பழைய படம் – பத்து விஷயம்
அந்த காலத்து படமெல்லாம் என்ன superஆ இருந்துச்சு. எந்த பழைய படமும் இந்த பத்து விஷயம் இல்லாம இருக்காது!
10 – இண்ட்ரோ ஸீன் :
பழைய படத்தோட டைட்டில்ஸ் பாக்கலனா அது என்ன படம்னு கண்டுபிடிக்க அரைமணிநேரம் ஆகும்! எல்லா படமும் ஒரே மாதிரி தான் ஆரம்பிக்கும். ஒரு வீட்டுக்குள்ள காமிரா மெதுவா போகும். ஹீரோ/ஹீரோவினோட அப்பா நியூஸ்பேப்பர் படிச்சிட்டு இருப்பாரு. ஒரு கணக்குபிள்ளை வருவாரு(அடடே! கணக்குப்பிள்ளையா வாங்க வாங்க! காமாட்சி\மீனாட்சி\கமலா காபி கொண்டுவா). கணக்குப்பிள்ளை ஊர் திருவிழா விளைச்சல்னு எதையாவது பேசுவாரு. அம்மா வந்து காபி குடுப்பாங்க. காமிராவுக்கு வெளில வெயிட் பண்ற ஹீரோ/ஹீரோயின் கணக்குப்பிள்ளை போனதும் வந்து அப்பாகிட்ட பிக்னிக் போக பெர்மிஷன் கேட்பாங்க. அம்மா வேண்டாம்னு கண்டிப்பாங்க. அப்பா காசு கொடுத்து “செல்லம் குடுத்து கெடுக்கறதா” திட்டுவாங்கிப்பாரு. scene முடியும் போது வீணை சத்தம் backgroundல prominentஆ கேட்கும்!
9 – வில்லனின் ஸ்வீட் ஹார்ட்:
ஹீரோவுக்கு மட்டும் தான் ஜோடியா என்ன? நம்ம வில்லன் கும்பல்லயும் ஒரு பொண்ணு இருப்பாங்க. எப்பவும் வில்லன் பின்னாடி நின்னுட்டு அவர சொறிஞ்சிட்டே இருப்பாங்க. கண்ணு வலிக்கிற கலர்ல காஸ்ட்யூம் போடுவாங்க. அதுவும் ஷார்ட்ஸ் தான். அப்பப்ப துப்பாக்கி எல்லாம் பிடிப்பாங்க. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினும் இவங்களும் குழாயடி சண்டை மாதிரி உருண்டு புரண்டு சண்டை போடுவாங்க. இவங்க பேரு அநேகமா ரோஸி!
8 – அறிவாளி குழந்தைங்க:
இதுங்க தான் டார்ச்சரே. எல்லா படத்துலயும் இதுங்க நல்லா படிக்கும்க. க்ளாஸ்ல பதில் சொல்லும்க. டௌட் கேட்கும்க. பாரதியார் பாட்டு திருக்குறள்னு எதையாவது சொல்லிட்டே இருக்கும்க. பாட்டெல்லாம் பாடும்க. ஒவரா முகத்துல ஒரு தெய்வீக களை வேற தெரியும்!
7 – அத்தான்!!:
என்ன அழகான வார்த்தை. இதக் கேட்டு எத்தன நாளாச்சு! சும்மா குழஞ்சு குழஞ்சு கூப்பிடுவாங்க. கட்டை விரலால தரையில கோலமெல்லாம் போட்டு வெட்கப்பட்டு மூச்சுக்கு முன்னூறு தடவ… பாசமா அதிர்ச்சியா கோவமா.. எப்படியெல்லாமோ கூப்பிட்டாங்க. இப்போ இருக்கிற ஹீரோயின்ஸ்?? அவங்களப் பாத்து நாம தான் வெட்கப்படவேண்டியிருக்கு!!
6 -கார் ஓட்றா மாதிரி ஆக்ட் பண்றது:
ப்ரொடுயூசரோட அம்பாஸிடர் காரோட பின் சீட்டுல காமிராவை வெச்சிட்டு ரோட்ட தனியா எடுத்துருவாங்க மொதல்ல. அப்புறமா ஸ்டூடியோல ஒரு டம்மி கார்ல ஹீரோ/ஹீரோயின உட்கார வெச்சு ஷூட் பண்ணி ரெண்டயும் மிக்ஸ் பண்ணுவாங்க. இருந்தாலும் மனசு தளராம நம்ம ஹீரோல்லாம் மெய்யாலுமே காரோட்டறா மாதிரி நடிப்பாங்க. ஹீரோயின்ஸ் ஸ்டியரிங்க சும்மா திருப்பு திருப்புனு திருப்புவாங்க. சில பேரு குலுங்கி குலுங்கி தத்ரூபமா வேற நடிப்பாங்க!
5 – விசுவாசமான வேலைக்காரன:
ராமசாமி மாடசாமினு பேர் இருக்கிற வேலைக்காரங்க எல்லா படத்துலயும் இருந்தாங்க. அப்பப்ப sceneக்குள்ள சம்பந்தமேயில்லாம வந்து “நான் உங்க உப்ப தின்னு வளந்தவன் எசமான்”னு ஃபீல் பண்ணுவாங்க. சில படங்கள்ள அவங்க குழந்தையை எசமானுக்கு சின்ன வயசில்யே தத்துகுடுத்துட்டு பாசப்போராட்டத்துல தத்தளிப்பாங்க. ஓவர் எமோஷனல் ஆகி சில படத்துல எசமானுக்காக உயிரையே விட்டுருவாங்க. (இப்படியெல்லாம் காட்டி தான் இப்போல்லாம் நல்ல வேலைக்காரங்கல்லாம் கிடைக்கறதேயில்ல!)
4 – பூசணிக்கா உடைக்கிற கிளைமாக்ஸ:
அதாவது, அந்த படத்துல நடிச்ச ஆர்டிஸ்ட்ங்க ஜூனியர் ஆர்டிஸ்டுங்க சைல்ட் ஆர்டிஸ்டுங்கனு எல்லாரும் க்ளைமாக்ஸ்ல அட்டெண்டன்ஸ் போடுவாங்க. அப்படியே மொத்த யூனிட்டுக்கும் திருஷ்டி சுத்தி போடறாமாதிரி கும்பலா நிப்பாங்க. போலீஸ் கூட அப்ப கரெக்டா வரும்க!
3 -சின்ன வயசில பிரிஞ்சு/காணாம போறது:
இந்த இன்னொவேட்டிவ் கான்செப்ட் கண்டுபிடிக்கலனா நிறைய பழையபடம் வந்திருக்கவே வந்திருக்காது! இதுல நிறைய வெரைட்டி இருக்கு. குடும்பமே மொத்தமா தனி தனியா காணாம போறது, சின்ன பசங்க மட்டும் காணாமப் போறது, அண்ணன் தம்பி பிரியறது.. இப்படி நிறைய. பிரியறதுக்கு முன்னாடி ரொம்ப பொறுப்பா பாட்டெல்லாம் பாடத் தெரியுது, அட்ரஸ் கேட்டுக்க தெரியாதா???
2 -பேக்ரவுண்ட் மூஸிக்! (அதாம்பா – பிண்ணனி இசை!!):
சந்தோஷமான விஷயத்துக்கு வீணை, எழவு விழுந்தா ஒரு ‘பெப்பப்பப்பப்பப்பப்பேபேபேபே’, ஸ்டண்ட்னா டிஷ்யூம் டிஷ்யூம். ஸீன் மாறும் போது ஒரு ‘ட்ரொய்ய்ய்ய்ய்ய்ங்’. அவ்ளோ தான். so simple! இளையராஜா வரவரைக்கும் இதே ரெக்கார்ட்டையும் போட்டு போட்டு தேச்சாங்க.
1 – அம்மா:
அம்மா இல்லாத படமா?? அம்மா தான் எல்லாமே. ஆனா படத்தோட ஆரம்பத்துலயும் கடைசிலயும் மட்டும் தான் வருவாங்க. ஏதோ ஒரு புத்திசாலி டைரக்டர் வில்லனுக்கு ஹீரோவோட அம்மாவ கிட்நாப் பண்ண ஐடியா குடுத்து தொலச்சார்! அன்னிலேர்ந்து எல்லா படத்துலயும் சும்மா துளசி மாடத்த சுத்திட்டிருக்கிறவங்கள தூக்கிட்டு வந்து வயசான காலத்துல பாழடஞ்ச கொடௌன்ல கட்டி வெச்சு… என்ன கொடும சார் இது??
என்ன தான் கலாச்சாலும் பழைய படம் மாதிரி வருமா?? இப்போ வர சில படங்களுக்கு பழையபடங்க எவ்ளோவோ மேல்!!
கொசுறு:
அடுத்த பத்து இடத்துல என்னன்ன மேட்டர் இருந்தது தெரியுமா…..
தங்கச்சி
யாராச்சும் சாகறதுக்கு முன்னால சாமி விளக்கு அணையறது
மாயாண்டிங்கிற அடியாள்
ஹீரோயின்ஸ் பயத்துல ஆஆஆஆஆஆஆஆஆஆனு கத்துறது
சாகும் போது ரகசியம் சொல்றது
யாராச்சும் எழுதுன லெட்டர படிக்கும் போது அவங்க முகம் அதுல ரவுண்டா தெரியறது
செகண்ட் ஹீரோயின் மனசாட்சியே இல்லாம க்ளைமாக்ஸ்ல சடார்னு ஒரு சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டுக்கு கழுத்து நீட்றது
காச நோயால வயசானவங்க சாகறது
ஜமீண்தாருங்க
கொடுமைக்கார சித்திங்க.
ரவிசங்கர்
செப்டம்பர் 16, 2007 இல் 11:03 மு.பகல்
ரசித்து படித்து சிரித்தேன்.
இதில் பழைய படங்களில் காமெடி ஜோடிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் ஒன்று தற்போதய படங்களில் காட்டப்படும் குடும்பத்துக்கு ஒருத்தராவது பெக் அடிப்பது, தம் அடிப்பது கொலை செய்வது என்பது சகஜமாகிவிட்டது.
பழைய படங்களில் காமெடியன் கூட சுத்தமாக குளித்து நல்ல உடையணிந்து வருவார். இப்போது வெளிப்படையாகவே ‘மப்’பில் அண்டர்வேர் தெரிய வந்து வாய் குழற நடிக்கிறார்கள்.
பழைய படங்களைப்போலன்றி புதிய படங்களில் மனசாட்சி, நேர்மை, சத்தியம், உறவுகளின் புனிதம் ஆகியவை அறவே இருப்பதில்லை.
Srikanth
செப்டம்பர் 16, 2007 இல் 11:56 மு.பகல்
trademark சிரிப்பு வைத்திருக்கும் வில்லன், நாய்-குதிரை-பாம்பு முதலியவை வந்து காப்பாற்றும் climax, வில்லன் வடிவமைத்திருக்கும் வினோத குகை / கூண்டு set, (ஒரு swicth போட்டால் திறக்கும்) – இதையும் சேர்த்துக்கலாம். இன்னும் ஏதும் நினைவு வந்தா சொல்றேன்
ரவிசங்கர்
செப்டம்பர் 16, 2007 இல் 6:17 பிற்பகல்
பணக்கார ஹீரோயின், ஏழை ஹீரோ…
காலேஜ்/ஸ்கூலுக்குப் போகும் ஹீரோவோட தங்கச்சி/தம்பிங்க….
அந்த தம்பி தங்கச்சிக்காக தன்னோட லைஃப்பையே தியாகம் பண்ணி, சின்ன வயசுலயே கூலி வேலைக்குப் போகுற ஹீரோ….
ஒவ்வொரு வீட்லேயும் ஒரு துளசிமாடம், கிணறு…
அந்த கிணத்தடில நடக்குற காதல் காட்சிகள்…
….அந்த லிஸ்ட்ல இதையும் சேத்துக்கங்களேன்….
—செல்வா
njselvakumar
செப்டம்பர் 17, 2007 இல் 7:39 மு.பகல்
Highly refreshin post.. It urges me to write posts in Tamil ..
Keep up the good work… Really good post da..
BOB
செப்டம்பர் 23, 2007 இல் 7:48 மு.பகல்
@Srikanth,
மிகவும் சரி…. காமெடியன்கள் கௌரவமானவர்களாக இருந்தார்கள் அந்தக் கால படங்களில்… மறுமொழிக்கு மிக்க நன்றி.
பி.கு: உங்கள் பெயரின் முதலெழுத்தை(sri) எப்படி தமிழில் கொண்டு வருகிறீர்கள்?
@ரவிஷங்கர்
விநோத குகை! சூப்பர்! நினைத்த மாத்திரத்தில் ஈஸ்ட்மென் கலர் படம் மனதில் ஓடுகிறது! நன்றி.
@செல்வா
நன்றி… நன்றாக யோசித்திருக்கிறீர்கள்
@ ravi
i wish u write in tamil
Thanks a lot
aravind
செப்டம்பர் 24, 2007 இல் 12:54 பிற்பகல்
அருமையான போஸ்ட், அரவிந்த். இதை படிக்கும் போது, ஒரு ப்ளாக்-அண்ட்-வைட் திரைப்படமே மனசுல ஓடிச்சு!
Madhu
செப்டம்பர் 26, 2007 இல் 1:10 பிற்பகல்
நன்றி மது!
am happy
aravindan
செப்டம்பர் 27, 2007 இல் 6:12 மு.பகல்