உன்னாலே உன்னாலே
யாரோ ஒருவரை பார்க்கிறீர்கள். Love at first sight. காதல் பலிக்கிறது. ஆனால் பின்னால் தான் தெரிகிறது அவர் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர் என்று. என்ன செய்வீர்கள்?
ஜீவா இந்த knotஐ எடுத்துக்கொண்டிருக்கிறார். Love at first sightஐ கொண்டாடும் தமிழ் சினிமாவிற்கு இந்த கதை புதுசு! Good!
கார்த்திக்(வினய்) happy go lucky ஆசாமி. காதலில் கூட சீரியஸ்னஸ் இல்லாதவர். extrovert. ஜான்சி(சதா) introvert. well focussed. இருவரும் காதலில் விழுகிறார்கள். ஜான்சி தனக்கேற்றார் போல கார்த்திக்கை மாற்ற முயற்சிக்கிறார். பிரச்சினை துவங்குகிறது. பிரிகிறார்கள். ஆஸ்த்ரேலியாவில் மீண்டும் சந்திக்கிறார்கள். இருவருக்கும் நடுவே கார்த்திக்கை எந்த மாற்றங்களும் இல்லாமல் அவர் இருக்கிற வண்ணம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் தீபிகா(தனிஷா). simple climax!
பிரமாதமான scriptஐ கையில் எடுத்திருக்கிறார் ஜீவா. ஆனால் அதை காட்சிப்படுத்திய விதம் கொஞ்சம் ஏமாற்றமாயிருக்கிறது. முக்கிய காட்சிகளில் போதுமான அழுத்தமில்லை. முன்பாதியில் காதலர்களின் பிரச்சினையை விளக்க வைத்த காட்சிகளை விட காமெடி காட்சிகள் தான் மனசில் நிற்கின்றன. இதனாலேயே சதாவின் கதாபாத்திரம் எப்போதும் சண்டை போடுகிற லூசு போல தோன்றுவது துரதிர்ஷ்டம். என்னப்பா சண்டைப்போட்டுட்டே இருக்காங்க என்று சலிபாய் இருக்கிறது. ஜீவா கவனித்திருக்கலாம்.
காதலர்கள் பிரிவதில் படத்தை துவக்குவது பளிச் ஐடியா. Man vs Woman என்ற கண்ணோட்டத்தில் தான் எல்லா முன்பாதி காட்சிகளும்! கிட்டத்தட்ட தியேட்டரிலும் அதே தான். ஆண்களை காலும் வாரும் போது தியேட்டரில் பெண்கள் கை தட்டுவதும், பெண்களை கலாய்க்கும் போது தியேட்டரில் ஆண்கள் விசிலடிப்பதுமாக முன் பாதி ஜோர்!
ஆனால் படத்தின் முக்கிய குறையும் அதே தான். படம் நெடுக hasty generalisations! ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை படத்தில் யாராவது ஒருவர் “எல்லா பொண்ணுங்களும்…” “எல்லா பையன்களும்…” என்று டையலாக் அடிக்கிறார்கள். Over dose!
முதல் பாதி முழுக்க கலாட்டாவுக்கு சதாவும் ராஜீ சுந்தரமும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அம்மாஞ்சி முகத்துடன் ராஜூ அசத்தியிருக்கிறார்.
வினய்க்கு இது முதல் படம். அதனால் டான்ஸ் தெரியாததை கூட மன்னித்துவிடலாம். ஆனால் dialogue deliveryஐ நிச்சயம் கவனிக்க வேண்டும். வாயை நேராக வைத்து டையலாக் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்!
தமிழுக்கு வந்திருக்கிறார் கஜோலின் தங்கை தனிஷா. இவர் அறிமுகமாகிற காட்சியே அட்டகாசம். முதல் காட்சியில் பேசத் தொடங்கி கடைசிவரை நிறுத்தவே இல்லை. தமிழ் தெரியாமலே சமாளித்திருக்கிறார். Good show! ஆனால் பாதி மார்க் டப்பிங் கொடுத்த பாடகி சின்மயிக்குத்தான்!
சதா தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம். மனதை எப்போதும் பூட்டிவைத்துக்கொள்கிற, எல்லாவற்றிலும் perfectionயையும் உண்மையையும் எதிர்பார்க்கிற, சண்டைக்கோழி கதாபாத்திரம். இப்போதாவது ஒரு நல்ல ரோல் கொடுத்தார்களே என்ற சந்தோஷத்தில் கலக்கியிருக்கிறார். பின் பாதியில் subtle expressions அழகு. ஆளும் செம அழகாக இருக்கிறார். climaxல் அந்த கதாபாத்திரத்தின் தெளிவையும் practical முடிவையும் அழகாக முன்வைக்கிறார். வாழ்த்துக்கள்! cat walk நடையை மட்டும் கொஞ்சம் relax செய்துக்கொள்ளலாம்.
கோடை வெயிலுக்கு படம் குளு குளுவென இருக்கிறது. ஜீவாவின் காமிரா அத்தனை அழகு. படத்தில் காஸ்ட்யூமுக்கும் முக்கிய ரோல் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காஸ்ட்யூமை வைத்தே define செய்திருக்கிறார்கள். எழுத்தாளர் ராமக்கிருஷ்னனின் வசனங்கள் சில இடங்களில் பளிச்!
ராஜா ரஹ்மானுக்கு பிறகு ஹாரிஸ் தான் போல. Album of the year! பிண்ணணி இசையிலும் நல்ல ரசனையும் முன்னேற்றமும் தெரிகிறது. பாடல்களை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். வைகாசி நிலவே பாடலில் எதற்கு அத்தனை மெனக்கெடலும் Build-upம்??
தொடர்ந்து அழகான பெண் கதாபாத்திரங்களை பின்ன ஜீவா முயற்சிப்பது போல தெரிகிறது. 12B சிம்ரன் ,உள்ளம் கேட்குமே லைலாவை தொடர்ந்து இதில் சதா.
படம் ரொம்பவே இயல்பாகவும் இருக்கிறது. காதலில் விழுவதும், பிரிவதும் இவ்வளவு no-nense டைப்பாக இதுவரை யாரும் காட்டவேயில்லை. climaxல் இயக்குனர் குரல் ஒலிப்பதெல்லாம் இத்துப்போன technique!
அரிவாள் இல்லாமல் படம் எடுத்ததற்க்கே ஜீவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். kal ho na ho, dil chahtha hai டைப் feel good படம் எடுக்க முயன்றிருக்கிறார் ஜீவா. முழு திருப்தி இல்லையென்றாலும் பாராட்டலாம்!

NICE ONE,
Vidyasamana Vimmarchanam
Palanivelraja K
ஜூன் 8, 2007 இல் 11:56 மு.பகல்
@பழனிவேல்,
மிக்க நன்றி.
அரவிந்தன்.
aravind
ஜூன் 9, 2007 இல் 1:34 பிற்பகல்
Aravind………….
Very Good Comment. ennaku intha film romba pidichu irruku. but neenga sonna mathri konjam better-a shoot panni irrukalam. Vinai Super-a irrukar illaya? …….
Chinmaye voice than super……. music is very very Super……
Ambikadevi
ஆகஸ்ட் 7, 2007 இல் 11:51 மு.பகல்
@Ambika
thanks a lot
Aravindan
ஆகஸ்ட் 11, 2007 இல் 4:42 மு.பகல்