ஜெயம்கொண்டான்
அடிதடிகளை கண்டு விலகும் சாதாரண மக்கள் பயம்கொண்டான்கள் இல்லை என்ற மெஸேஜோடு முதல் படத்தை தந்திருக்கிறார், மணிரத்ன மாணவன் இயக்குனர் கண்ணன். இந்த மெஸேஜோடு இன்ன பிற அயிட்டங்கள் அனைத்தையும் சேர்த்து (அயிட்டம் நம்பர் இல்லை, நன்றி!) கமர்ஷியல் காம்போ மீல்ஸ் ஆக்கியிருக்கிறார்.
முதல் காட்சியில் தடா புடா என்றெல்லாம் அதிரடிக்காமல், லேகாவும் வினயும் காருக்குள் லட்சியங்களை பகிர்ந்தபடி தொடங்குவது புதுசு. இண்ட்ரோ சாங் என்று ஆட்டம் இல்லாமல், பாட்டில் மக்களுக்கு வாழ்க்கை வாழ டிப்ஸ் கொடுப்பதும் ஓகே. ஆனால் பாட்டு கைகொடுக்கவில்லை சாமி!
மூன்றாவது ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டாலும், எல்லாரையும் விட அதிகம் ஸ்கோர் செய்வது லேகா வாஷிங்டன் தான்! பொண்ணுக்கு நடிப்பு நன்றாகவே வருகிறது. அம்மாவின் சாவுக்கு அழாமல் இருந்ப்பதில் துவங்கி க்ளைமாக்ஸில் வில்லனிடன் பயமில்லாமல் உட்கார்ந்திருப்பது வரை கேரக்டருக்கு ஏற்ற ஆட்டிட்ட்யூட் கொண்டிருக்கிறார்.
வினய் மீசை வளர்த்திருப்பது தான் பெரிய முன்னேற்றம். கொஞ்சம் சகஜமாக நடித்திருக்கிறார். அங்கங்கே ரசிக்க வைக்கிறார். ஆனாலும் பத்தாது பாஸ்!
வீட்டிற்கு வந்திருக்கும் வினயிடம் ‘ஐ லைக் ப்ளூ கலர்’ என்று இளித்தபடி கடலை போடுகிற பாவனாவின் அறிமுக காட்சி சின்ன சிரிப்பு. ஆனால் அதுக்கப்புறம் வோல்டேஜ் ட்ராப். க்ளைமாக்ஸில் சின்னதாக ஈர்க்கிறார். சொந்த குரலில் மதுரை பாஷையை முயன்றதற்கு ஒரு ஷொட்டு! ஏன்பா இந்த பொண்ண யாருமே கண்டுக்க மாட்டேங்கிறீங்க?
வில்லன் கிஷோர் கச்சிதம். அவர் மனைவியாக வருகிற ‘வட்டாரம்’ அதிசயா ரொம்பவே ஈர்க்கிறார். இயக்குனர்கள் கவனிக்க.
சந்தானம் சவுண்டை குறைத்து விட்டு அடக்க ஒடுக்கமாக காமெடி பண்ணியிருக்கிறார். சீரியஸ் காட்சியிலும் நை நை என நச்சரிப்பது, விரச வசனங்கள் வைத்தே வண்டியை ஓட்டுவதையெல்லாம் விடவில்லையென்றால், விவேக்கின் ஸீஸன் 2 நிச்சயம் அம்பேல்.
வத வத என கேரக்டர்கள். ஒவ்வொருவரும் ‘உள்ளேன் ஐயா’ சொல்வதற்குள்ளேயே திரைக்கதையின் டயர் பாதி தேய்ந்துவிடுகிறது! க்ளைமாக்ஸ் வரை பத்திரமாக போவாரா என்று பயம் ஏற்பட்டுவிடுகிறது.
‘அழகிய தமிழ் மகன்’ பாலசுப்ரமணியெம்மின் காமிரா, அழகிய காமிரா. மஞ்சள் இலைகள், சிகப்பு மிளகாய்கள் என செம ரிச், செம நச். தமிழ் திரையுலகம் இதுவரை போகாத லொக்கேஷன்களில் அழகழகான கனவுகளென பாடல்களை ஸ்பெஷலாக ஷூட் செய்திருந்தாலும், வித்யாசாகரின் மெட்டுகள் எல்லாம் செம சாதா.
குருநாதரின் சாயல் துணை நடிகர்கள் தேர்வில் தெரிகிறது. பாவனாவின் ‘இவங்க-தான்-எங்க ஹீரோயின்’ பாட்டில், எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கே என ஞாபக மேளங்கள் ‘டும் டும் டும்’ கொட்டுகின்றன. பின் பாதி சேஸ் எல்லாம் ஒரே ‘ரன்’!
இயக்கம் அங்கங்கே பளிச், சில இடங்களில் க்ரீச். லேகா கதாபாத்திரம் ,சோப்பு விளம்பர ப்ளாஷ்பேக், கார் கண்ணாடி புழுதியில் எழுதியபடி கணக்கு சொல்லித்தரும் ப்ரொஃபெஸர், இருபது லட்சம் தருவதாக வாக்கு கொடுக்கிற அந்த வினய்-பாவனா-லேகா ஷாட், க்ளைமாக்ஸில் பாவனா தனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டிக் கேட்பது எல்லாம் ரசனை.
க்ளைமாக்ஸில் சொல்கிற மெஸேஜுக்கு ஒலி குறைந்த கைதட்டல்கள். தாதா ஹீரோக்கள் வைத்து கதை பின்னுபவர்கள் முதலில் அதை MMS அனுப்பலாம்!
தொடர்ந்து ஃபேமிலி ப்ரெண்ட்லி க்ளீன் க்ரீன் படங்கள் தருகிற சத்ய ஜோதி பிலிம்ஸுக்கும் ஒரு ஷொட்டு.
அவ்வப்போது தட்டு தடுமாறினாலும், நம்பிக்கை தருகிறார் முதல் பட இயக்குனர். அடுத்த படத்தில் கலக்குவார் என நம்புவோமாக.
பெரிய குதிரைகள் எல்லாம் குப்புற விழுகிற காலத்தில், இது போன்ற சிம்பிள் ஸ்வீட் படங்கள் தாம் இம்மீடியட் ரிலீஃப்!

நானும் படத்தை பார்த்தேன்.. பரவா இல்லை.. மூன்று ஸ்டார்கள் கூட கொடுக்கலாம்..
Saravana Kumar MSK
செப்டம்பர் 5, 2008 இல் 5:14 பிற்பகல்
Hmmm… ppl are saying good things bout the movie, heard that it is far better than satyam and dhaam dhooom, analum pakanumnu thonala…. Pakalam..
And dude used ur kamarajar dialouge in my new post
…thanks 4 those lines:)
Vignesh
செப்டம்பர் 6, 2008 இல் 2:26 மு.பகல்
Thanks Saravana. ம்ம். கொடுக்கலாம். ஆனா நான் கொஞ்சம் ஸட்ரக்ட்
Thanks Vignesh. Dude, you have even copy’left’ to use it buddy!
aravind
செப்டம்பர் 8, 2008 இல் 4:02 பிற்பகல்
ungal vimarsana style asaththal
uma
செப்டம்பர் 10, 2008 இல் 5:56 மு.பகல்
Thanks Uma!!
aravind
செப்டம்பர் 18, 2008 இல் 2:39 பிற்பகல்