சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

சுடர்களின் நடனம்

with 6 comments

மார்கோ அவ்வளவு சாதாரணமாக அழுபவன் அல்ல. ஒரு காதல் நிறைவேறாமல் போன பின்னும் அவன் அழவில்லை. லிடியாவைச் சந்தித்த சில நாட்களே ஆகிறது. அவள் காளைச் சண்டை வீராங்கனை. அபாயகரமான விதியுடன் கழிகிற ஒவ்வொரு நாளுடன் இருவருக்குள்ளான காதலும் பெருகுகிறது. நாளை பற்றியே நினைவே ஏதோ ஒரு பயத்தை தருகிறது. வீட்டில் பாம்பு புகுந்ததில் தொடங்கி எல்லாமே கெட்ட சகுணங்களாக தெரிகின்றன. ஒரு நல்ல நிலா இரவில் நண்பர்களுடன் அமர்ந்து அந்த கிட்டார் பாடகனின் பாடலை கேட்டுக்கொண்டிருக்கையில் மார்கோவிற்கு அழுகை வருகிறது, காரணம் தெரியாமல். பாடல் நெடுக அவன் கண்ணீர் சிந்தியபடியே இருக்கிறான்.

சமீப காலங்களில் நான் மிகவும் ரசித்த பாடலும் காட்சியும் பெட்ரோ அல்மோதவாரின் “Talk to her“ல் வருகிறது. அத்தனை அழகான பாடல். அந்தப் பாடலின் ஸ்பானிஷ் வரிகளை பொழிபெயர்க்க முயற்சிக்க தோன்றவில்லை. அந்தக் காட்சிக்கான பாடல் என்னுள்ளேயே இருப்பதாக தோன்றியது. அந்த காட்சிக்காக நான் எழுதியது, இந்தப் பாடல்.

——————————————

காற்றின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கும்
ஒற்றைப் படகென
இந்தச் சுடரை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

கைகள் நீளவில்லை ஏனோ தோன்றவில்லை
கண்ணில் நீருடன்
இந்தச் சுடரினை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

காற்றின் இசைப்படி
சுடர்களின் நடனம்

——————————————

உந்தன் கையினை இறுகப் பற்றிக்கொண்டேன்
முணுமுணுப்பிலே ஏதோ சொல்லிக்கொண்டேன்
எங்கோ தொலைவிலே கேட்ட அந்தப்பாடலின்
அடுத்த வரியை நானே எழுதிக்கொண்டேன்
துளி கண்ணீருடன் புன்னகைத்த
மற்றுமொரு பொழுதை
உன்னுடன் வாழ்ந்துகொண்டேன்
யாரின் விதிப்படி
நாளை நிகழும்
நீரின் விசைப்படியே
நதிகளும் நகரும்

——————————————–

அந்த இரவினில் கண்ட கெட்டக்கனவிலே
கைகள் நழுவிட நான் விட்டது என்ன?
வந்த வழியினில் திரும்ப சென்றுவிடவே
மீண்டும் தோன்றிட ஒரு காரணம் என்ன?
நீ கேள்வியுடன் சுண்டிவிட்ட
நாணயத்தின் விடையை
என்னுடனே வைத்துக்கொண்டேன்
யாரின் விதிப்படி
நாளை நிகழும்
காற்றின் இசைப்படியே
சுடர்களின் நடனம்

——————————————–

Written by aravind

மே 20, 2008 இல் 4:11 மு.பகல்

6 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Reading such amazing poetry and writing, i desperately want to start blogging in thamizh too.. but don’t know how to use thamizh font properly.. should learn…
    good one as usual…
    // உந்தன் கையினை இறுகப் பற்றிக்கொண்டேன்
    முணுமுணுப்பிலே ஏதோ சொல்லிக்கொண்டேன்
    எங்கோ தொலைவிலே கேட்ட அந்தப்பாடலின்
    அடுத்த வரியை நானே எழுதிக்கொண்டேன்

    Soooper!!!

    Milinta

    மே 21, 2008 இல் 7:16 மு.பகல்

  2. ‘Milinta இது கூறியுள்ளது’
    hey yena un blog yenna ‘adhu’ ‘idhu’ nu respect ilaama treat panudhu?? I thought only people didnt respect me. Even ur blog doesn’t?? lol!

    Milinta

    மே 21, 2008 இல் 7:18 மு.பகல்

  3. @Milinta,

    Thank you!! Expecting your tamil blog… typing is very simple… try Google’s Indic Transliteration.

    >>hey yena un blog yenna ‘adhu’ ‘idhu’ nu respect ilaama treat
    panudhu??

    :lol: Ha ha ha!! Same treatment for me too ;)

  4. அருமை..

    வாழ்த்துக்கள்.

    Surya

    ஜனவரி 13, 2009 இல் 10:53 மு.பகல்

  5. நன்றி சூர்யா.

    உங்கள் வலைப்பூவில் Blogger-ஆக இருந்தால் மட்டுமே மறுமொழி இட முடியுமா? என்னால் இயலவில்லை.

    aravind

    ஜனவரி 15, 2009 இல் 12:43 பிற்பகல்

  6. அப்படி இருப்பதாக தெரியவில்லையே..?

    surya

    ஜனவரி 15, 2009 இல் 7:20 பிற்பகல்


மறுமொழி இடுக