புதிய கடவுளின் ஏ.டி.எம்
எங்கள் தெருமுனையில்
வந்திருக்கிறது
புதிய கடவுளின்
சின்ன ஏ.டி.எம்
நமக்கு சேரவேண்டியதை
நமக்கே பொறுப்பாக தந்துவிடுவதாக
அதிகப்படியான புகழ்
இப்போதெல்லாம்
அவரின் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகள்
பற்றிய பேச்சைப் போல
பரவுகிறது தீ.
பக்கத்து தெரு கடவுளின்
திருப்பதிப்படாத ஏ.டி.எம்
வாடிக்கையாளர்கள்
அவ்வபோது இங்கு தென்படுகிறார்கள்
எங்களுக்கு கூட புலப்படாத
நல்ல விஷயங்களை
சுட்டிக்காட்டுகிறார்கள்
கார்டு போடாமலே
பணம் வந்ததாகக் கூட
பரவசப்படுகிறார்கள் சிலர்
அவசரத்தேவைக்கு
அலறியடித்து செல்கிற
அனைவருக்கும்
அவரவர் பொருளையே
புன்னகையுடன் வழங்குவதில்
அத்தனை பெருமை கடவுளுக்கு.
அவருக்கு தெருவெங்கும்
கிளைகள் உண்டு
hai
revathi
மார்ச் 13, 2008 இல் 6:42 மு.பகல்
//அவருக்கு தெருவெங்கும்
கிளைகள் உண்டு//
ரவிசங்கர்
மார்ச் 13, 2008 இல் 2:44 பிற்பகல்
hey as usual unusual! the way u make the most mundane of things sound so poetic is awesome… great read
Milinta
மார்ச் 14, 2008 இல் 4:42 மு.பகல்
Hey Milinta,
I am glad you liked it!
Thanks for dropping by..
Aravindan
மார்ச் 14, 2008 இல் 12:10 பிற்பகல்
@Ravi,
Aravindan
மார்ச் 20, 2008 இல் 5:00 மு.பகல்