ஹி ஹி
நம்ம வாழ்க்கையில் பண்ண தப்பெல்லாம் அப்பப்ப நினச்சு பாக்கணும்…. ஏன்னு அப்புறம் சொல்றேன்…. இப்போ முதல்ல ஃப்ளாஷ்பேக் கேளுங்க!
பத்து வருஷத்துக்கு முன்னாடி…. நான் ஏழாவது படிச்சிட்டிருக்கப்போ….. எனக்குள்ள ஒரு கவிஞன் இருக்கிறத கண்டுபிடிச்சேன்!!…. லட்டு பத்தி தான் நான் முதல் முதல்ல கவித எழுதினேன்…. அதுக்கப்புறம் தோசையப் பத்தி… அத படிச்சுட்டு என் அக்கா ரெண்டு பேரும் புல்லரிச்சு போய்டாங்க…. அவங்க தோழிகள் கிட்ட காமிச்சு புகழ்ந்ததால திடீர் ஸ்டார் ஆய்ட்டேன்….
ஆனா ஏனோ, எனக்குள்ள இருந்த கவிஞன் லீவ்ல போய்ட்டான்… ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல…. நாலு வருஷம்….. பதினொன்னாவது படிக்கற போது நான் ஒரு முடிவு பண்ணேன்…. போன வருஷம் விழுந்து விழுந்து படிச்சேன்… அடுத்த வருஷமும் விழுந்து விழுந்து படிக்கணும்… அதனால இந்த வருஷம் படிக்கவே கூடாது!! சரி ஓகே…. ஆனா என்ன பண்றது?? அப்போ தான் எனக்குள்ள இருந்த கவிஞன் முழிச்சிக்கிட்டான்….
தினம் தினம் கவிதை எழுதினேன்…. க்ளாஸ்ல எல்லோருக்கும் காமிப்பேன்… எல்லோரும் மிரண்டுட்டாங்க… அடடா… அற்புதம்… பிரமாதம்… பின்னிப் பெடலெடுக்கிறான் பையன்… அப்படினு எல்லோரும் பாராட்டினாங்க….
முத்திப் போய் ஒரு நாள் சாயந்திரம்…. என்ன நானே வைரமுத்துவா கற்பனை பண்ணிகிட்டு மாடிக்கு போனேன்…. வானம் இருந்தது…. ஏன் வானத்த பத்தி ஒரு கவிதை எழுதக்கூடாதுன்னு யோசிச்சேன்…. உடனே கவித கவித…..
அதுக்கு முன்னாடி…..”ட்றொய்ங்ங்ங்…” அப்படினா என்ன தெரியுமா?? தெரிஞ்சுக்குங்க…. நம்ம சிவாஜி நடிச்ச திருவிளையாடல் படத்துல ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீன் போகும் போது ஒரு சவுண்ட் குடுப்பாங்கல்ல…. அதான் “ட்றொய்ங்ங்ங்…” ஓகே??
நான்: (உணர்ச்சிவசப்பட்டு….) ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் வானமே!!
வானம் திடுக்கிட்டு: என்னடா??
நான்: (கவித மாதிரி படிங்க….)
இந்தியப்பெண் கூட ஒரு நாளைக்கு
இரு சேலை தான் அணிவாள்!!
ஆனால் நீயோ??
வானம்: என்னடா பினாத்துற??
நான்: நல்ல பகலில் நீலச்சேலை
ட்றொய்ங்ங்ங்…
நான்: மாலையிலே மஞ்சள் சேலை
ட்றொய்ங்ங்ங்…
நான்: போகப் போக சிவப்புச்சேலை
ட்றொய்ங்ங்ங்…
நான்: இரவினிலே கருப்புச்சேலை
ட்றொய்ங்ங்ங்…
நான்: இதெல்லாம் அணிகிறாயே?? உன் கணவன் என்ன செல்வச் சீமானோ??
வானம் : தூ!
எனக்குள் இருக்கும் கவிஞன் : வானம் துப்பியது! மழை!!
வானம் அப்புறம் ஒண்ணும் பேசல.
இப்படி ஒரு கவித எழுதி எல்லாருக்கும் காமிச்சேன்…. எல்லோரும் அழுதுட்டாங்க….
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா……
கருத்து :
1) நாம வாழ்க்கையிலே தப்பு பண்ணனும். அப்ப தான் ஏதாச்சும் கத்துக்க முடியும்.
2) நம்ம பண்ற தப்பு எப்படி இருக்கணும்னா, அத இப்போ நினைச்சு பாத்தா சிரிப்பு வரணும். அந்த மாதிரி தப்பு மட்டும் பண்ணனும்.
3) கூடுமானவரைக்கும் வானம் பூமி எல்லாம் இழுக்காதீங்க.
கொசுறு : ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் வெச்சீங்கனா, என்னோட கடந்த கால கவிதைகள இங்க அள்ளி விடறேன்!




நல்லாதான் எழுதியிருக்கீங்க!சவுன்ட் எஃபெக்ட் எல்லாம் விட்டுட்டீங்கன்னா கவிதை நல்லாத்தான் இரூகு!
அன்புடன் கமலா
kalyanakamala
நவம்பர் 18, 2007 இல் 7:13 மு.பகல்
நன்றி கமலா
aravind
நவம்பர் 18, 2007 இல் 12:54 பிற்பகல்
வாங்க வாங்க…கலக்குங்க…வாழ்த்துக்கள்
Baby Pavan
நவம்பர் 19, 2007 இல் 4:50 மு.பகல்
வரவேற்புக்கு மிக்க நன்றி பவன்
Aravindan
December 3, 2007 இல் 8:20 மு.பகல்
[...] சொசுறு : முந்தைய ஹி ஹி : 1 [...]
ஹி ஹி - 2 « சிறுமழை
December 23, 2007 இல் 7:16 மு.பகல்
நண்பரே உங்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் ; பின்னிடிங்க வாழ்த்துக்கள்
ANAND
செப்டம்பர் 17, 2008 இல் 1:26 பிற்பகல்
@Anand,
நன்றி நண்பரே!
aravind
செப்டம்பர் 18, 2008 இல் 2:40 பிற்பகல்