ட்ராஃபிக் – சில குறிப்புகள்
தொலைக்காட்சியில் வருகிற ராமாயணத் தொடரின் பாடல்களுக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் டிப்ரசிங்காக இருப்பது சென்னை நகரின் ட்ராபிக் தான். அதை பற்றிய ஒரு சின்ன முயற்சி. போக்குவரத்து நெரிசலின் நான்கு விதமான அம்சங்களை நான்கு கவிதைகளில் படம் பிடிக்க முயற்சித்துள்ளேன்.
—————————
விட்டு விட்டு பொருந்தின
மெதுவாய் முன்னகரும் காரின்
பின் சீட்டு கண்ணாடியில்
மூக்கு அழுந்திய
அந்த கரடி பொம்மையின் கண்களும்
என் கண்களும்.
இரண்டுக்கும் இடையே
ஒரு வெற்றுப் பார்வையென
சிக்கித் திணறியது ட்ராஃபிக்.
*****
அவரவர் காதுக்கு பாயும்
அவரவர் இசை
அவரவர் காற்றலையில்
அவரவர் பேச்சு
பெருநகரமே கலக்கும்
ஒரு பேரூர்வல ட்ராஃபிக்கில்
தனித்தனியாக
*****
அசந்த நேரம் பார்த்து
என் பெப்சியை தட்டி பறித்தாள்
அழுக்கு உடையுடன்
பிச்சை கேட்டு
அடம் பிடித்த சிறுமி.
திடீரென கருணை முகமாக மாறி
மூளை குழம்பிய
அந்த கிழிந்த ஆடை பெண்ணுக்கு
பெப்சியை தந்தாள்.
எங்கிருந்தோ வந்த
அந்தச் சிறுமியின் அம்மா
சிறுமியையும் என்னையும் சேர்த்து
வையத் தொடங்கினாள்
காரின் கண்ணாடியை ஏற்றியும்
ஒரே டிராபிக் இரைச்சல்.
கண்ணாடியை முட்டியபடி
மூன்று பேரின் முகமும்.
பச்சை சிக்னலும்
ஆக்சிலரேட்டரும் இல்லை
அந்த கொடுங்கனவில்.
*****
அவசரமாக சொல்லவேண்டியதை
அழைத்து சொல்லியாயிற்று
உன் கண்களை
நினைத்துப் பார்த்துக்
கொண்டுமாயிற்று.
உன் உள்ளங்கையின்
தண்மைக்கு காத்திருக்கும்
என் உள்ளங்கையின்
வெம்மை மட்டும் பெருகும்
இந்த ட்ராஃபிக் உஷ்ணத்தில்
M.Saravana Kumar
ஆகஸ்ட் 24, 2008 இல் 7:47 பிற்பகல்
நல்லா இருக்கு கவிதைகள்..
M.Saravana Kumar
ஆகஸ்ட் 24, 2008 இல் 7:48 பிற்பகல்
The ultimate tranquilness in the traffic!!!
Beautiful piece of writing!!
barath
ஆகஸ்ட் 25, 2008 இல் 9:57 மு.பகல்
@Saravana,
நன்றி சரவணா!
@Barath,
Had a big grin on my face on reading that! Thanks man!
aravind
ஆகஸ்ட் 25, 2008 இல் 4:35 பிற்பகல்