சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

தாரே ஜமீன் பர்

with 23 comments

அமீர் கான் தமிழ்ல “தாரே ஸமீன் பர்” படத்த தயாரிக்கப் போறதா நியூஸ் வருது. இதுக்காக முண்ணனி இயக்குனர்கள் கிட்ட பேசறதுக்காக ஒரு மீட்டிங் வெக்கறாரு. அதுல ஷாருக் கான், சல்மான் கான், அவரோட நாய், ப்ளாக், இம்ரான் கான் எல்லார பத்தி பேசி முடிச்சுட்டு டைரக்டர்ஸ் எல்லாரும் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால கதையோட ஒன் லைன் சொல்றாரு – “பையனுக்கு எழுத்தெல்லாம் ஆடுது” .உடனே டைட்டில் வெச்சு பிரமாதமா கதை பிடிக்கிறாங்க.

 

 

டிஸ்லெக்ஸியன் (ஷங்கர்):

விக்ரமோட தங்கச்சிக்கு டிஸ்லெக்ஸியா. ரெண்டு பேரும் ரிக் ஷால வரும் போது, தங்கச்சி எழுதின எழுத்து ஆடோ ஆடுனு ஆடி, ரிக் ஷாவும் ஆடி(க்ராஃபிக்ஸ் ப்ளீஸ்) கீழே விழுந்து ஷாக் அடிச்சு செத்து போயிடறா. விக்ரம் மனசுல ஒரே குஷ்டமப்பா. மல்டிபிள் பெர்ஸ்னாலிட்டி டிஸார்டர் மகுடி வாசிக்க, டிஸ்லெக்ஸியாவ புறக்கணிக்கவங்கள எல்லாம் லிஸ்ட் போட்டு கொல்றாரு. பக்கத்து வீட்டு சதாவோட லவ் வேற. “அய்யங்காரு வீட்டு அக்கண்ணா”னு ரெண்டு பேரும் பிரம்மாண்ட பிரம்மாண்ட “ஆ” “இ” “உ” வோட டூயட் எல்லாம் பாடி முடிக்க, டாக்டர் நாசர் விக்ரமுக்கு டிஸ்லெக்ஸியானு சொல்றாரு. டாக்டருக்கு படிக்கிற சதா “அப்படினா என்ன டாக்டர்? ஆவி மாதிரியா டாக்டர்?”னு கேட்டு பேட்டி எடுக்குறாங்க. கடைசில எல்லா கார்பரேஷன் பைப்லயும் தண்ணி வந்துடுது, பஸ்ல சில்லறை கரெக்டா கொடுக்கறாங்க, கவர்மெண்ட் ஆஃபீஸ்ல எல்லா செக்கும் பாஸ் ஆகுது. சுபம்.

 

அ ஆ (அநியாயத்துக்கு ஆடுது) (எஸ்.ஜே.சூர்யா):

குட்வில் க்ளாமர் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல நமீதா தான் ப்ரின்ஸிபல். மாளவிகா டீச்சர். மும்தாஜ் ஆயா. எஸ்.ஜே.சூர்யா பகல்ல சின்ன பையனா ஸ்கூல்ல படிக்கிறாரு. நைட்ல சிம்ரனோட டான்ஸ் ஆடறாரு. சின்ன பையனுக்கு டிஸ்லெக்ஸியா. ஆடுது ஆனா ஆடலனு ஒரே டார்ச்சர். அம்மா தேவயானி திக்கி திக்கி அழறாங்க. கடைசில ப்ரின்ஸிபல், டீச்சர், ஆயா எல்லாம் சேந்து பையனுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வெக்கறாங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்ல? “தொட்டால் அ அலறும் தொடாமல் உ உறுமும்” பாட்டும், “காலையில் தினமும் கண் விழித்தால் எழுத்து ஆடும் சும்மா, அன்பென்றாலே அம்மா” பாட்டும் பயங்கர ஹிட் ஆகும்.

 

Calligraph (சேரன்):

இது செண்டிமெண்ட் ஆட்டம். சேரனோட அப்பா கஷ்டப்படறாரு. அம்மா கஷ்டபடறாங்க. அண்ணன் கஷ்டப்படறாரு. அக்கா கஷ்டப்படறாங்க. ஒரே கஷ்டம். நமக்கும் தான். சேரன் அழறாரு. பத்மபிரியா அழறாங்க. அப்பாவி அப்பா, அவருக்கு தான் டிஸ்லெக்ஸியா. பசங்கள கஷ்டப்பட்டு படிக்க வெச்சா அவங்க எழுதறத பாக்க முடியாம அப்பா துடிக்கிறாரு. “அவரவர் எழுத்தில் ஆயிரம் ஆயிரம் ஆட்டங்கள்” பாட்டு பேக்ரவுண்ட்ல பாட, சேரன் விதம் விதமா எழுதிகாட்டறாரு, ஆனா டிஸ்லெக்ஸியா பத்தி தெரியாம எல்லாரும் கஷ்டபடறாங்க. சாகறதுகுள்ள எப்படியாச்சும் பசங்களோட எழுத்த ஆடாம பாக்கணும்னு ஆசப்படறது தப்பா? கஷ்டபடறாங்க. அவ்ளோ தான். இன்னும் என்னும் வேணும்? கடைசில சேரன் அவங்க அப்பா பேர்ல “மாவட்ட டிஸ்லெக்சியா மறுவாழ்வு மையம்” துவக்கறாரு. 4 ½ ஹவர்ஸ் மூவி.

 

தாரே ‘ஜமீன்’ பர்: (கே.எஸ்.ரவிக்குமார்)

பரம்பரையிலயே யாருக்கும் இல்லாத எழுத்து ஆடற வியாதி சின்ன சரத்குமாருக்கு இருக்கிறது தெரிஞ்சதும் பொங்கி எழற விஜயகுமார் “ஊட்ட உட்டுபோட்டு ஒடற காதல் பண்ற பொண்ணும் பேப்பர உட்டு போட்டு ஆடற எழுத்த எழுதற பையனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லனு” திட்டி ஆச்சியோட அவர ஊர விட்டு ஒதுக்கி வெச்சிட்டு ஹார்ட் அட்டாக் ல அம்பேல். விஜயகுமார் “எண்றா”னா 1,2,3 னு எண்ணிபுடற இன்னொரு அண்ணன் சரத்குமார், அந்த தீர்ப்ப அப்படியே கொடி பிடிக்க, ஆச்சி கோயில்ல குடத்தோட உருள்றாங்க, நெஞ்சுல அடிச்சுட்டு அழு அழுனு அழறாங்க. குஷ்பூ, மீனா எல்லாம் குடும்பஸ்திரியா கம்முனு இருக்காங்க. பொன்னம்பலம், தம்பி சரத்குமார் கிட்ட உன் பரம்பரையே ஆடற கூத்து பரம்பர தானேனு சொல்லிபுட, ஒரே சண்ட மண்ட. கடைசில எல்லாரும் ஒண்ணு சேந்தப்புறம் சுபம்.

 

உன்னிடத்தில் Penஐ கொடுத்தேன்: (விக்ரமன்)

ரோஜாக்கு டிஸ்லெக்ஸியா. அப்பா யாருன்னு அம்மா சாகும் போது தான் தெரியுது. சித்தி கொடும தாங்காம தவிக்கிறப்ப கார்த்திக் ஹெல்ப் பண்றாரு – ஒரு Pen வாங்கி கொடுக்குறாரு. அத கெட்டியா பிடிச்சு எழுதி எழுதி ஒரே பாட்டுல எல்லாம் சரியாய்டுது. நடுல அஜித் ஃபாரின்லேர்ந்து ஃபவுண்டைன் பென் வாங்கிட்டு வரசொன்னதுக்கே ஆறு மாசம் யோசிக்க (ஃபவுண்டென் பென்னே ஃப்வுண்டென் பென்னே பார்த்தாயா), பால்பாயிண்ட் பென்னா இருந்தாலும் பாந்தமா இருக்கும்னு கார்த்திக்கையே கல்யாணம் பண்ணிக்கிறதா ஏதோ ஒரு மேடையில அழுதுகிட்டே அறிவிக்கிறாங்க. விக்ரமன் ஸ்பெஷல் வியாக்கியானங்கள் ஏராளம் – “எழுத்துங்கறது எறும்பு மாதிரி இருந்தா நமக்கு மட்டும் தான் தெரியும். எருமை மாதிரி இருந்தா ஊருக்கே தெரியும்” “படிப்புங்கிறது பல்லு மாதிரி – தேக்க தேக்க தான் விளங்கும்”. தனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தால எஸ்.ஏ.ராஜ்குமார் பிண்ணனி இசையில தா’லா’ட்டுறாரு.

 

அமீர் கான் ஆர் யு ரெடி?

Written by aravind

ஜூலை 22, 2008 இல் 4:46 பிற்பகல்

திரை, நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

23 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. :)

    உண்மையிலேயே வயிறு குலுங்கச் சிரிச்சுப் படிச்சேன் !!

  2. செம காமடி..
    :) ))

    எஸ்.ஜே.சூர்யா (அநியாயத்து ஆடுது) & சேரன் பகுதிகள் கலக்கல்..
    :)

    M.Saravana Kumar

    ஜூலை 22, 2008 இல் 8:18 பிற்பகல்

  3. அரவிந்த்!
    கலக்கிட்டேபா! செம காமெடி!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

    venkatramanan

    ஜூலை 23, 2008 இல் 12:41 மு.பகல்

  4. ரவி,

    மிக்க மகிழ்ச்சி! :D வருகைக்கு நன்றி!!

    நிமல்,

    :) :) :) ;) வருகைக்கு நன்றி!!

    சரவணா,

    நன்றி! சேரன் மேட்டர் கொஞ்சம் டவுட்ல தான் போட்டேன் – யாராச்சும் கண்டனம் சொல்லுவாங்களோன்னு ;)

    வெங்கட்,

    நன்றி நன்றி நன்றி! :D

    Aravind

    ஜூலை 23, 2008 இல் 4:15 மு.பகல்

  5. Michael madana kamarajan Partha poola Irunthadhu.

    vijay

    ஜூலை 23, 2008 இல் 4:17 மு.பகல்

  6. Thanks Vijay :D

    aravind

    ஜூலை 23, 2008 இல் 4:30 மு.பகல்

  7. ஹ ஹ ஹ ஹா!!!!! ஆபீஸ் டேபிள் அடியில ஒளிஞ்சு ஒளிஞ்சு வயிறு வலிக்க வலிக்க சிரிச்சேன்… செம போஸ்ட்! punch dialogue and songs highlight :) :) நீ damage பண்றதுக்கு taare zameen par தான் கெடச்சுதா??? மணி ரத்னம் style உம் பாலு மஹேந்திரா style உம் add பண்ணி இருந்தா இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன் ;)

    (எப்டியோ first time கஷ்டப்பட்டு தமிழ்(tanglish) ல type பண்ணி இருக்கேன். அப்பாடா!!!)

    Milinta

    ஜூலை 23, 2008 இல் 4:48 மு.பகல்

  8. great da… nalla karpanai….

    Comedy is wonderful…
    karpanai kuthurayai nalla oda viturukae..

    VALTHUKKAL….!!!!

    Vickram

    ஜூலை 23, 2008 இல் 5:52 மு.பகல்

  9. அருமை.

    Mohan Kumar Mohan Raj

    ஜூலை 23, 2008 இல் 7:08 மு.பகல்

  10. @Milinta,

    அட அட! தமிழ் மறுமொழி பிரமாதம்!! நன்றி நன்றி… அது என்னன்னா மணிரத்தினம் “ஆடுற எழுத்து”னு ஒரு படம் பத்தி என்கிட்டே சொன்னார். ஒரே இருட்டா இருந்துதா – எழுதும் போது மிஸ் பண்ணிட்டேன் ;)

    aravind

    ஜூலை 23, 2008 இல் 4:19 பிற்பகல்

  11. @Vikram,

    Nandri Nandri Nandri… un aLavukku pramaathama kalaaikkalae aana ;) Thanks for Visiting!!

    aravind

    ஜூலை 23, 2008 இல் 4:20 பிற்பகல்

  12. @Mohan,

    நன்றி! மறுமொழியும் அருமை ;)

    aravind

    ஜூலை 23, 2008 இல் 4:21 பிற்பகல்

  13. //Calligraph (சேரன்):
    4 ½ ஹவர்ஸ் மூவி.
    //

    வெரும் நல்லா இருந்ததுனு சொல்ல மனசில்ல. நல்லா சிரித்தேன்.

    bmurali80

    ஜூலை 23, 2008 இல் 7:00 பிற்பகல்

  14. முரளி,

    வெறும் நன்றி மட்டும் சொல்ல எனக்கு மட்டும் எப்படி மனசு வரும்? ;) நன்றிகள் பலப்பல! மீண்டும் வருக!

    aravind

    ஜூலை 24, 2008 இல் 2:57 பிற்பகல்

  15. நல்ல இருக்கு…எஸ்.ஜே.சூர்யா super!!
    என்ன இது தான் இந்த friday official blog-லயா?
    கலக்குங்க…

    kutty

    ஜூலை 24, 2008 இல் 4:12 பிற்பகல்

  16. கலக்கல்…

    நடராசன்

    ஜூலை 25, 2008 இல் 12:27 மு.பகல்

  17. நன்றி நடராசன். :D

    Aravindan

    ஜூலை 25, 2008 இல் 2:16 மு.பகல்

  18. என்னவோ காமெடி மாதிரி இருந்தாலும் , as the choice of film for the topic…is TZP

    the film was a remarkable one ,and Aamir has dealt the topic so well and also it invloves kids with a different ability

    ஏனோ ரசிக்க முடியவில்லை

    uma

    ஜூலை 25, 2008 இல் 6:14 மு.பகல்

  19. Uma,

    I am sorry to disagree. TZP might be a remarkable movie, no debates on that. But the spoof here is on our directors but not on the movie. I really wonder how you overlooked that. Thanks for visiting.

    Aravindan

    ஜூலை 26, 2008 இல் 4:30 பிற்பகல்

  20. ஹா ஹா ஹா இங்கேயுமா?? சூப்பர் ரசித்தேன் :) )

    Ramya Ramani

    ஜூலை 29, 2008 இல் 3:51 மு.பகல்

  21. Good sense of humor….

    mcmkarthikeyan

    ஜூலை 29, 2008 இல் 7:20 மு.பகல்

  22. Ramya,

    நன்றி நன்றி – ரெண்டு தடவ ரசிச்சதுக்கு! ;)

    Karthi,

    Thanks! :D

    Aravindan

    ஜூலை 29, 2008 இல் 4:22 பிற்பகல்


மறுமொழி இடுக