சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஆகஸ்ட் 2006

சுதந்திர தின கொண்டாட்டம்???!!!!

3 மறுமொழிகளுடன்

Flag

முதலில் எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! சுதந்திர தினம் வருகிறது என்று அறிந்தவுடன் போன வாரம் நம் எல்லோர் மனதிலும் இந்த கேள்விகள் எழுந்திருக்கும்……

1) சுதந்திர தினம் எந்த கிழமை?? சனியோ ஞாயிறோ இல்லையென்று மகிழ்ச்சியடைந்தோம். செவ்வாயென்று

தெரிந்ததும் திங்கட்கிழமை மட்டம் போட்டால் நாலு நாள் leave என்று சப்புக்கொட்டினோம்.(நான் திங்கட்கிழமை

college bunk!!)

2)இது எத்தனையாவது சுதந்திர தினம்?? எப்போதுமே ஒரு கும்பல் ஒன்று கூட்டியோ குறைத்தோ சொல்லும். இந்த

முறையும் அப்படியே!(59ஆ?? 60ஆ??)

3)T.V-யில் என்ன படம்??

முதலில் சுதந்திர தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். சூரியனுக்கு நன்றி செலுத்த ஒரு பண்டிகை கொண்டாடுவது போல, நாம் அனுபவிக்கும்
சுதந்திரத்தைப் (அதன் அருமையை அறியாத போதும்) போற்றியும் அதைப் பெற்றுத்தந்தவர்களைப் போற்றியும் இந்த தினத்தை கொண்டாடுவதில் தவறே இல்லை. இதில் எனக்கு அபத்தமாக அதைக் “கொண்டாடுவது” தான் தவறாகப்படுகிறது.

முதலில் நம் அரசு எப்படி கொண்டாடுகிறது? எல்லாருக்கும் அன்று சம்பளத்தோடு விடுமுறை கொடுத்தாயிற்று.(அது தான் பிரச்சினையே!! பேசாமல் எல்லோரும் நாட்டுக்காக O.T. செய்யலாமே!). செங்கோட்டையில் நம் பிரதமர் கொடியேற்றினார். அவர் பேசுவதற்காக 16 உரைகள் (speech) தயார் செய்யப்பட்டது. அதில் ஒன்றை வீரம் பொங்க வாசித்தார். (59-ஆவது முறையாக) “வறுமையை ஒழிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு முந்தைய தினம் மங்கலாய்த் தெரிந்த தூர்தர்ஷனில் நம் ஜனாதிபதி நாட்டில் பாதி பேருக்கு புரியாத ஆங்கிலத்தில் மூன்று
குறிக்கோள்களை முன்வைத்தார்.(அவை என்னெவென்று தெரியுமா??).போன முறை PPT காண்பித்து அசத்தியவர்
இந்த முறை குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு உறுதிமொழியைப் படித்தார். நம் தமிழகத்தில் கலைஞர் கொடியேற்றி என்ன பேசினார் என்பதை விட அவர் இன்று அறிவித்த “இலவச gas திட்டம்” பற்றியே நிறைய செய்திகள்!

பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் குட்டியாக வாழ்த்து சொல்லிவிட்டு நாளை விடுமுறை என்று சொல்லிவிட்டன. ஃபைலில் இருந்த காந்தி நேரு நேதாஜி ஃபோட்டோக்களுக்கு வாழ்வு வந்தது. இந்த முறை சற்று அதிகமாகவே இருந்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் பற்றியும் தீவிரவாதிகளின் மிரட்டல்களைப் பற்றியும் பத்தி பத்தியாக கதை பேசின.

தொலைக்காட்சிகள் வழக்கம் போல என்ன நாள் என்பதை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் சினிமா நிகழ்ச்சிகளை போட்டுத் தாக்கின. நம்பிக்கை நட்சத்திரம் நமீதா தன் ‘கலைச்சேவை’ பற்றி விரிவாக பேசினார்.
விஷால் நிஜமாகவே ‘திமிரு’ பிடித்தவரா, ஜெயம் ரவிக்கு something something உண்டா என்பதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். சன் டி.வி காலையில் “கட்டிபுடி கட்டிபுடிடா” படத்தையும் மாலையில் “தீப்பிடிக்க தீப்பிடிக்க” படத்தையும் ஒளிபரப்பியது. ஜெயா டி.வி டெல்லி வரை சிம்ரனைத் துரத்தி சென்று பேட்டியெடுத்தது. ராஜ் டி.வி தன் stock-ல் இருந்த ஒரு அர்ஜூன் படத்தை போட்டது. மாலையில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தை போட்டது (எத்தனையாவது தடவைங்கோ??). ஒரு டி.வி.யில் சூர்யாவை ஒரு ராணுவ கிராமத்திற்கு அழைத்து சென்று
அவர்களையும் சூர்யாவிடம் ஜோதிகாவை பற்றிக் கேட்க வைத்து புண்ணியம் கட்டிக்கொண்டது. மக்கள் சூர்யாவை
கவனித்தார்களா கிராமத்தை கவனித்தார்களா என்பது தான் கேள்வி!! விஜய் டி.வி மூன்று தியாகிகளை
GRANDMASTER நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவைத்து தன் தேச பக்தியை நிருபித்தது. (THE INDEPENDENCE
DAY திரைப்படத்தை dub செய்து ஒளிபரப்பாத வரை மகிழ்ச்சி!! lol!!) அரை மணி நேரம் ஒளிபரப்பான “எது சுதந்திரம்” என்ற நிகழ்ச்சி மட்டுமே உருப்படியான நிகழ்ச்சி. GOOD! ஹிந்தி channelகள் “மங்கல் பாண்டே” “ரங் தே பசந்தி” “மே ஹூன் னா” போன்ற படங்களைப் போட்டு escape ஆயின. தூர்தர்ஷனில் “ரோஜா” படம் இருந்திருக்காது என்று நம்புகிறேன்!! கோடி கோடியாக சம்பாதிக்கும் இவர்களால் எதாவது ஒரு தலைவரின் வாழ்க்கையை telefim-ஆக எடுக்க முடியாதா?? atleast documentry?? ஆரோக்கியாமான talk show?? ம்ஹூம்! விளம்பரம் கிடைக்காது. உண்மையில் அன்று ஆண்களுக்குத்தான் விடுதலை. எல்லா மெகா சீரியல்களும் cut!!:-)

TV9 என்ற தெலுங்கு news channel ஒரு பள்ளி மாணவியை ஒரு வயதான அரசியல்வாதியிடம்(அப்படியே நட்வர் சிங் போலவே இருந்தார்!!) பேச சொன்னது. அந்த மாணவி இந்தியாவில் அரசியில், அதற்குள் நுழைய தேவையான தைரியம் பற்றியும் கேட்டாள். குண்டர்களின் ஆதிக்கம் அரசியிலில் இருப்பதை பற்றி(YUVA திரைப்படத்தில் பார்த்தாக சொன்னாள்) கேள்வி கேட்டு கிழித்தாள். அசத்தலான நிகழ்ச்சி!
FMகள் வேறு தங்கள் பங்குக்கு கொண்டாடின. சூரியன் FM காதலர்களிடம் சுதந்திர தினத்தையொட்டி அவர்கள்
சமுதாயத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டது. அவர்கள் எல்லோரும் “காதலில் சமுத்துவம்” என்று lecture அடித்தார்கள். அவரவரின் பிரச்சனை அவரவர்க்கு! மிர்ச்சி வழக்கம் போல hot-ஆக இருந்தது. Radio City காந்திக்கு பிடித்து கதர் உடையா பட்டு உடையா இன்னும் எதோ ஒரு இழவா என்று கேட்டது. சரியான பதில் சொன்னவர்களுக்கு “திமிரு” பட டிக்கெட் இலவசம்!(தப்பாக நிறைய பேர் சொன்னார்கள்.)சூரியன் FM “60-ஆவது” சுதந்திர தினத்தை கொண்டாடியது! Radio City-யில் “இதயத்திலிருந்து”(8 PM to 10 PM) நிகழ்ச்சியை செய்த கோபிநாத்(விஜய் டி.வியின் “சிகரம் தொட்ட மனிதர்க”ளை compere செய்தவர்) சிறப்பாக செய்தார். Hats of!

பள்ளி மாணவர்கள் தாம் கொஞ்சம் உருப்படியாக கொண்டாடியிருப்பார்கள். கொடியேற்றி,சில மாணவர்கள் எதாவது பேசி,மிட்டாய் தின்று… குறைந்தபட்சம் அன்று “ஜன கண மன”-ஆவது பாடினார்கள். கல்லூரிகளில் தூங்கிக் கொண்டிருந்த hostel மாணவர்களை எழுப்பி நிற்க வைத்து எதோ ஒப்பேற்றியிருப்பார்கள். ALUMNI நடத்தினார்கள். SMS-ல் எல்லோரும் asterixலேயே கொடி காந்தி எல்லாம் வரைந்து வாழ்த்துக்கள் பரப்பினார்கள். Special ring tones, pictures எல்லாம் வெகு ஜோராக download ஆயின.

அன்று விடுதிக்கு பேருந்தில் திரும்பியபோது நான் கவனித்தது அதே சில்லறைச்சண்டை அதே மீன்காரப் பாட்டி அதே “குடி”மகன்(ஜெய்ஹிந்த் எல்லாம் சொன்னான்!) அதே கடைசி சீட்டு true lovers என எல்லாம் அதே அதே. தினசரி சோற்றுக்கு லோல்படுபவர்களிடம் சுதந்திரதின கொண்டாட்டங்கள் இருக்காது.ஆனால் யாருமில்லாத platform-ல் ஒரு சிறுமி கந்தல் துணியோடு தன் தம்பி மட்டும் பார்த்துகொண்டிருக்க சல்யூட் அடித்தபடி march செய்துகொண்டிருந்தது ஒரு மாதிரியாக இருந்தது.

இப்படி ஒரு சுதந்திரதின கொண்டாட்டம் அவசியமா என்று தெரியவில்லை.

எப்படித்தான் கொண்டாடலாம் என்று கேட்கிறீர்களா??

நான் சிறுவனாக இருந்த போது என் வீட்டிற்கு எதிரே இருந்த ஒரு தாத்தா(அவர் தியாகியா என்று நினைவில்லை) தன் சொந்த செலவில் கொடி மிட்டாய் எல்லாம் வாங்கி சிறுவர்களுக்கு தந்து யாராவது ஒரு தியாகியைப்பற்றி சொல்லிக்கொடுப்பார். அதனால் எதோ ஒரு சின்ன மகிழ்ச்சி அவருக்கு உண்டாகியிருக்க வேண்டும் இல்லையா?? ஏன் நாம் எதுவுமே செய்வதில்லை?? கொடி குத்திக்கொள்வது கூட நம்மால் முடியாமல் போகிறது. அதைக் குத்திகொண்டு
தான் தேசபற்றை நிலைநாட்டத்தேவையில்லை என்றாலும் வேறு ஏதாவது செய்யலாமே.

ஒவ்வொரு புத்தாண்டிற்கும்(New year தான்! தமிழ் புத்தாண்டை தான் நாம் மதிப்பதே இல்லையே) நம்மை நாமே சீர்படித்திக்கொள்ள திருத்திக்கொள்ள ஒரு resolution எடுத்துக்கொள்கிறோம் இல்லையா?? அதே போல் நம் நாட்டுக்கு உபயோகமாக எதாவது செய்யலாமே?

வெகுநாட்களுக்கு முன்னால் என் நண்பன் ஒருவன் தான் பொது இடத்தில் குப்பை போடுவதே இல்லை என்று சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். அதைப் பார்த்து நானும் inspireஆகி என்னால் முடிந்த வரை.. 80%
குப்பை போடாமல் (chocolate covers, paper cups,polythene covers etc etc..) அதை இன்னும் உக்கிரமாக 100% கடைபிடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.

என்ன சொல்கிறீர்கள். உங்களுக்கு எப்படி கொண்டாடலாம் என்று தோன்றுகிறது?? உங்களுக்குத் தோன்றுவதை comment செய்யுங்கள்(ஆங்கிலத்தில் செய்தாலும் நன்று).

Written by aravind

ஆகஸ்ட் 15, 2006 இல் 4:47 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது