தேநீரில் சிநேகிதம் – 1
நானும் கொஞ்சம் செய்கிறேன் Random ramblings
- அலைபேசி காதலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என நிறைய பேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு மட்டுமே அப்படி, நமக்கல்ல என்று நான் புரிந்து கொண்டேன். எங்கள் பேருந்தில் தினமும் ஏறுகிற போதே அந்தப் பெண் அலைபேசியில் பேசியபடியே தான் ஏறுவாள். பேருந்து அலுவலகம் போய் சேரும் வரை பேச்சு. அவள் பேச்சுகள் இரைச்சலில் பெரும்பாலும் கேட்காது என்றாலும் திடீரென பேருந்து கிரீச்சென நின்று விடும் பொழுதுகளில் “இன்னிக்காச்சும் வருவியா” என்று அவள் கெஞ்சலாக (அல்லது) கொஞ்சலாக சொல்வது எல்லோர் காதிலும் விழும். பெரும்பாலான நாட்களில் அவள் எனக்கு பின் சீட்டில் அமர்வதால், தமிழ் திரைப்பட ஊடல் கூடல் வசனங்களை பிச்சை எடுக்க வைத்து விடும் அவளின் உணர்ச்சிகரமான வசனங்கள் எனக்கு ரொம்பவே கூச்சத்தை தருகின்றன. ஓட்டுனர் வானொலியைத் திருகி என்னை காப்பாற்ற முயற்சித்தாலும், வெகுண்டெழுந்து அந்தப் பெண் வானொலியின் வாயை மூட சொல்லிவிட்டு வருவது அவள் காதலின் அசைக்க முடியாத வலிமை என்றே கருத வேண்டியிருக்கிறது. அவளுக்கு பதிலுக்கு என்ன செய்வது என்று நான் யோசித்து வைத்திருக்கும் மூன்று விஷயங்கள். 1) அவள் தினமும் ஏறும் போது, “எங்கள் பேருந்தின் காதல் இளவரசியே வருக” என்று நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று கூவி கை தட்டி வரவேற்பது. 2) அவள் கொண்டிருக்கும் காதலை பற்றிய உருக்கமான கவிதை ஒன்றை தினமும் எழுதி கண்ணீர் மல்க பேருந்தில் வாசிப்பது 3) அவளைத் தவிர நடத்துனர் உள்ளிட்ட எல்லோரும் இறங்கி அலுவலகம் வரை பேருந்தை தள்ளிக் கொண்டே செல்வது.
- மதிய சாப்பாடு தந்த மந்தம் காரணமாக ஒரு அன்பர் தன் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய ஒரு மின்னஞ்சலை தவறுதலாக ஆயிரம் பேர் உள்ள ஒரு distibution லிஸ்டுக்கு அனுப்பிவிட்டார். இரண்டே நிமிடத்தில் அரண்டு மிரண்டு “தவறுக்கு வருந்துகிறேன்” என்றும் ஒரு மின்னஞ்சலை தட்டி விட்டார். அதற்கு பிறகு அரை மணி நேரத்திற்கு நடந்த கூத்து சொல்லி மாளாது. “இது ஏன் எனக்கு வந்தது” என்று கேட்டு ஒரு அன்பர் ஆயிரம் பேருக்கும் ஒரு பதில் அனுப்பினார். “அதானே! எனக்கு ஏன் வந்தது” என்று பின்னாலேயே ஒரு ஐம்பது பதில்கள். “சரி எப்படியோ, எனக்கு அனுப்பாதே” – அடுத்து. பின்னலாயே ஒரு ஐம்பது “ஆமாம் எனக்கும் அனுப்பாதே”கள். திடீரென ஒருவர் “எல்லோரும் வாயை மூடுங்கள்”. வரிசையாக ஒரு நூறு வாயை மூடுங்கள். இப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாரோ ஒருவர் சொன்னது shift+del ஆகி குப்பைக்கு போனது. எல்லோரும் அடங்குவதற்குள் ஐந்நூறு மின்னஞ்சல்கள் சேர்ந்தன. ஒரு பத்து நிமிடம் கழித்து, அதுவரை வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்த ஒருவர் தற்செயலாக மானிட்டரை பார்த்து, ஸ்க்ரால் ஸ்க்ரால் என ஸ்க்ராலி முதல் மின்னஞ்சலை தேடிப் பிடித்து ‘இதை ஏன் எனக்கு அனுப்பினாய் என தெரிந்து கொள்ளலாமா” என்று கேட்டபோது நான் தலையில் நான்கு முறை அடித்துக் கொண்டேன். தவறுதலாக அந்த மின்னஞ்சலை தட்டி முடியில் தெறித்து ஓடிய அந்த அன்பருக்காக ஒரு பன்ச் கவிதை

சபிக்கப்பட்ட அந்த நாளை
நானும் செய்து விட முடியுமா
Shift + del? - தற்செயலாக சந்தித்த அந்த பழைய குறுகிய கால நண்பர் கிடைத்த ரெண்டு நிமிட இடைவேளையிலும் வேலூர் தங்க கோயிலைப் பற்றி சொல்லிவிட்டு போனார். திருப்பதியை மிஞ்சி விடும் என்பது அவரின் திடமான நம்பிக்கை. இப்போதே கூட்டம் கூரையை பிய்த்துக் கொண்டு போவதாக சொன்னார். இன்னும் கொஞ்ச நாளிலேயே இன்ன நாளில் அங்கு போனால் விசேஷம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் பக்தி கட்டுக்கு அடங்காமல் போய்விடும். ஹிமாச்சல் பிரதேச மலைக் கோவிலில் நடந்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. எத்தனை குழந்தைகள்? எத்தனை தாய்மார்கள் “என்ன ஆனாலும் என கையை விட்டு விடாதே” என்று சொல்லியிருந்தார்களோ! நினைத்தாலே குலை நடுங்குகிறது.
- ஒரு வழியாக “ஜானே தூ யா ஜானே னா” பார்த்துவிட்டேன். மலையாளத்தில் “நிறம்” என தொடங்கிய கதை, தெலுங்கு, தமிழ் எனத் தாவி இப்போது இந்திக்கு வந்திருக்கிறது. இது போன்று ஒரே கதை பல மொழிப் படங்களாக எப்படி மாறுகிறது என்பதை கவனிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு மாநில மக்களின் சுவைக்கேற்ப கலவை மாறிக்கொண்டே இருக்கும். பொதுவாக எப்போதுமே நதிமூலப் படமே சிறப்பாக இருக்குமென சொல்வார்கள். ஆனால் இதில், ஹிந்திப் படமே சுவாரஸ்யமாக இருந்தது. கதையை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, ராஜ்புத் அப்பா, குதிரைச் சவாரி, பட்டாசாய் வெடிக்கும் இம்ரான் – ஜெனீலியா என படம் ஒட்டு மொத்தமாக கலர் மாறினாலும் ரசிக்கும்படி இருந்தது. ஒரு பிரமாதமான ப்ளஸ் துணை நடிகர்களை பிரமாதமாக பயன்படுத்தியது! (உப குறிப்பு – சில்ட்ரென் ஆஃப் ஹெவன் படத்தை “தாரே ஜாமீன் பார்” குழந்தை நட்சத்திரத்தை வைத்து ஹிந்தியில் எடுக்கப் போவதாக பிரியதர்ஷன் அறிவித்திருப்பது ஒரே சமயத்தில் மகிழ்ச்சியையும் கலவரத்தையும் தந்தது. )
- தொலைக்காட்சி பார்ப்பது ரொம்ப குறைந்து விட்டாலும், ரிமோட் தந்த மின்னல் இடைவெளிகளில் என கவனத்தை ஈர்த்த விஷயங்கள் – அட்டாச்டு பாத்ரூம், டிடாச்ட் ஃபேமலி என வார்த்தை விளையாட்டுடன் பிரமாத உடல் மொழியில் எதோ பஜன் மேடையில் பேசும் அந்த மாமி, நிஜமாகவே ‘அபி’ அமெரிக்காவில் தான் இருக்கிறாள் என நம்மை நம்ப வைக்க “கோலங்கள்” மெகா சீரியலில் செய்த காமெடிகள், ஒரு திறமைத் தேர்வில் நிராகரிக்கப் பட்டு மீண்டும் வாய்ப்பு தந்தற்கு தேம்பி தேம்பி அழுதபடி நன்றி சொல்லும் அந்த பெண், விதம் விதமாக உணவை மறுத்து விட்டு ஓடும் ஜூனியர் ஹார்லிக்ஸ் குழந்தைகள்.
- தங்க மகனாக தாயகம் திரும்பும் அபினவ் பிந்த்ராவிற்கு ஒரு ராயல் சல்யூட். சமத்துக் களையோடு அந்த பதக்கத்தை பிடித்தபடி நிற்கும் போது நமக்கே அத்தனை பூரிப்பு! அவர் மார்கெட் வேல்யு தோனிக்கு இணையானதாம். (அவரை எந்த விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்? – Gold winner!
)அடுத்த வருஷம் ஒரு அர்ஜுனா விருது, அப்புறம் ஒரு கேல் ரத்னாவோடு அவரை ஓரம் கட்டிவிடமாட்டார்கள் என்று நம்புவோமாக. அப்புறம் அவர் சோர்வடைந்து காணாமல் போய்விடுவார். நாற்பது வயதை தாண்டியதும் நம் நாட்டில் விளையாட்டுகளுக்கு மதிப்பில்லை என்று வெறுத்து “அபினவ் பிந்த்ரா பயிற்சி மையம்” துவங்கி புலம்பிக் கொண்டிருப்பார். இந்த வெற்றியை பற்றி பேசும் போது இலங்கைத் தொடரில் இந்தியா பெற்ற தோல்விக்கு மருந்து என்று சொன்னவர்களை பளாரென அறையலாம் என்று தோன்றியது. - நான் ரசித்த ஸ்டேட்மென்ட் – “உஸ்மான் சாலையையும் துரைசாமி சாலையையும் இணைக்கும் இந்த புதிய மேம்பாலம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக நிற்கிறது” – கலைஞர். “ஆடி மாத திருவிழாக்களின் காரணமாக பெண்கள் திரையரங்கிற்கு வரவில்லை. அது முடிந்ததும் கூட்டம் வரும்” – குசேலன் பட இயக்குனர் பி.வாசு.
\\“எங்கள் பேருந்தின் காதல் இளவரசியே வருக” என்று நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று கூவி கை தட்டி வரவேற்பது. 2) அவள் கொண்டிருக்கும் காதலை பற்றிய உருக்கமான கவிதை ஒன்றை தினமும் எழுதி கண்ணீர் மல்க பேருந்தில் வாசிப்பது 3) அவளைத் தவிர நடத்துனர் உள்ளிட்ட எல்லோரும் இறங்கி அலுவலகம் வரை பேருந்தை தள்ளிக் கொண்டே செல்வது.
\\
நாம ஆபீஸ் பஸ்ல ஏறினா, ஆபீஸ் போறதுக்கு முன்னாடி சொர்கத்தையே பாத்திடறேன்
ஹிம்ம் இனிமே நானும் இதையெல்லாம் கவனிக்கனும் போல ..போஸ்டுக்கு உதவுதே!
\\நாற்பது வயதை தாண்டியதும் நம் நாட்டில் விளையாட்டுகளுக்கு மதிப்பில்லை என்று வெறுத்து “அபினவ் பிந்த்ரா பயிற்சி மையம்” துவங்கி புலம்பிக் கொண்டிருப்பார். \\
\\“ஆடி மாத திருவிழாக்களின் காரணமாக பெண்கள் திரையரங்கிற்கு வரவில்லை. அது முடிந்ததும் கூட்டம் வரும்” – குசேலன் பட இயக்குனர் பி.வாசு. \\
ஹா ஹா ஹா
Ramya Ramani
ஆகஸ்ட் 17, 2008 இல் 12:42 மு.பகல்
Evalo?
Man enjoyed it till the last word! was laughing all the way!
hey and reg the mail thing r u speakin bout the one the DAG guy send reg Abhinav Bindra?? Seeing the mail n his reply i as like WTF??:))
” “உஸ்மான் சாலையையும் துரைசாமி சாலையையும் இணைக்கும் இந்த புதிய மேம்பாலம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக நிற்கிறது” – கலைஞர். “ஆடி மாத திருவிழாக்களின் காரணமாக பெண்கள் திரையரங்கிற்கு வரவில்லை. அது முடிந்ததும் கூட்டம் வரும்” – குசேலன் பட இயக்குனர் பி.வாசு”
Mudiyala!!Appapo ramble-ungo!!:)
Vignesh
ஆகஸ்ட் 17, 2008 இல் 8:03 மு.பகல்
Been reading ur blog, quite sometime, jannagal sila kuripuggal, Kelvi enna nirkum valaindhu nirukkum paambugal, Nadaiezhuthu were my favorites here, That mail thing was hilarious, well @ times you hapen to witness the best wooing sessions and romance offscreen… and P.vasu and karunanidhi’s statements… No words
barath
ஆகஸ்ட் 18, 2008 இல் 10:09 மு.பகல்
@Ramya,
Thanks Girl.
I have never slept in a bus journey (even night trips!), but of late i tend to sleep, dunno why!
@Vignesh,
Thanks man!
No, this was something about a search engine. I dont remember its name. Nee solradha paaththa niraiya per idha pozhappa vechukittae theriyaraanga pola
>>Appapo ramble-ungo!!
Uththaravu nanba!
@Barath,
You made my day! Glad to hear the posts you liked!
Thanks!!
aravind
ஆகஸ்ட் 18, 2008 இல் 1:59 பிற்பகல்
//எங்கள் பேருந்தின் காதல் இளவரசியே வருக” என்று நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று கூவி கை தட்டி வரவேற்பது. 2) அவள் கொண்டிருக்கும் காதலை பற்றிய உருக்கமான கவிதை ஒன்றை தினமும் எழுதி கண்ணீர் மல்க பேருந்தில் வாசிப்பது 3) அவளைத் தவிர நடத்துனர் உள்ளிட்ட எல்லோரும் இறங்கி அலுவலகம் வரை பேருந்தை தள்ளிக் கொண்டே செல்வது.//
கண்டிப்பா அந்த காதல் தேவதைக்கு செய்யுங்கள் உங்கள் மரியாதையை..
M.Saravana Kumar
ஆகஸ்ட் 19, 2008 இல் 9:06 பிற்பகல்
I wanna to say some thing to u aravind.. Is it any possible way to change the ARCHIVE as default BLOGGER Settings.. Like TREE structure.
Im not familiar with WORDPRESS.. Its really difficult to go through your older posts. And only one post per page.. Change that settings too. search inside ur wordpress settings..
M.Saravana Kumar
ஆகஸ்ட் 19, 2008 இல் 9:11 பிற்பகல்
இந்த பதிவு உங்களுடைய சிறப்பான பதிவு அல்ல..

உங்களிடமிருந்து எதிர்பார்பது “மஞ்சள் நிற பூக்கள்” மற்றும் “நீர் சொட்டும் குழாய்” பதிவு போன்றைவைகளை.
M.Saravana Kumar
ஆகஸ்ட் 19, 2008 இல் 9:13 பிற்பகல்
Saravana,
>>கண்டிப்பா அந்த காதல் தேவதைக்கு செய்யுங்கள் உங்கள் மரியாதையை..
I will look into the wordpress settings surely.
>>இந்த பதிவு உங்களுடைய சிறப்பான பதிவு அல்ல..
>>உங்களிடமிருந்து எதிர்பார்பது “மஞ்சள் நிற பூக்கள்” மற்றும் “நீர் சொட்டும் குழாய்” பதிவு போன்றைவைகளை.
நண்பரே, எழுதுவதில் எனக்கு எந்த கட்டுப்பாட்டையும் வைத்துக்கொள்வதில்லை. மரத்தடி போன்ற பதிவுகளை நான் மிகவும் விரும்பி எழுதுகிறேன் என்பதை மறுப்பதற்கில்லை. அதே அளவு நான் மற்ற பதிவுகளையும் விரும்பி எழுதுகிறேன். ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருப்பதால் (கலவரப்பட வேண்டாம்
) எல்லா வகையான எழுத்துக்களையும் எழுதி பார்க்க விரும்புகிறேன்.
தொடர்ந்து நீங்கள் அக்கறையோடு பல விஷயங்கள் சொல்வதில் எனக்கு நிரம்ப மகிழ்ச்சி.
“மரத்தடி” போன்ற பதிவுகள் தொடர்ந்து வரும்
aravind
ஆகஸ்ட் 20, 2008 இல் 4:46 மு.பகல்