சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

ஜன்னல் – சில குறிப்புகள்

4 மறுமொழிகளுடன்

 
மழையில்
நனைய முடியாதவர்கள்
ஜன்னல் அருகே அமர்ந்தபடி
ஒட்டுக் கேட்கிறார்கள்
அதன் பாடலை.

——————————————

என் ஜன்னலில்
இந்த மேகம்
மீன்.
அடுத்த ஜன்னலில்
இதே மேகம்
முயல்?

——————————————

ஒரு அவசர சிறகசைப்பின்
படபடப்பை மட்டும்
பின்விட்டபடி
நொடியில் நிழலெனப் பறந்துவிடும்
ஜன்னல் மாறி வந்தமரும்
ஏதோ ஒரு பறவை.

——————————————

கொக்கிகள்
இடப்படாத ஜன்னல்கள்
படாரென
காற்றின் வழிக்கு
வீட்டை திறக்கும்!

——————————————

ஜன்னலை
திறக்கையிலெல்லாம்
கூடவே
திறந்து கொள்கிறது
மனதும்.

——————————————

புகைப்படம் – http://westfordcomp.com

Written by aravind

ஜூன் 19, 2008 இல் 3:33 பிற்பகல்

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. “ஒரு அவசர சிறகசைப்பின்
    படபடப்பை மட்டும்
    பின்விட்டபடி
    நொடியில் நிழலெனப் பறந்துவிடும்
    ஜன்னல் மாறி வந்தமரும்
    ஏதோ ஒரு பறவை.”

    “மழையில்
    நனைய முடியாதவர்கள்
    ஜன்னல் அருகே அமர்ந்தபடி
    ஒட்டுக் கேட்கிறார்கள்
    அதன் பாடலை.”

    அழகான கவிதைகள்.. :)

    M.Saravana Kumar

    ஜூன் 19, 2008 இல் 4:56 பிற்பகல்

  2. நன்றி நண்பரே! :D

    Aravindan

    ஜூன் 20, 2008 இல் 11:19 மு.பகல்

  3. காற்றின் வழிக்கு
    வீட்டை திறக்கும்!

    அருமையான வரிகள்
    பின்னிடீங்க அரவிந்தன் !!

    kutty

    ஜூன் 21, 2008 இல் 5:50 மு.பகல்

  4. Thanks Kutti!! :D

    Aravindan

    ஜூன் 24, 2008 இல் 6:39 மு.பகல்


மறுமொழி இடுக