில் தலைப்பிற்கு சிம்ரன் சிறு குறிப்பு வரைவதற்குள் ஆடியன்ஸ் எஸ்கேப்.
வெறும் ஆல்பம் மட்டுமே!





solla vanthathi sollamal aanoo compermice sethu edutthathu poll ullathu.but suriaa @sameerareddy nice ooo nice combination.hots off harris@cemara man rathinam again hots off
ariaravind
நவம்பர் 18, 2008 இல் 7:18 மு.பகல்
[...] பல காட்சிகள் சரியான போகன் வில்லா Aravind @ [...]
உயிரே இல்லாத பல காட்சிகள் சரியான போகன் வில்லா « Vaaranam Aayiram: Tamil Cinema Reviews
நவம்பர் 18, 2008 இல் 11:21 மு.பகல்
//படத்துக்கு அழகாக தமிழில் தலைப்பு வைத்து விட்டு உள்ளே எக்கச்சக்க ஆங்கிலம். க்ளைமாக்ஸில் தலைப்பிற்கு சிம்ரன் சிறு குறிப்பு வரைவதற்குள் ஆடியன்ஸ் எஸ்கேப்.//
அமாம், சேட்டு வீட்டு கல்யாணத்துக்கு போனது போல் இருந்தது. படத்துடன் ஒன்ற முடியவில்லை.
நான் இடைவேளை வரை தான் தாக்குப்பிடித்தேன், கஷ்டப்பட்டு..
Karthikeyan G
மார்ச் 26, 2009 இல் 1:25 பிற்பகல்
Karthikeyan – நீங்க இன்னும் நிறைய முன்னேறனும்! அப்போதான் முழு படமும் பாக்க முடியும்!!
aravind
April 7, 2009 இல் 5:35 பிற்பகல்