சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

அபார்ட்மெண்ட் – சில குறிப்புகள்

with 5 comments

நாளெல்லாம்
ஆர்வத்துடன் எட்டிப்பார்த்துவிட்டு
மாலைக்குள்     வாடிப் போகிறது
பகலில் ஆளில்லாத ஃப்ளாட்களின்
பால்கனி தொட்டிச் செடி ரோஜாவும்
சில குழந்தைகளும்

******

வாயில் முழுதும் செருப்புகள்
தொலைக்காட்சி இரையாமல் பார்த்துக்கொண்டோம்
அனாவசியமாக சிரிக்கவில்லை
கதவைத் திறக்கையிலெல்லாம்
என்ன பாவனை கொள்வது எனத் தவித்தோம்
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம்
ஞாயிற்றுக்கிழமையில் இறந்து போன
பக்கத்து ஃப்ளாட்டு பெரியவர்
சாந்தி அடைந்து கொள்ளட்டும்

******

நான்கு நாட்கள்
கொடியில் கிடந்தும்
சோகமான பிசுபிசுப்பைத் தருகின்றன
சூரியனைப் பார்க்காமல்
உலர பயிற்றுவிக்கப்பட்ட
துணிமணிகள்

******

என் பூஜையறைக்கு
கீழேயும் மேலேயும்
கழிப்பறைகள் இருக்கலாம்
கான்க்ரீட் கடவுள்
காக்க காக்க

******

தனித்த பெரிய
சுதந்திரமான வீடுகளில்
குழந்தைகளின்
கண்ணாமூச்சி விளையாட்டு.
உயர்ந்த பெரிய
அப்பார்ட்மெண்ட்களில்
பெரியவர்களின்
கண்ணாமூச்சி விளையாட்டு.

Written by aravind

ஏப்ரல் 7, 2008 இல் 6:49 பிற்பகல்

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. good bbservation!very nice!
    kamala

    kalyanakamala

    ஏப்ரல் 8, 2008 இல் 10:45 மு.பகல்

  2. @Kamalamma,

    Thanks :)

    Aravindan

    ஏப்ரல் 8, 2008 இல் 6:29 பிற்பகல்

  3. good one! guess times have changed now.. I have very fond memories of living in apartments… children running arnd here n there… evening gossips… jolly ya irukum.. missed apartment life after shifting to a seperate house… ipo nelama ipdi ayiducha??? :)

    Milinta

    ஏப்ரல் 11, 2008 இல் 6:54 மு.பகல்

  4. Milinta,

    You know, i too dreamt of such a friendly lively apartment… but… i had to write this after moving the new house ;) Thanks….

    Aravindan

    ஏப்ரல் 11, 2008 இல் 2:06 பிற்பகல்

  5. பால்கனி தொட்டிச் செடி ரோஜாவும்
    sorry dear, rojakkalai vaada viduvathillai nam
    makkal. nandrakavae paramarikkirargal. meeri
    vaadi vittal migavum varunthuvaargal. Kaasu koduthu
    vaangiathayitrae

    PUGAZH

    மே 5, 2009 இல் 7:14 மு.பகல்


மறுமொழி இடுக