சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

ரஜினிக்கு ஒரு கடிதம்

43 மறுமொழிகளுடன்

அன்புள்ள ரஜினிக்கு,

நான் உங்கள் ரசிகனல்ல. எதிரியுமல்ல.

எனக்கு மொழி வெறியெல்லாம் இல்லை. நான் துளு பேசுகிற மாநிலத்தில் பிறந்தால் துளுவே சிறந்த மொழி என்று சொல்லுவேன். அந்த அளவில் தான் மொழி வெறியை நான் பார்க்கிறேன். என்னை ஒரு நடுநிலையாளனாக உறுதிபடுத்திக்கொண்டே இதை எழுதுகிறேன்.

எல்லா பக்கங்களில் இருந்தும் அம்புகள் எய்யப்படுகின்றன. குசேலனுக்கு எந்த பாதிப்புமில்லை என்றும் செய்திகள் வருகின்றன. நீங்கள் வருத்தத்தில் இருப்பீர்களா மகிழ்ச்சியாக இருப்பீர்களா என்று என்னால் கணிக்க முடியவில்லை. சினிமாவில் நீங்கள் நல்லவராக வல்லவராக இருப்பதனால் நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் அப்படித்தான் என்று நம்புகிற முட்டாள் நானில்லை. உங்களை நெருங்கி பார்த்தவனுமில்லை.

என்னிடம் இருப்பவை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட  கேள்விகள் மட்டுமே.

நீங்கள் மன்னிப்பு கேட்டது தவறு என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்லப்போவதில்லை. நீங்கள் சொன்னது என்ன, திருத்தியது என்ன, கடைசியில் என்ன தான் சொல்கிறீர்கள் என்று எதுவும் புரியவில்லை. நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் வியாபாரமாக்கப்படுகிற நாட்டில் இருந்து கொண்டு இன்னும் தெளிவாக பேச உங்களால்  முடியவில்லையென்பது மடத்தனமாக உள்ளது.

பொது இடத்தில் ஒருவரை உதைப்பேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசிய மறுநாள் அது தவறென்று உங்களுக்கு தெரியவில்லை. அதற்கு அடுத்த நாளும் தெரியவில்லை. இத்தனை நாளாய் தெரியவில்லை. இப்போது திடீரென தெரிந்திருக்கிறது. அந்த மன்னிப்புக்காக வைக்கப்பட்ட பணயம் உங்கள் படத்தின் ரிலீஸ்.

௮) நீங்கள் உண்மையாகவே அப்படி பேசியதற்கு வருந்தியிருக்கிறீர்கள்.
ஆ) உங்களுக்கு உங்கள் படம் ரிலீஸ் ஆக வேண்டும்.

இந்த இரண்டு காரணங்களுக்கு மேல் எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை. சாதாராண கணித விதிகளின் படி கூட இரண்டுக்கும் ஐம்பது – ஐம்பது வாய்ப்புள்ளது!

காரணம் ௮) வாக இருந்திருந்தால், மன்னிப்பு கேட்டுவிட்டு, என் படம் அப்படி ஒன்றும் ரிலீஸ் ஆக வேண்டியதில்லை என்று சொல்லி நீங்களே ரிலீசை நிறுத்தியிருக்கலாம். ஒரு மாநிலத்தில் வரப்போகிற வருமானம் உங்களுக்கு கால் தூசு. உங்கள் குருவான தயாரிப்பாளார் உங்களை எண்ணி பெருமைப்பட்டிருப்பார் – வேறு வழியில்லை அவருக்கு. ஏற்கனவே உங்கள் படம் ஓடாத போது விநியோகஸ்தர்களுக்கு பணம் தந்த வள்ளல் தானே நீங்கள்? நீங்களே உங்கள் தயாரிப்பாளர்களுக்கு பணம் தந்திருக்கலாம். அப்படியும் இல்லாமல் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். சினிமா ரிலீஸ் இனி ஒரு ஆயுதம் ஆகி விடும். மிக்க நன்றி!

காரணம் ஆ) வாக இருப்பின் – அப்படி குசேலன் ரிலீஸ் ஆகி என்ன சாதிக்கப் போகிறது என்று யோசிக்கிறேன். இந்த காவியத்தை பார்க்காமல் கர்நாடக மக்கள் என்ன ஆகி விடுவார்களோ? நினைத்து பார்க்க சற்று பயமாகத் தான் இருக்கிறது.

மன்னிக்கவும். எப்படிப் பார்த்தாலும் உங்கள் சுயநலம் தான் தெரிகிறது.

இந்த பிரச்சினையின் வெற்றிக்கான அடையாளமாக இதை அவர்கள் மாற்றுகிற போது, நீங்களும் கூட சேர்ந்து கும்மி அடித்திருக்கிறீர்கள்.

ஒரு வேளை இது உங்கள் திரைப்படங்களில் வருகிற காட்சியாயிருந்தால் கே.எஸ்.ரவிக்குமார்களும் பி.வாசுக்களும் மோட்டுவளையை முட்டி முட்டி இப்படி ஒரு காட்சி வைத்திருப்பார் – மன்னிப்பு கேட்டவன் கோட்டைக்கு சென்று அடித்து துவம்சம் செய்து, “கண்ணா, நீ மன்னிச்சு தான் என் படம் ரிலீஸ் ஆகனும்னு கடியாது” என்று சொல்லியிருப்பீர். என்ன செய்வது, இது சினிமா இல்லையே?

நீங்கள் ஒரு மாபெரும் குழப்பவாதி. அதை குசேலன் படத்திலும் நிருபித்திருக்கிறீர்கள்.

“அரசியல் பற்றி ஏதோ ஒரு படத்தில் யாரோ எனக்காக எழுதிய வசனத்தை பேசினேன். அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டால் எப்படி?” என்று அர்த்தம் வருமாறு ஒரு முத்தை உதிர்த்திருப்பதாக நண்பன் சொன்னான்.

கூடவே “இது எப்படி இருக்கு” என்று சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்டேன். இல்லையென்றான்.

அட! அட! என்னவொரு வியாக்கியானம்? அரசியல் சர்ச்சையில் நாங்களே உங்களை சிக்க வைத்தது போலவும், நீங்கள் அப்படி ஒரு ஆசையற்றவர் போலவும்……

ஐயா, தொடர்ந்து நான்கு படங்களிலாவது காமிராவுக்குள் உங்கள் முகத்தை நீட்டியபடி விஷ்க் விஷ்க் வசனம் பேசினீர். படத்திற்கு ஒரு அரசியல்வாதியையாவது அடக்கி வைத்தீர்கள். உங்கள் நாயகிகள் உங்களை ஈஷிக்கொண்டு “என்னமோ திட்டம் இருக்கு” என்று விரல் ஆட்டி பாடினார்கள். “படை” என்று உங்கள் ரசிகர்களை பாடல்களில் விளித்தீர். நேற்று அங்கே, இன்று இங்கே, நாளை என்று வானம் நோக்கி கை காட்டி சிரித்தீர். “ராஜ்ஜியமா இமயமா” என்று எங்களை படாத பாடு படுத்தினீர். உங்கள் கதாபாத்திரத்தின் ஜாதகம் சாதாரண ஜாதகம் வேறு அல்ல.

கமல் தசாவதாரத்தில் நம்பி, அபூர்வ சகோதர்களில் அப்பு, நாயகனில் நாயக்கர். ஆனால் நீங்கள் எல்லாப் படத்தில் ரஜினி தானே?? அப்படித் தானே உங்கள் கதாபாத்திரங்களும் உருவாக்கப் படுகிறது? அதனால் தானே நீங்கள் உங்கள் பெர்சனல் பஞ்சாயத்திற்கு உங்கள் படங்களை உபயோகப்படுத்தினீர்? நீங்கள் எது பேசினாலும் ரஜினியின் குரலாக தானே பார்க்கப்படுகிறது? பார்க்க வைத்தீர்கள்?

இப்போது எங்களையே திருப்பி கேட்கிறீர்களே – ஐயா நாங்கள் முட்டாள் இல்லை.

ஐயா, நீங்கள் உங்களை மட்டுமே மோசமாக முன்னிலைபடுத்துகிற ஒரு ஆள். நீங்கள் ஒருவர் தான் நல்லவர். ஊரில் உங்களை விட்டால் வீரமான ஒரு ஆண்மகன் இல்லை, நாட்டை காக்க வந்தவர் என்றெல்லாம் காட்டுவீர். நீங்கள் கடவுள் என்று சொல்லவில்லையே தைவர, நீங்கள் தான் எல்லாம் என்றீர்கள். இப்படி தங்களை  காட்டிக்கொண்டவர்கள் அடுத்த சென்ற இடம் அரசியல் என்று உங்களுக்கு தெரியும். தெரிந்தும் அதை தொடர்ந்து செய்ய நீங்கள் மீசை வைத்த குழந்தையா?

“நான் அரசியலுக்கு வந்தால் என்ன? வரவில்லையென்றால் என்ன? உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்” என்றும் திருவாய் மலந்து உளறி இருக்கிறீர்கள்.

இரண்டு தேர்தலில் நீங்கள் யாரையோ எதிர்பதற்காக உங்கள் ரசிகர் மன்றங்கள் நாயாக பேயாக உழைத்தார்களே, போகிற வருகிற கட்சியெல்லாம் உபயோகப்படுத்தி அவர்களை குப்பையாகினார்களே, அப்போது உங்கள் இமயமலை பயணத்திற்கு பூப்பறித்துக் கொண்டிருந்தீர்களா? அப்போது அவர்களின் வாழ்க்கை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? அன்றிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களை எதிர்பார்க்க வைத்து விட்டு, இன்று அரசியல் உங்களுக்கு வராது என்று அமைதியாக இருக்கிறீர்.

அமைதியாக இருந்தால் கூட பராவாயில்லை, இப்படி அதியற்புதமாக பேசியிருக்கிறீர்கள். இது பொறுப்பின்மை மட்டுமல்ல, சந்தர்ப்பவாதமும் கயமைத்தனமும் கூட!

இதையெல்லாம் கூட நீங்கள் ஒரு படத்தில் நடிகர் அசோக்குமாருக்குள் ஒளிந்து கொண்டு தான் சொல்கிறீர்கள். அப்படியென்றால் இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா ஐயா? தமிழ் நாடு என் மூச்சு, ரசிகர்கள் ரத்தம், உயிர் கொடுப்பேன் என்றெல்லாம் சொன்னது ஐயா? அவையும் வசனம் தானா?

அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு நீங்கள் எங்கே பதில் சொல்லியிருக்கிறீர்? உங்கள் படத்தில்! அது என்ன என்ன என்று உங்கள் கடை நிலை ரசிகன் வரை கிடந்து தவித்து ஏகக் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இதை தெரிந்துகொள்ள வேண்டும்! “இந்த படத்தில் நான் ஹீரோ அல்ல” என்று அறிவித்தது போல இதையெல்லாம் அறிவித்திருக்கலாமே!

உங்கள் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கள் இதையெல்லாம் கவனிக்கத் தவறலாம். ஒரு கொடியோடு நீங்கள் துவக்கிய உங்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் இதை கவனிக்க தவற மாட்டார்கள்.

“அரசியலுக்கு வர எண்ணினேன், ஆனால் அந்த என்ணத்தை கை விட்டுவிட்டேன்” என்று ரஜினியாக வந்து சொன்னால், உங்களுக்கு சல்யூட் வைக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்! அது உங்கள் கடமை!

வணக்கம்!

Written by aravind

ஆகஸ்ட் 6, 2008 இல் 5:30 பிற்பகல்

பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

43 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. மிகவும் எச்சரிக்கையாக ஒவ்வொரு வரியையும் எழுதியிருக்கிறீர்கள். விகடனில் வெளிவந்த கடிதம் ஒரு கோணம் என்றால் இது இன்னொருகோணம். பொறுத்திருந்துபார்ப்போம் ரஜனியின் அடுத்த நடவடிக்கையை.

    தமிழன்

    ஆகஸ்ட் 6, 2008 இல் 6:18 பிற்பகல்

  2. Bang on target Aravind!!! I was seriously beginning to wonder if there’s one person who would call a spade a spade in the Rajni matter. Even ppl who are normally sane and talk impartially falter when it comes to the Superstar. For all his do-gooder and nyaayasthan image, on and off-screen, Rajni is as flawed as any other human being. that is not wrong but being blind to your own follies definitely is. No mincing words. Extremely well written!!!

    Milinta

    ஆகஸ்ட் 7, 2008 இல் 6:24 மு.பகல்

  3. Realy Great and True Words.
    தமிழ் நாடு என் மூச்சு, ரசிகர்கள் ரத்தம், உயிர் கொடுப்பேன் என்றெல்லாம் சொன்னது ஐயா? அவையும் வசனம் தானா?

    அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு நீங்கள் எங்கே பதில் சொல்லியிருக்கிறீர்? உங்கள் படத்தில்!

    Pirabuwin

    ஆகஸ்ட் 7, 2008 இல் 8:25 மு.பகல்

  4. Good

    Suresh kumar

    ஆகஸ்ட் 7, 2008 இல் 10:00 மு.பகல்

  5. மிகவும் எச்சரிக்கையாக ஒவ்வொரு வரியையும் எழுதியிருக்கிறீர்கள்.
    :)

    //நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் வியாபாரமாக்கப்படுகிற நாட்டில் இருந்து கொண்டு இன்னும் தெளிவாக பேச உங்களால் முடியவில்லையென்பது மடத்தனமாக உள்ளது.//
    ;)

    //மன்னிப்பு கேட்டவன் கோட்டைக்கு சென்று அடித்து துவம்சம் செய்து, “கண்ணா, நீ மன்னிச்சு தான் என் படம் ரிலீஸ் ஆகனும்னு கடியாது” என்று சொல்லியிருப்பீர். என்ன செய்வது, இது சினிமா இல்லையே?//

    கலக்கல் ;)

    M.Saravana Kumar

    ஆகஸ்ட் 7, 2008 இல் 12:23 பிற்பகல்

  6. உங்களுக்கு கருப்பு நிறம் பிடிக்கும் போல..

    Again Black Template.. :)

    M.Saravana Kumar

    ஆகஸ்ட் 7, 2008 இல் 12:24 பிற்பகல்

  7. @தமிழன்,

    எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை. நியாயமாக எழுத வேண்டுமென்றே கவனமாக இருந்தேன். வருகைக்கு நன்றி!

    @Milinta,

    Thanks Girl. As expected, you seem to agree :D

    @Pirabu,

    Thanks!! :)

    @Suresh,

    Thanks!! :)

    @Saravana,

    நன்றி நன்றி!!

    கருப்பு எனக்கு மிகவும் பிடித்த நிறம் நண்பரே. இதுவும் படிப்பதற்கு கடினமாக இருக்கிறதா?

    @

    aravind

    ஆகஸ்ட் 7, 2008 இல் 3:59 பிற்பகல்

  8. Good one Aravindan.
    சாதாரண ரசிகர்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது உங்கள் கடிதம்…

    kutty

    ஆகஸ்ட் 7, 2008 இல் 4:21 பிற்பகல்

  9. Its much better..

    M.Saravana Kumar

    ஆகஸ்ட் 7, 2008 இல் 5:27 பிற்பகல்

  10. Macha, hats of !!! இத தான் செருப்படினு சொல்லுவாங்க, i wish we could make MR.Rajinikanth stand in a stage and ask all these. குசேலன் என்ற “காவியத்தை” நானும் பார்த்து விட்டேன்! and in that particular scene where he speaks bout the politics and his indifference i lost my nerve… what the heck does he thinks and that too “நான் எப்ப வருவேன்னு எப்டி வருவேன்னு பேசுறதெல்லாம் யாரோ ஒரு வசனகர்த்தா எழுதின வசனம்”… how can he just distance himself as if he was a little child who just oppuchufied things.. he lost all the lil respect i hat for him, and write such things letters to all those ugly politicians too,

    Vignesh

    ஆகஸ்ட் 8, 2008 இல் 3:23 பிற்பகல்

  11. kalakkitteenga anna… rajiniya soukkaala adicha maadhiri irundhuchu.. andha sandharppavaadhiya nikka vechu narukku nu idhaiyellam kaekkanum.. plz make an effort 2 get dis published in any tamil magazine..

    Praveen Kumar S

    ஆகஸ்ட் 8, 2008 இல் 5:00 பிற்பகல்

  12. @Kutty,

    Thanks! If that it is true i am really glad. Errr, i guess you must have seen the kind of discussion that went in office blog ;)

    @Saravana,

    Fine then…

    @Vignesh,

    Thanks Machi! What is puzzling is, people are also indifferent to it! No one is asking questions! You saw Kuselan?? Edhaachum rendu ulaga cinema paaththu manasa thethiko ;)

    @Praveen,

    Thanks da… Actually In Kumudam Gnani has written a similar thing.. but me first :P

    aravind

    ஆகஸ்ட் 9, 2008 இல் 3:45 மு.பகல்

  13. Aravind,
    He doesnt understand what he says himself, leave alone the public. He says in one movie “Marry some one who loves you than some one you love”. The next movie he says “Better to marry some one you love than some one who loves you”. Enna puriyutha!!!!.

    One riddle though!. Do you know what his next movie is?. Its a sequel to “Baba”, called “Baba black sheep”. And we are the sheep’s, he the shepherd leading us to the butchers shop.

    Regards
    Raj

    irajorg

    ஆகஸ்ட் 9, 2008 இல் 5:25 மு.பகல்

  14. Raj,

    Ha ha! LOL on that “Baba Black sheep” ;) Thanks For visiting Raj!

    aravind

    ஆகஸ்ட் 9, 2008 இல் 5:10 பிற்பகல்

  15. When I saw the same dialogue in Kuselan movie,

    “அரசியல் பற்றி ஏதோ ஒரு படத்தில் யாரோ எனக்காக எழுதிய வசனத்தை பேசினேன். அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டால் எப்படி?”

    I felt the samething, am I a fool who is following and expecting whatever he says, atleast wont he come and do something good to the soceity and so on. But whatever happend in the recent past was so disgusting. And I am really sad that I was a big fan of Rajini. But he is doing his business right.

    Vasanth

    ஆகஸ்ட் 12, 2008 இல் 8:38 மு.பகல்

  16. Vasanth, glad that you agree. :D Thanks for visiting.

    Aravind

    ஆகஸ்ட் 13, 2008 இல் 4:02 மு.பகல்

  17. u said tat in his movies he spoke these dialogues, ” Kanna naan eppa varuven epdi varuven nu yaarukum theriyathu, aana vara vendiya nerathukku correct ah varuven ” u have pointed out these words and said tat ” wats ur answer to these dialogues ”

    அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு நீங்கள் எங்கே பதில் சொல்லியிருக்கிறீர்? உங்கள் படத்தில்! அது என்ன என்ன என்று உங்கள் கடை நிலை ரசிகன் வரை கிடந்து தவித்து ஏகக் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இதை தெரிந்துகொள்ள வேண்டும்! “இந்த படத்தில் நான் ஹீரோ அல்ல” என்று அறிவித்தது போல இதையெல்லாம் அறிவித்திருக்கலாமே!

    உங்கள் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கள் இதையெல்லாம் கவனிக்கத் தவறலாம். ஒரு கொடியோடு நீங்கள் துவக்கிய உங்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் இதை கவனிக்க தவற மாட்டார்கள்.

    But in the same movie he has uttered these words also ” Katchiyellam ippa namakku ethukku, kaalathin kaiyil athu irukku ” so u have to look into this also..

    when he has said that he ll cum to politics ?? answer me..

    wat bothers u if he asks sorry, or anything for his benefit ??

    have u lost anything ??
    absolutely no.

    and why do you pull Kamal inside this, கமல் தசாவதாரத்தில் நம்பி, அபூர்வ சகோதர்களில் அப்பு, நாயகனில் நாயக்கர். ஆனால் நீங்கள் எல்லாப் படத்தில் ரஜினி தானே?? what does this mean ??

    r u a kamal fanatic and against Rajni ?? Ur essay witout this Kamal utterences I would hav
    appreciated u..

    contnues…

    Pio

    ஆகஸ்ட் 13, 2008 இல் 6:34 மு.பகல்

  18. R u so childish to just go behind those dialogues in films ???

    then u hav to correct urself..

    Pio

    ஆகஸ்ட் 13, 2008 இல் 6:37 மு.பகல்

  19. R u so childish to just go behind those dialogues in films ???

    then u hav to correct urself..

    He s rite..those were just written by script writers and he just delivered tat..

    Pio

    ஆகஸ்ட் 13, 2008 இல் 6:38 மு.பகல்

  20. @Pio,

    >>But in the same movie he has uttered these words also ” Katchiyellam ippa namakku ethukku, kaalathin kaiyil athu irukku ” so u have to look into this also..

    Do you understand what is the entire idea or motive behind “Baba” movie? Or that “Raajiyama imayama?” song? or you have chosen to ignore them?

    >>when he has said that he ll cum to politics ?? answer me..

    I am just quoting what you have mentioned as answer. >>Kanna naan eppa varuven epdi varuven nu yaarukum theriyathu, aana vara vendiya nerathukku correct ah varuven

    >>wat bothers u if he asks sorry, or anything for his benefit ??

    It is not his personal matter, that i can just ignore it. It is an issue involving two states.

    >>and why do you pull Kamal inside this, கமல் தசாவதாரத்தில் நம்பி, அபூர்வ சகோதர்களில் அப்பு, நாயகனில் நாயக்கர். ஆனால் நீங்கள் எல்லாப் படத்தில் ரஜினி தானே?? what does this mean ??

    I was comparing the characterizations of their roles. Rajini’s characters are written in a way that it portrays his real self. That is why whatever he has spoken about politics was considered seriously.

    If you are looking for some Rajini vs Kamal discussion here, you have landed in a wrong place.

    >>

    R u so childish to just go behind those dialogues in films ???

    then u hav to correct urself..

    He s rite..those were just written by script writers and he just delivered tat..

    Will you agree, if i say, you are childish in believing that Rajini just mouthed those dialogues without any motive?

    Your “answer me” kinda attitude shows who is childish! Say “Lets discuss it” – am ready! Otherwise, i have to ignore such faceless comments.

    aravind

    ஆகஸ்ட் 13, 2008 இல் 5:21 பிற்பகல்

  21. இதை கட்டுரையை அவர் படித்தால் தலையல் ஆணி அடித்தது போல் இருக்கும்

    v.sakthivel

    ஆகஸ்ட் 14, 2008 இல் 3:17 மு.பகல்

  22. am satisfied n convinced wit de way u hv used Kamal in essay..
    I was comparing the characterizations of their roles
    Good.

    u said tat i have de given answer myself, tats y am askin

    R u so childish to just go behind those dialogues in films delivered by actors ???

    yes, der was no attitude in any of his films, just as punch dialogues and style statements
    he did tat…Nothing to look deep, discuss n argue …

    LETS DISCUSS …Continues..

    Pio

    ஆகஸ்ட் 14, 2008 இல் 4:44 மு.பகல்

  23. very well written.. i wish rajini reads it answers it..
    He cannot distance himself from those dialogues he has spoken on screen and i feel he is using his fans as his sheild

    maheswaran

    ஆகஸ்ட் 14, 2008 இல் 7:14 மு.பகல்

  24. கன்னடர்களிடம் கேட்காத மன்னிப்பைக் கேட்டுவிட்டதாக முடிவே செய்து கொண்டு இங்கு சிலர் ரஜினிக்கு எதிராக ஒரு இயக்கமே நடத்த ஆரம்பித்திருக்கும் இந்தத் தருணத்தில், i ll say a thing ..
    for u ppl..

    http://bp2.blogger.com/_OYNKoPImJ_k/SJNbWLbJBmI/AAAAAAAAByk/HEJweCXb6Vo/s1600-h/ReporterP.JPG

    All u people say tat He did that ( Apologised, as de media Highlighted ) for his own benefit, just to reap money from karnataka ,
    How many of u know this,

    இந்தப் படத்தை ரஜினி தமிழில் யாருக்காகச் செய்தாரோ, அவர்களிடம் இதுவரை சம்பளமாக ஒரு நயா பைசா கூட பெற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை இங்கே எத்தனைப் பேருக்குத் தெரியும்…

    செவன் ஆர்ட்ஸ் மற்றும் அஸ்வினி தத் ஆகிய இருவரிடமிருந்தும், தெலுங்குப் பதிப்புக்காக மட்டுமே அவர் சம்பளம் பெற்றுக் கொண்டார்.

    Just to get a fame in the lime light of Rajni all these media have worked and knit a nice net around Him. And tats wat ur also doin…What were u doing when M.Karunanidhi was simply sitting without taking any action, siting the election in Karnataka as reason and postponed the Hogenakkal Project. Now the election has finished and what is he doing ??!! and wat r u doing ??!!

    Pio

    ஆகஸ்ட் 14, 2008 இல் 7:56 மு.பகல்

  25. The thing is the medai highlighted this matter, and some were misdirected, as u ..
    even i misunderstood..but now i realise the truth…Its too late to clarify every1,
    no one ll be in a state to understand..so Kaalam Bathil sollum..

    U ll realise abt Rajni one day,

    Pio

    ஆகஸ்ட் 14, 2008 இல் 8:01 மு.பகல்

  26. @Sakthivel,

    Ha ha! Adhellaam namakku edhukku? ;) Thanks for visiting!

    @Pio,

    >>yes, der was no attitude in any of his films, just as punch dialogues and style statements
    he did tat…Nothing to look deep, discuss n argue …

    Looks like they have cut those dialogues from the movie. That means a lot.

    I am not all comfortable with your tone. All those capitalizations, ‘u’ ‘u ppl’ – they doesnt sound right. This is not a healthy argument. Thanks for all the inputs. If i really need any clarifications or ‘realizations’ about Rajini, i will contact you. Thanks for Visiting!

    aravind

    ஆகஸ்ட் 14, 2008 இல் 5:01 பிற்பகல்

  27. @Maheswaran,

    Completely agree. But looks like he is withdrawing those statements. Too late. Thanks for visiting!

    aravind

    ஆகஸ்ட் 14, 2008 இல் 5:02 பிற்பகல்

  28. why are u not ready to discuss wit me..

    do not fear..

    Pio

    ஆகஸ்ட் 16, 2008 இல் 5:48 மு.பகல்

  29. read the links i have given and then reply me….

    Pio

    ஆகஸ்ட் 16, 2008 இல் 5:50 மு.பகல்

  30. @Pio,

    >>do not fear..

    :lol: You are arguing under a fake screen name, and you are saying am afraid?

    >>why are u not ready to discuss wit me..

    If you didnt understand, please read my comments more than once!

    aravind

    ஆகஸ்ட் 16, 2008 இல் 11:44 மு.பகல்

  31. plz frend read the links i gave u…He did not ask apology to kannadigas..

    i believe this time am polite…

    Pio

    ஆகஸ்ட் 18, 2008 இல் 9:19 மு.பகல்

  32. Pio,

    I dont know whether you have understood the post. I understand it is ‘varuththam’. But how can one be ‘varuththam’ when one asks for apology. I think he wants to it to taken as apology in Karnataka, and just as ‘varuththam’ in TN. I am not OK with that. It seems like he wants to play it safe. Also, the timing does matter. Now, we can expect similar kind of movie-release-stalling in future. That is definitely worrying.

    aravind

    ஆகஸ்ட் 18, 2008 இல் 2:12 பிற்பகல்

  33. சிறந்த பதிவு,
    இதை படித்தலும் ரஜினி மாற மாட்டார்

    asramnath

    ஆகஸ்ட் 18, 2008 இல் 5:46 பிற்பகல்

  34. நன்றி ராம்நாத். :)

    aravind

    ஆகஸ்ட் 20, 2008 இல் 5:15 மு.பகல்

  35. Thalaivaaaaa! Soooooooooooooooooooooper!!!!!! :-)

    Vijay

    செப்டம்பர் 1, 2008 இல் 8:22 மு.பகல்

  36. Vijay!!!!!!!!! Yaara solreenga?? Ennaya Rajiniyaiya ;)

    Thanks for visiting!

    aravind

    செப்டம்பர் 1, 2008 இல் 4:53 பிற்பகல்

  37. Saaatshaath ungala than Aravind Sir!!!!!!!!!!! :-)

    Vijay

    செப்டம்பர் 2, 2008 இல் 6:01 பிற்பகல்

  38. Sir uh? ;) Thanks Buddy!!

    aravind

    செப்டம்பர் 8, 2008 இல் 4:03 பிற்பகல்

  39. அன்புள்ள அரவிந்த்,
    இது என் முதல் மறுமொழி! உங்களுக்கு மட்டும் இல்லை! இதற்குமுன் நான் யாருக்கும் மறுமொழி எழுதியது இல்லை! அதலால் இது தான் என் “அகர முதல” மறுமொழி. நான் 100% ரஜினி ரசிகன்! அதே போல் உங்கள் எழுத்துக்கும் ரசிகன்!

    நீங்கள் அதில் கேட்டமுதல் கேள்வி (அல்லது குற்றசாட்டு), “பொது இடத்தில் ஒருவரை உதைப்பேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசிய மறுநாள் அது தவறென்று உங்களுக்கு தெரியவில்லை. அதற்கு அடுத்த நாளும் தெரியவில்லை. இத்தனை நாளாய் தெரியவில்லை.”

    அவர் அதற்கு அடுத்த தினமே வருத்தம் தெரிவித்தார்! அப்போது அது அரசியல் ஆக்கப்படவில்லை! நீங்கள் சற்று கவனித்தால் உங்களுக்கு தெரியும், ரஜினி-ஐ பல அரசியல்வாதிகள் (அரசியல் தலைவர் என்று சொல்ல மனம் வர வில்லை) இலவசமாக விளம்பரம் பெற ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறார்கள்! ராமதாஸ் யார் என்று பலருக்கு தெரியாமல் இருந்த நேரத்தில் “பாபா” பிரச்சனை! நல்ல விளம்பரம் கிடைத்தது!

    கமல் தசாவதாரத்தில் நம்பி, அபூர்வ சகோதர்களில் அப்பு, நாயகனில் நாயக்கர். இதை மறுக்க முடியாது. மறுகவும் விரும்பவில்லை! அவருக்கு அது இமேஜ்!ஆனா கமல் நடிக்கும் படங்களில் வரும் முத்த காட்சியை பாருங்கள்! உங்களுக்கு கமல் தான் தெரிவார்! இதற்கு கமல் குற்றம் சொல்ல முடியாது! அவருக்கு இதுவும் இமேஜ்!
    அதே போல் ரஜினி அவர்களுக்கு “எல்லா ரஜினி படத்திலும் கதாநாயகனை ரஜினி-யா பார்க்கும் இமேஜ் ” இதற்கு அவரை குற்றம் சொல்லி பயன் இல்லை! அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள், பாடல்ஆசிரியர்கள், கதாசிரியர்கள், இன்னும் பல தொழில்நுட்ப கலைனர்கள் கொடுத்த பேட்டிகள், கட்டுரைகள் முலம் மக்கள் மனதில் அமைந்த ஒரு இமேஜ்!

    உங்கள் பல “ப்லோக்”-களால் நீங்கள் ஒலக சினிமா பறப்பவர் என்று அறிகிறேன்! வாழ்த்துக்கள்! ஆனால் இதை எனைவரும் ரசிக்க மாட்டர்கள்! நீங்கள் சொல்லும் படங்களை நான் குற்றம் சொல்லவில்லை! ஆனால் அப்படி பட்ட படங்கள் மட்டுமே வந்தால் திரைஅரங்கம் நிறையாது, திரைஅரங்கம் நிறையாமல் திரை துறை வாழ்வது கடினம்! நீங்கள் ரஜினி மேல் சும்மற்றயுள்ள பல குற்றங்கள் உலக சினிமாவை பார்த்து தமிழ் சினிமா மேல் உள்ள அடங்கம் ஆகா பார்க்கிறேன்!

    என் பார்வையில் கலை-ஐ வளர்க்க கமல்! கலைனர்களை வளர்க்க ரஜினி! இருவரும் நம்மக்கு வேண்டும்!

    கொசுறு: என் மறுமொழிக்கும் உங்கள் “ஸ்டார்’-ஐ(ரேடிங்) எதிர்பார்கிறேன்

    Bhuvanesh

    செப்டம்பர் 25, 2008 இல் 6:38 மு.பகல்

  40. >இதற்குமுன் நான் யாருக்கும் மறுமொழி எழுதியது இல்லை!

    இதற்கே முதலில் பல நன்றிகள்!

    aravind

    செப்டம்பர் 26, 2008 இல் 3:50 பிற்பகல்

  41. >இதற்குமுன் நான் யாருக்கும் மறுமொழி எழுதியது இல்லை!

    இதற்கே முதலில் பல நன்றிகள்!

    >>அதே போல் உங்கள் எழுத்துக்கும் ரசிகன்!

    மீண்டும் நன்றிகள்!! :D

    >இதற்குமுன் நான் யாருக்கும் மறுமொழி எழுதியது இல்லை!

    இதற்கே முதலில் பல நன்றிகள்!

    மீண்டும் ஒரு விவாதத்தை துவக்க விருப்பமில்லை என்றாலும், சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.

    >>ஆனால் நீங்கள் எல்லாப் படத்தில் ரஜினி தானே?? அப்படித் தானே உங்கள் கதாபாத்திரங்களும் உருவாக்கப் படுகிறது?

    இதை சரியான அர்த்தத்தில் தான் புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ரஜினி ரஜினியாக வருவதிலோ, அவரது இமேஜிலோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அப்படி செய்துவிட்டு, சில வசனங்களையும் பேசி விட்டு அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொவ்லதும், பின்னர் ‘ரசிகர்களின்’ ‘வேண்டுகோளுக்கு’ இணங்க அதை நீக்குவதும் எனக்கு துளியும் ஒப்புதல் இல்லை.

    >>அதே போல் ரஜினி அவர்களுக்கு “எல்லா ரஜினி படத்திலும் கதாநாயகனை ரஜினி-யா பார்க்கும் இமேஜ் ” இதற்கு அவரை குற்றம் சொல்லி பயன் இல்லை!

    அதை அவர் மாற்ற அவர் முயர்சிக்கதவரை எனக்கும் வேறு வழி இல்லை! ;)

    உலக சினிமாக்களை பற்றிய உங்கள் கருத்திலும் எனக்கு மறுமொழி இல்லை. நான் ரசிக்கிற உலக சினிமாக்களை தமிழில் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறும். எனக்கு ‘கலைப்படங்கள்’ என்று சொல்லப்படும் படங்களில் துளியும் ஆர்வமில்லை. நான் வித்தியாச சினிமாவின் ரசிகன் அவ்வளவே. விறுவிறுப்பு இல்லாத சினிமாக்களிலும் எனக்கு ஆர்வமில்லை.

    தமிழ் சினிமாவின் மேல் எனக்குள்ள காதல் நீங்கள் அறியாதது ஆச்சர்யமுமில்லை. அதை பற்றி நான் எழுதுவதில்லை. ஆனாலும், உலக சினிமாக்கள் ரசிக்கிற நான் ஏன் ‘ஜெயம்கொண்டான்’ படத்திற்கும் விமர்சனம் எழுதுகிறேன் என்று யோசித்து பாருங்கள். என் காதல் சினிமா மீது, தமிழோ வேறு மொழியோ. அதே சமயம் அபத்தக் களஞ்சியங்கள் எல்லாம் எனக்கு அலர்ஜி.

    >>கலைனர்களை வளர்க்க ரஜினி

    இதில் எனக்கு முழு சம்மதமில்லை. பாதி தான் சம்மதம். ரஜினியோடு இணையாமலே பல கலைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களை வளர்க்க ரஜினி என்று சொன்னால் நான் ஒப்புக்கொள்கிறேன். விநியோகஸ்தர்களுக்கு அவர்களின் படங்கள் அமுத சுரபி.

    உங்கள் மறுமொழிக்கு என் ரேட்டிங் – பத்து ஸ்டார் ஐந்துக்கு ;)

    உங்களின் முதல் மறுமொழியை பெற்றதில் எனக்கு பெருமை!! நன்றிகள் பல!!

    aravind

    செப்டம்பர் 26, 2008 இல் 4:12 பிற்பகல்

  42. நன்றி அரவிந்த்,
    நான் நீங்கள் தமிழ் சினிமாவின் எதிரி என்று நினைக்கவில்லை! ரஜினி அவர்களின் எதிரி என்றும் நினைக்கவில்லை! கமல் அவர்ரசிகன் என்று நினைக்கிறேன்! ரஜினி கலைனர்களை வளர்க்க என்பதை பாதி அமோதிததுக்கு நன்றி! ரஜினி ஒரு படம் நடித்தல் அது பல கோடிகளுக்கு வியாபாரம் அகும்! அதில் சில கோடிகள் கலைனர்களுக்கு போகும்! அது திரும்பவும் முதல் ஆகும்! வியாபாரம்! லாபம் அல்லது நஷ்டம்!

    >>>>>>>>>> விநியோகஸ்தர்களை வளர்க்க ரஜினி என்று சொன்னால் நான் ஒப்புக்கொள்கிறேன்

    விநியோகஸ்தர்களை மட்டும் இல்லை, திரை அரங்க முதலைகள், ஊழியர்கள், கான்டீன் ஊழியர்கள், தயாரிபளர்கள் போன்றவர்கள் பெரும் பயன் அடைவர்கர்கள்!

    ரஜினி ஒரு படம் அறிவித்தவுடம் “industry” ஊர்ச்கம் ஆகும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

    ரஜினி கமல் போன்றவர்களின் ஒரு படத்தில் வேலை செய்தால் கலைனர்களுக்கு அது “visting Card” போன்றது!

    >>>>>>>>>>>அதை அவர் மாற்ற அவர் முயர்சிக்கதவரை எனக்கும் வேறு வழி இல்லை!

    >>>>>>>>>> ரஜினி ரஜினியாக வருவதிலோ, அவரது இமேஜிலோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இந்த இரு வாக்கியங்களும் உள்ள முரண்பாட்டை உணர்கரிர்களா?

    >>>>>>> ஆனால் அப்படி செய்துவிட்டு, சில வசனங்களையும் பேசி விட்டு அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொவ்லதும், பின்னர் ‘ரசிகர்களின்’ ‘வேண்டுகோளுக்கு’ இணங்க அதை நீக்குவதும் எனக்கு துளியும் ஒப்புதல் இல்லை.
    இந்த வரிகளில் நான் உங்கள் கட்சி! இதை நான் எந்த காரணம் சொன்னாலும் , அது என்னகே சிரிப்பு வரும். ஆனால் இந்த தவறுக்காக அவரை எதோ ஒரு பாவி-ஐ போல் நடத்துவதில் என்னகு உடன்பாடு இல்லை!!

    >>>>>>>>>>> மீண்டும் ஒரு விவாதத்தை துவக்க விருப்பமில்லை என்றாலும், சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.
    இந்த ஆரோகியமான (நான் அப்படித்தான் நினைக்கிறேன்) விவாதத்தை உங்கள் பதிலுடன் முடித்து கொள்ளலாம்! இதை இன்னும் கிளர வேண்டாம் என்று நினைக்கிறேன்! நீங்களும் உங்கள் கருத்தை மற்றபோவதில்லை! நானும் தான்!

    முடிக்கும் முன் ஒரு விதண்டாவாதம்!

    >>>>>>இதற்குமுன் நான் யாருக்கும் மறுமொழி எழுதியது இல்லை!
    >>>>இதற்கே முதலில் பல நன்றிகள்!

    இதற்கு நீங்கள் ரஜினிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்! நீங்கள் அவரை பற்றி எழுதவில்லை என்றால் நான் மறுமொழி எழுதிருப்பது சந்தேகம் தான்! :)

    நன்றி!

    Bhuvanesh

    செப்டம்பர் 29, 2008 இல் 6:01 மு.பகல்

  43. >>

    >>இந்த இரு வாக்கியங்களும் உள்ள முரண்பாட்டை உணர்கரிர்களா?

    இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. அவரின் அந்த இமேஜினால் எனக்கு எந்த பிரச்சினைனை இல்லை. அப்படியான அந்த இமேஜ் தான் அவரை இது போன்ற சர்ச்சைகளில் அவரை சிக்க வைக்கிறது என்பதும் உண்மை தானே. அந்த இமேஜை பயன்படுத்தி அவர் தன் அரசியல் ஆயத்தங்களுக்காக மக்களின் நாடியை பார்க்க உபயோகிப்பார் எனில், அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    >>நீங்கள் அவரை பற்றி எழுதவில்லை என்றால் நான் மறுமொழி எழுதிருப்பது சந்தேகம் தான்

    கடைசில வெச்சீங்களே பன்ச்! எனக்கு நிஜமாகவே அதில் பிரச்சினையில்லை. ஒரு நண்பருடனான விவாதத்தில் நான் இப்படி குறிப்பிட்டிருந்தேன் – “எந்த இரு தமிழ்ர்களும், முன் பின் அறியாமலே, ஒரு சின்ன பந்தத்தை உருவாக்க சில கலைஞர்கள் இருக்கிறார்கள் (இன்னொரு உதாரணம் – இளையராஜா). அந்த வகையில் ரஜினியின் மீது எனக்கு பெருமதிப்பு உண்டு!” :D

    aravind

    செப்டம்பர் 29, 2008 இல் 3:36 பிற்பகல்


மறுமொழி இடுக