சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

நீங்கள் கேட்டவை

with 2 comments

திருச்சியைச் சேர்ந்த ரமேஷுக்கு
என் வயதிருக்குமா?

வெள்ளமேடு காவேரி
நிச்சயம் அழகாகத் தான் இருப்பாள்
என்று நினைக்கிறேன்

சவுக்கார்பேட்டை திருநாவுக்கரசு
நடுவயதை தாண்டியவர்
என்று தோன்றுகிறது

நாங்கள் நால்வரும்
விரும்பிக் கேட்ட பாடல்
வானலைகளில் தவழ்ந்து வருவதாக
சொன்னாள் வானொலி தொகுப்பாளினி

திடீரென நெருக்கமாகி விட்டோம்
நாங்கள் நால்வரும்

அவர்கள் மூவரும்
கேட்டுக்கொண்டிருக்கிறார்களா
பாவம்
தெரியவில்லை

நால்வருக்கும் சேர்த்து
நானே கேட்கத் தயாரானேன்
காற்றலையில் மிதந்த வரும் பாடலை

Written by aravind

மே 6, 2008 இல் 5:21 மு.பகல்

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. வாசித்தேன்! ரசித்தேன்! மீண்டும் மீண்டும் வருவேன்! நன்றி!
    – கிரிஜா மணாளன், திருச்சி. தமிழ்நாடு.

  2. @கிரிஜா,

    மிக்க மகிழ்ச்சி! நன்றிகள் பல! மீண்டும் வருக! :)

    aravind

    மே 18, 2008 இல் 1:17 பிற்பகல்


மறுமொழி இடுக